''கையைப் பிடிச்சு இழுத்தியா''... டைப்பில் ரகுராம் ராஜனிடம் கேட்கப்பட்ட கேள்வி...!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

  ஆர்.பி.ஐ கவர்னர் ரகுராம் ராஜனுடைய குடியுரிமை பிரச்சனை தீர்ந்து விட்டதா என்று கடந்த செவ்வாய்க் கிழமையன்று அவரிடம் கேட்கப்பட்ட போது ஒரு நிமிடம் ஆடி போய் விட்டார்.

  இயல்பாக நடக்கும் பத்திரிகை சந்திப்பில் ஒரு நிருபர் இக்கேள்வியை கேட்ட போது "இந்த கேள்விக்கு ஒரு முறை, ஒரே முறை தான் பதிலளிப்பேன்", என்று டாக்டர் ராஜன் கூறினார்.

  அதிரடி பதில்!!

  "நான் ஒரு இந்திய பிரஜை. நான் எப்போதுமே இந்திய பிரஜையாகவே இருந்துள்ளேன். நான் இந்திய பாஸ்போர்ட்டை மட்டும் வைத்துள்ளேன். எனது தந்தை வெளிநாட்டு சேவையில் ஈடுபட்டு கொண்டிருந்த போதும் நிதி அமைச்சகத்தின் சார்பில் நான் பயணம் மேற்கொண்ட போதும் இந்திய டிப்ளமாடிக் பாஸ்போர்ட் வைத்திருந்தேன்."

  இந்தியன்!!..

  "நான் எப்போதுமே பிற நாட்டு குடியுரிமைக்கு விண்ணப்பித்தது கிடையாது. நான் பிற நாட்டு பிரஜையாக இருந்ததும் இல்லை. வேறொரு நாட்டிற்காக நான் பற்றுறுதி எடுத்ததும் கிடையாது."

  முரளி மனோகர் ஜோஷி

  இந்திய அரசாங்கம் டாக்டர் ராஜனை ஆர்.பி.ஐ.யின் உயர்ந்த பதவியில் அமர்த்த பரிந்துரைத்த போது, எப்படி ஒரு வெளிநாட்டவரை மத்திய வங்கியில் அமர வைக்க முடியும் என்ற கேள்வியை பாராளமன்றத்தில் ப.ஜ.க.-வின் மூத்த தலைவரான முரளி மனோகர் ஜோஷி கேள்வி எழுப்பினார். ஆர்.பி.ஐ.-யை செயலாற்ற பல இந்தியர்கள் உள்ளனர் என்றும் அவர் கூறினார்.

  அனுமதிச்சீட்டு!!

  தன்னிடம் அமெரிக்காவின் கிரீன் கார்டு உள்ளது என்று ஒத்துக் கொண்ட டாக்டர் ராஜன், "கிரீன் கார்டு இருப்பதென்றால் அதற்காக எங்கேயும் பற்றுறுதி எடுத்திருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. அது வெளிநாட்டில் வேலை பார்ப்பதற்கான அனுமதிச்சீட்டு மட்டுமே." என்று கூறியுள்ளார்.

  க்ரீன் கார்டு

  தன்னுடைய க்ரீன் கார்டின் ஆயுள் முடிகிறது என்றும் அதனை புதுப்பிக்க மீண்டும் அனைத்து செயல்முறைகளிலும் ஈடுபட வேண்டும் என்று சிரித்துக் கொண்டே கூறினார்.

  தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

  English summary

  I am an Indian citizen: Raghuram Rajan

  RBI Governor Raghuram Rajan was taken aback for a short while on Tuesday when asked whether issues regarding his nationality were settled.
  Company Search
  Enter the first few characters of the company's name or the NSE symbol or BSE code and click 'Go'