வட்டி விகிதத்தை உயர்த்த திட்டம்!!! ஆர்பிஐ

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: மோசமடைந்து கொண்டிருக்கும் தற்போதைய விலைவாசி நிலவரம், ரிசர்வ் பாங்க் ஆஃப் இந்தியாவை, இன்று நடக்கவிருக்கும் அதன் பாலிஸி மறுசீராய்வில் வட்டி விகிதத்தை சுமார் 0.25 சதவீதம் வரை உயர்த்தும்படி தூண்டக்கூடும். ஆனால் அதே வேளையில் லிக்விடிட்டியை தளர்த்தக்கூடிய சில நடவடிக்கைகளை அறிவிக்கவும் அது தூண்டுகோலாக இருக்கும் சாத்தியம் உள்ளது.

 

"ஆர்பிஐ, எம்எஸ்எஃப் விகிதங்களை குறைப்பதன் மூலமோ அல்லது ஓஎம்ஓ ஏலங்களை அறிவிப்பதன் மூலமோ லிக்விடிட்டிக்கு ஆதரவு அளிக்கும்," என்று இந்தியன் ஓவர்சீஸ் வங்கி தலைவரும், அதன் நிர்வாக இயக்குனருமான எம்.நரேந்திரா அவர்கள் பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

 

ரிப்போ விகிதத்தைப் பொறுத்தவரை ஏதேனும் அடையாள அறிவிப்பு இருக்கலாம் அல்லது இல்லாமலும் போகலாம் என்றும் அவர் கூறியுள்ளார்.

வட்டி விகிதத்தை உயர்த்த திட்டம்!!! ஆர்பிஐ

"ஆர்பிஐ, ரிப்போ விகிதத்தை சுமார் 0.25 சதவீதம் வரை உயர்த்தி, மார்ஜினல் ஸ்டாண்டிங் வசதியை (எம்எஸ்எஃப்) அதே சதவீத புள்ளிகள் வரை குறைக்கக்கூடும் என்பதே எங்களின் எதிர்பார்ப்பாகும்," என்று பாங்க் ஆஃப் பரோடா வங்கியின் நிர்வாக இயக்குனரான திரு. ரஞ்சன் தவான், பிடிஐயிடம் தெரிவித்துள்ளார்.

பணவீக்க எதிர்பார்ப்புகள் முன்னோக்கிச் செல்வதை தடுக்கும் விதத்தில், அக்டோபர் 29 ஆம் தேதியன்று ரிப்போ விகிதம் சுமார் 25 அடிப்படை புள்ளிகள் வரை உயரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்று எஸ்பிஐயின் தலைமை பொருளாதார ஆலோசகரான திரு சௌம்யா கன்டி கோஷ் கூறியுள்ளார்.

எனினும், வங்கிகள் பெறக்கூடிய கடனுக்கான விலையை குறைக்க, எம்எஸ்எஃப் விகிதத்தின் மதிப்பிறக்கமும் அதே நேரத்தில் நிகழ வேண்டியது அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆர்பிஐ கவர்னரான திரு.ரகுராம் ராஜன், கடந்த மாதத்திற்கான அவரது முதல் பாலிஸி மறுசீராய்வின் போது, பணவீக்கத்தை கட்டுக்குள் கொண்டு வரும் நோக்கில் ரிப்போ விகிதத்தை சுமார் 0.25 சதவீதம் வரை உயர்த்தி சந்தைகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.

விண்ணை முட்டும் வெங்காய விலைகள்

உணவுப்பொருட்களின், முக்கியமாக வெங்காயம் மற்றும் இதர சில காய்கறிகளின் அநியாய விலைகள், செப்டம்பர் மாத பணவீக்கத்தை கடந்த ஏழு மாத காலகட்டத்தில் அதிகபட்ச அளவான 6.46 சதவீதத்துக்கு தள்ளியுள்ளன.

மொத்த விற்பனை விலை இன்டெக்ஸின் அடிப்படையிலான பணவீக்கம் தொடர்ந்து நான்காவது மாதமாக உயர்ந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் போது 6.1 சதவீதமாக இருந்த பணவீக்கம், ஜூலை மாதத்தின் போது 5.85 சதவீதமாக (5.79 சதவீதத்திலிருந்து மேல்நோக்கி உயர்ந்துள்ளது) இருந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தின் போது இது 8.07 சதவீதமாக இருந்துள்ளது.

மிக அதிகமான உயர்வுடன் காணப்பட்ட வெங்காய விலைகள், கடந்த வருட செப்டம்பர் மாதத்தோடு ஒப்பிடுகையில் சுமார் 322.94 சதவீதம் வரையில் எகிறியிருப்பதைக் காணலாம்.

சில நகரங்களில் வெங்காய விலைகள், கிலோ 100 ரூபாய் வரை விற்று, வீட்டுச் செலவுக்கான பட்ஜெட்டில் துண்டு விழச் செய்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

RBI may hike interest rate this week, cut MSF rate

Worsening price situation may prompt the Reserve Bank of India to raise interest rate by 0.25 per cent in its policy
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X