பொது துறை வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கிய நிதி அமைச்சகம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்திய நிதி அமைச்சகத்தின் மூலதன உட்செலுத்துதல் திட்டத்தின் ஒரு பகுதியாக பாரத ஸ்டேட் வங்கிற்கு ரூ.2000 கோடி ரூபாயும், ஐடிபிஐ வங்கிற்கு ரூ.1800 கோடி ரூபாயும் மூலதனமாக ஒதுக்கியுள்ளது. இத்திட்டத்தில் 20 பொதுத்துறை வங்கிகளையும் சேர்த்து சுமார் ரூ.14,000 கோடி ரூபாயை அரசு ஒதுக்கியுள்ளது.

 

"மூலதன உட்செலுத்துதல் திட்டம் என்பது இரண்டு குறிக்கோள்களை மையமாகக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. ஒன்று, பொருளாதாரத்தின் விளைவிக்கும் துறைகளுக்கு அதன் கடன் தேவைக்காகவும். மேலும், மூலதன கட்டுப்பாட்டுக்கு ஏற்ப விகிதங்களைப் பராமரிப்பதற்காகவும்." என நிதித்துறை அமைச்சகம் விளக்கம் அளித்ததுள்ளது.

 

கடந்த புதன் கிழமை வங்கி வாரியாக நிதி அமைச்சகம், நிதியை ஒதுக்க முடிவுசெய்துள்ளது.

மேலும், இந்தத் திட்டத்தின் மூலம் வங்கிகள் அதிக பணத்தை சந்தைகளில் இருந்து திரட்ட உதவி புரியும் என நம்புகின்றது.

"அரசு ஒதுக்கியுள்ள 14000 கோடி ரூபாயின் மூலம் வங்கிகள் சந்தைகளில் இருந்து 10,000 கோடி ரூபாயை திரட்டலாம்." என நிதி சேவையின் செயலாளர் ராஜீவ் தக்ரு அவர்கள் நிருபர்களிடம் தெரிவித்தார். இந்தத் தொகை எல்லா வங்கிகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது என்றாலும் SBI வங்கிக்கு அதிக பங்கு கிடைத்துள்ளது.

பொது துறை வங்கிகளுக்கு ரூ.14,000 கோடி நிதி ஒதுக்கிய நிதி அமைச்சகம்!!!

இந்த திட்டத்தில், நடப்பு நிதியாண்டின் முடிவில் வங்கிகளிடம் 8% Tier -1 மூலதனம் (மைய மூலதனமான ஈக்விட்டி மூலதனம் மற்றும் வெளியிடப்படாத காப்புஇருப்பு) இருக்குமாறு உறுதி செய்யப்படும்.

இத்திட்டத்தை அரசு முன்னுரிமை முறையின் கீழ் ஒதுக்கீடு செய்யும். வங்கிகள் தனது முன்னுரிமை மூலதனத்தை அரசிடம் ஒதுக்கலாம். இதற்கு வங்கிச் சட்டத்தில் கடந்த வருடம் இடம் ஒதுக்கப்பட்டுள்ளது. 2012 - 13 ஆம் வருடம் அரசு 12,517 கோடி ரூபாயை உட்செலுத்தியுள்ளது.

வங்கிகள் அரசு பங்குகளை பராமரிக்க தேவையான விகித அளவு மூலதனத்தை மட்டுமே சந்தைகளில் இருந்து திரட்ட அனுமதி அளிக்கப்படும். பணத்தை திரட்ட குவாலிபைட் இன்ஸ்டிட்யூஷனல் ப்ளேஸ்மென்ட் அல்லது ரைட் இஷ்ஷுவை பயன்படுத்தலாம்.

இன்னும் ஒரு மாதத்தில் SBI வங்கி தனது நிதி திரட்டும் திட்டத்தை குவாலிபைட் இன்ஸ்டிட்யூஷனல் ப்ளேஸ்மென்ட் (QIP) வழியாக தீர்மானிக்கும் என அறிவித்துள்ளது. திரட்டும் தொகையை சரியாக அறிவிக்காதபோதிலும், இந்த திட்டம் SBI வங்கிக்கு QIP வழியாக 1,500-1,700 கோடி ருபாய் வரை திரட்ட உதவும்.

கூடுதல் மூலதனத்தின் மூலம் அதிக லாபம் அடைந்து அரசுக்கு அதிக ஆதாயம் ஏற்படும் என அமைச்சகம் எதிர்பார்கின்றது. கடந்த ஆண்டு பொதுத்துறை வங்கிகள் அனைத்தும் சேர்த்து 35,000 கோடி ருபாய் லாபத்தை ஈட்டியுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI to get Rs 2,000 cr capital, IDBI Bank Rs 1,800 cr

The Centre on Wednesday said it has allocated Rs 2,000 crore to State Bank of India and Rs 1,800 crore to IDBI Bank as part of its plan to infuse Rs 14,000 crore in fresh capital to 20 public sector banks.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X