இந்தியாவில் இருந்து பங்களாதேஷுக்கு 1000 மெகாவாட் மின்சார விநியோகம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  இந்தியா- பங்களாதேஷ் நாடுகளுக்கு இடையே உள்ள நல்லிணக்கத்தின் மற்றொரு முக்கிய அடையாளமாக, இந்தியா அக்டோபர் மாதம் 5 ஆம் தேதி முதல் பங்களாதேஷுக்கு புதிய ட்ரான்ஸ்மிஷன் லைன் மூலம் மின்சாரம் வழங்கும் திட்டத்தை துவங்கியுள்ளது.

  "இந்தியாவிலிருந்து பங்களாதேஷுக்கு ஒரு புதிய ட்ரான்ஸ்மிஷன் லைன் மூலம் மின்சாரம் விநியோகிக்கப்பட உள்ளது. தெற்காசியப் பகுதியில், இரு நாட்டுக்கிடையிலான மிக உயர்ந்த வோல்டேஜ் -உடன் கூடிய நேரடி மின்சார (ஹெஸ்விடிசி) இணைப்பு இதுவே." என்று இச்செயல் திட்டத்திற்கு நிதியதவி செய்துள்ள ஏஷியன் டெவலப்மென்ட் வங்கி (ஏடிபி) கடந்த வெள்ளியன்று தெரிவித்துள்ளது.

  என்டிபிசி

  கடந்த வருடம், மின் உற்பத்தி நிறுவனமான என்டிபிசியின் வர்த்தகப் பிரிவான வித்யுத் வியாபார் நிகாம் லிமிட்டட் மற்றும் பங்களாதேஷ் பவர் டெவலப்மென்ட் போர்டு (பிபிடிபி) ஆகியவை இரு நிறுவனங்களும் மின்சார கொள்முதல் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

  ட்ரான்ஸ்மிஷன் லைன்

  இந்த ட்ரான்ஸ்மிஷன் லைன் இந்தியாவின் கிழக்குப்புற மின் தொகுப்பை பங்களாதேஷின் மேற்குப்புற மின் தொகுப்புடன் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

  துணை மின்-நிலையம்

  "துணை மின்-நிலையத்தின் அமைப்புகளை சரிபார்க்கும் பணிகள் செப்டம்பர் மாதத்தின் தொடக்கத்திலிருந்தே நடைபெற்றுக் கொண்டிருந்தாலும், இந்த மின் இணைப்பு அக்டோபர் 5 ஆம் தேதியிலிருந்தே செயல்படத் துவங்கியது" என்று ஏடிபி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

  ஒப்பந்தம்..

  இரு நாட்டு அரசுகளுக்கிடையிலான ஒப்பந்தத்தின் அடிப்படையில் என்டிபிசி, பங்களாதேஷ் பவர் டெவலப்மன்ட் போர்டுக்கு நாளை முதல் மின்சாரம் வழங்கம் என்று 4ஆம் தேதி நடந்த இரு நாட்டு கூட்டத்தின் போது, பன்முக லெண்டராக விளங்கும் ஏடிபி தெரிவித்தது.

  1000 மெகாவாட் மின்சாரம்!!

  "இது 2013 நவம்பர் மாதம் முதல் 250 மெகாவாட் வரையில் உயர்த்தப்பட்டு, 2013 ஆம் வருட இறுதியில் கூடுதலாக 250 மெகாவாட் வரை வழங்கப்படும். இந்த செயல்திட்டம் சுமார் 1000 மெகாவாட் வரையிலான மின் பாய்வுகளை அனுமதிக்கும் வகையில் மேம்படுத்தப்படும்." என்றும் ஏடிபி தெரிவித்துள்ளது.

  குறைந்த விலையில் மின்சாரம்!!

  இந்த ஏற்பாடு, பங்களாதேஷுக்கு அந்நாட்டிலேயே அமைந்திருக்கும் வாடகை மின் நிலையங்களிலிருந்து வாங்குவதைக் காட்டிலும் இந்தியாவிலிருந்து குறைவான விலையில் மின்சாரத்தை வாங்கி பயன் பெற்றுக் கொள்ள உதவும் வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  India to starts power supply to Bangladesh

  Marking a key step in bilateral co-operation, India will start supplying electricity to Bangladesh from October 5, through the new transmission line between the two nations.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'