இந்தியாவில் ஸ்மார்ட்போன்களின் விற்பனையை ரூ.3,500 கோடி ரூபாய்க்கு உயர்த்த திட்டம்!! சோனி கார்ப்பரேஷன்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஜப்பான் நாட்டின் மிகப்பெரிய எலெக்ட்ரானிக் நிறுவனமான சோனி, இந்த நிதியாண்டில் தன்னுடைய எக்ஸ்பீரியா வகை ஸ்மார்ட்போன்கள் மூலம் இந்தியாவில் ரு.3,500 கோடி ரூபாய்க்கு விற்பனையை அதிகரிக்க இலக்கை நிர்ணயித்துள்ளது.

 

நிறுவனத்தின் ஸ்மார்ட்போன் பிரிவு மூலம் அதன் வணிகம் வேகமாக அதிகரித்து வருகிறது. அதனால் ரூ.3500 கோடி ரூபாய்க்கு தன் விற்பனை இலக்கை நிர்ணயித்துள்ளது என்று சோனி இந்தியா கன்ஸ்யூமர் யூனிட் தலைவர் (மொபைல் பிரிவு) டடோடா கிமுரா தெரிவித்துள்ளார்.

இந்த சந்தைக்கு மெதுவாக நுழைந்ததால், சந்தையை வரைவாக பிடிக்க பெரிய தொகையை இதில் முதலீடு செய்துள்ளது சோனி நிறுவனம்.

அதிகப்படியான முதலீடு

அதிகப்படியான முதலீடு

"ஸ்மார்ட்போனை பொறுத்த வரை, இந்தியாவில் சோனி பெரிய தொகையை முதலீடு செய்கிறது. எங்களின் மாடல்கள் வேகமாக வளர்ந்து வருகிறது." என்று ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார் கிமுரா.

12 புதிய ஸ்மார்ட்போன்

12 புதிய ஸ்மார்ட்போன்

இந்த ஆண்டில் 12 புதிய ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த இந்நிறுவனம் திட்டமிட்டிருந்தது குறிப்பிடதக்கது.

சந்தையில் கடும் போட்டி!!!

சந்தையில் கடும் போட்டி!!!

இந்த ஸ்மார்ட்போன் பிரிவில், சோனி நிறுவனம் பலத்த போட்டியை சந்தித்து வருகிறது. அதனுடைய போட்டி நிறுவனங்கள் குறைந்த விலையில் மொபல்களை விற்று வருகிறது. இருப்பினும் ஆடியோ வீடியோ துறையில் நிபுணத்துவம் பெற்றுள்ளதால், வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்க்க முடியும் என்று அது அதன் நம்பிக்கையை தெரிவித்துள்ளது.

ஆல் இன் ஆல்
 

ஆல் இன் ஆல்

"சோனியின் அனைத்து நிபுணத்துவத்தையும் புகத்த உள்ளோம்; அது கேமரா ஆகட்டும், ஒளியாக இருக்கட்டும் அல்லது வாக்மன் டெக்னாலஜியாக இருக்கட்டும். சோனியிடம் உள்ள அனைத்துமே அதன் சொத்துக்கள். அவைகள் அனைத்தையும் ஸ்மார்ட்போனில் நுழைக்க உள்ளோம்", என்றும் கூறியுள்ளார்.

எக்ஸ்பீரியா-Z

எக்ஸ்பீரியா-Z

தன்னுடைய எக்ஸ்பீரியா-Z வகை ஸ்மார்ட்போன்களின் விற்பனை நன்றாக இருக்கும் என்று நிறுவனம் எதிர்பார்க்கிறது, என்றும் கிமுரா கூறியுள்ளார்.

போட்டியிட தயார்நிலையில் சோனி!!

போட்டியிட தயார்நிலையில் சோனி!!

"சாதாரண மொபைல் பயன்பாட்டில் இருந்து இப்போது அனைவரும் ஸ்மார்ட்போன் பயன்பாட்டிற்கு மாறி வருகின்றனர். இப்போதெல்லாம் காமெரா, ஸ்க்ரீன் அளவு மற்றும் ஒலியின் தரம் என இதை பற்றியெல்லாம் வாடிக்கையாளர்கள் பேசத் தொடங்கி விட்டனர். இந்த விஷயங்களில் எல்லாம் சோனி நிறுவனம் வல்லமை மிக்க சக்தியாக உள்ளது. இத்தகைய டெக்னாலஜி கொண்டு சந்தையின் பெரும் பகுதியை கைப்பற்றுவோம்" என்றும் கிமுரா கூறியுள்ளார்.

ரூ.10,000 முதல் சோனி ஸ்மார்ட்போன்

ரூ.10,000 முதல் சோனி ஸ்மார்ட்போன்

சோனி அதன் வாடிக்கையாளர்களுக்கு பல விலைகளில் மொபைல்கள் வைத்திருக்கிறது. சோனி நிறுவன போன்கள் 10,000 ரூபாயில் இருந்தே துவங்குகிறது. அதனால் விலையின் மீது கண்ணாக இருக்கும் இந்திய வாடிக்கையாளர்களுக்கு இது உபயோகமாக இருக்கும்.

இளைய தலைமுறை

இளைய தலைமுறை

"சோனி எக்ஸ்பீரியா வகை 9,000 ரூபாயில் இருந்து துவங்குகிறது. ரூ.9,000 ருபாய் என்பது எனக்கு அதிகமாக படவில்லை. இன்றைய இளைய தலைமுறை அவைகளை விரும்பி வாங்குகின்றனர்." என்றும் கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sony India eyes Rs 3,500 crore smartphones sales this fiscal

Japanese electronic major Sony is targeting sales of Rs 3,500 crore in India this financial year from its Xperia range of smartphones.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X