வீட்டு கடனுக்கான வட்டியை குறைத்தது எல்.ஐ.சி!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வீட்டு கடன் நிறுவனமான எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் (LIC HFL) வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை அக்டோபர் 15 (நேற்று) முதல் 0.25 சதவீதமாக குறைத்துள்ளதாக அறிவித்தது. இந்த புதிய வட்டி விகிதம் நவம்பர் 30 வரையே செல்லுபடியாகும். மேலும் செயல்பாடு கட்டணத்தை குறைந்த அளவு வசூல் செய்யும் நிறுவனம் எல்.ஐ.சி. நிறுவனம் மட்டும் தான் என்று ஒரு செய்தி அறிக்கை தெரிவித்துள்ளது.

"சொத்துக்களில் முதல் உரிமை உடைய பெண்களுக்காக அளிக்கப்படும் கடனான பாக்யலக்ஷ்மி ப்ளஸ் திட்டத்தில் வட்டி விகிதம் 10.10 சதவீதத்தில் இருந்து ஆரம்பிக்கிறது. இது முதல் இரண்டு வருடத்திற்கு பிக்சட் அடிப்படையில் பொருந்தும்", என்று இந்த அறிக்கையில் எல்.ஐ.சி. தெரிவித்துள்ளது.

வீட்டு கடனுக்கான வட்டியை குறைத்தது எல்.ஐ.சி!!!

பிக்சட் காலம் முடிந்ததும் இந்த கடனை ப்ளோட்டிங் விகிதத்திற்கு மாற்றினால் வட்டியில் கூடுதலாக 0.25 சதவீதம் தள்ளுபடி செய்து தரப்படும். பொதுவான கடன் பெறுபவர்களுக்கு சூப்பர் சாய்ஸ் திட்டத்திற்கு கீழ் 10.35 சதவீதம் முதல் வட்டி வசூல் செய்யப்படுகிறது. இந்த திட்டத்தின் கீழ் முதல் இரண்டு வருடத்திற்கு வட்டி விகிதம் பிக்சட் அடிப்படையில் இருக்கும். பின் அவை ப்ளோட்டிங் அட்டிப்படையில் மாறி விடும் என்றும் கூறியுள்ளது.

எல்.ஐ.சி. ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் தன்னுடைய இதர திட்டங்களிலும் வட்டி விகிதத்தை 0.25 சதவீதமாக குறைத்துள்ளது. உதாரணமாக 11.25 சதவீதம் வட்டி விகிதம் வசூலிக்கப்படும் நியூ பிக்சட் 10 என்ற திட்டம் 10 வருடத்திற்கு பிக்சட் அடிப்படையில் தான் இயங்கும். அதனை 5 வருட காலத்திற்கு பின் ப்ளோட்டிங் விகித வட்டிக்கு வாடிக்கையாளர்கள் மாற்றிக் கொள்ளலாம். சூர் பிக்சட் என்ற திட்டம் முழுமையாக பிக்சட் வட்டி அடிப்படையில் இயங்குகிற திட்டமாகும். அது 12.25 சதவீத வட்டி விகிதத்தை வசூல் செய்கிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

LIC HFL reduces home loan rates by 0.25 per cent

Housing finance company LIC Housing Finance (LIC HFL) today said it has reduced home loan rates by 0.25 per cent with effect from October 15.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X