கோகோ கோலாவின் 58-வது பாட்டில் உற்பத்தி தொழிற்சாலை இந்தியாவில்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உத்திரப் பிரதேச மாநிலத்தின் சாட்டா பகுதியில், தனது 58-வது தொழிற்சாலையை கோகோ கோலா நிறுவனம் தொடங்கி வைத்துள்ளது. இம்மாபெரும் நிறுவனத்தின் பாட்டில் தயரிப்பு நிறுவனமான பிருந்தாவன் அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்திற்கு சொந்தமான இந்த புதிய தொழிற்சாலையில் சுமார் 135 கோடிக்கும் அதிகமாக கோகோ கோலா நிறுவனம் முதலீடு செய்துள்ளது.

 

இந்த புதிய தொழிற்சாலையின் முலம் 225 பேருக்கு வேலைவாய்ப்பையும், உத்திரப் பிரதேசத்தின் 9 மாவட்டங்கள் மற்றும் மத்தியப் பிரதேச மாநிலத்தின் சில பகுதிகளின் தேவைகளையும் ஈடுகட்ட இந்த தொழிற்சாலை பெரிதும் உதவும் என அக்ரோ இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் தெரிவித்தது.

 

இந்த புதிய தொழிற்சாலையை தொடங்கியதுடன், கோகோ கோலா நிறுவனம் இந்தியாவில் 20 ஆண்டுகளை நிறை செய்கிறது. 1993-ம் ஆண்டு அக்டோபர் 24-ம் நாள் முதல் கோகோ கோலா இந்தியாவில் செயல்படத் துவங்கியது.

கோகோ கோலாவின் 58-வது பாட்டில் உற்பத்தி தொழிற்சாலை இந்தியாவில்!!!

"இந்த புதிய தொழிற்சாலை பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பது மட்டுமல்லாமல், உள்ளூர் மக்களின் வளர்ச்சிக்கும் பங்களிக்கும். இத்தொழிற்சாலை அமைப்பதன் முலம் இந்தியாவில் கோகோ கோலாவின் வர்த்தகம் மிகுந்த ஆற்றலுடன் விளங்குவதை நிங்கள் உணர முடியும்" என்று நிறுவனத்தின் மூத்த துணைத் தலைவரும் மற்றும் தலைமை தொழில்நுட்ப அதிகாரியுமான கெய் வோல்லாய்ர்ட் (Guy Wollaert) தெரிவித்தார்.

ஸ்பார்க்லிங் பெட் வரிசை (sparkling PET line) மற்றும் ஸ்பார்க்லிங் கண்ணாடி பாட்டில் வரிசை (sparkling glass bottle line) என இப்புதிய தொழிற்சாலையில் இரண்டு பாட்டிலிங் வரிசைகள் உள்ளன. இரண்டு வரிசைகளும் நிமிடத்திற்கு 600 பாட்டில்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டவையாக உள்ளன.

கடந்த ஆண்டில் அட்லாண்டாவைச் சேர்ந்த ஒரு நிறுவனம் 2020-ம் ஆண்டில் 5 பில்லியன் டாலர்களை முதலீடு செய்வதாக அறிவித்துள்ளது. ஏற்கனவே, 1993 மற்றும் 2011-ம் ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் அந்நிறுவனம் 2 பில்லியன் டாலர்களை முதலீடு செய்துள்ளது.

இந்நாட்டின் பாட்டில் வரிசைகளை அதிகரிக்கும் பொருட்டாகவும், புதிய பாட்டில் தொழிற்சாலைகளை சேர்ப்பதற்காகவும், பின்-முடிவு சங்கிலியின் கட்டுமானங்களையும் மற்றும் நிறுவனத்தின் சந்தைப்படுத்துதலையும் மேம்படுத்தவும் இந்த முதலீடுகள் செய்யப்படுகின்றன என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

கோகோ கோலா, தம்ஸ் அப், ஸ்பிரைட், மாஸா மற்றும் மினிட் மெய்ட் போன்று, கார்பனேட்டேட் மற்றும் கார்பனேட்டேட் அல்லாத பானம் என இரண்டு வகையிலான பானங்களையும் கோகோ கோலா இந்தியாவில் விற்று வருகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Coca Cola’s 58th bottling plant in India commences operations

Coca Cola on Thursday inaugurated its 58th plant in the country in Chatta region of Uttar Pradesh.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X