உலகளவில் டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் முதல் இடம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: கார்ப்பரேட் உலகில் நிலையற்ற தன்மை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகும். எல்லா நிறுவனங்களும் வெற்றியை விரும்புவதால், தோல்வி என்பது அச்சுறுத்தும் விஷயமாகவே இருக்கின்றது.

பன்னாட்டு நிறுவனங்களில் நடக்கும் ஊழல் நமது நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும். எனினும், பல நிறுவனங்கள் ஊழலை எதிர்த்து போரிடுவதற்கான வழிகளை மேற்கொள்ளுகின்றன. தற்போதுபெரு நிறுவனங்கள் ஊழல் தடுப்பு சட்டங்களை கொண்டுவருகின்றன.

சந்தைகளில் இருக்கும் நிறுவனங்களை பட்டியலிடுவதற்கான கூறுகளாக இருப்பவை ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்த அறிக்கை, நிறவனத்தின் தெளிமை தன்மை, நாட்டு வரிசையிலான அறிக்கை ஆகும். ரெட்டிப் நிறுவன தொகுப்பின் அடிப்படையில் இப்பொழுதுள்ள சந்தைகளில் இருக்கும் ஊழல் குறைவாக இருக்கும் நிறுவனங்களை தெரிந்துகொள்ள தொடர்ந்து படிக்கவும்.

டாடா கம்யூனிகேஷன்ஸ்

டாடா கம்யூனிகேஷன்ஸ்

பல ஆண்டுகளாக நமது இந்தியாவில் டாட்டா குழுமம் தான் வீட்டு பயன்பாட்டு பொருட்களில் நன்மதிப்பை பெற்றுள்ளது. இந்தியாவில், இரசாயன ஆலைகளில் துவங்கி, மென்பொருள் நிறுவனம் தொடங்கி வாகனங்கள் வரை, மருத்துவம் தொடங்கி ஆராய்ச்சி கூடங்கள் வரை, உள்நாட்டு தயாரிப்புகள் இருந்து தகவல் தொடர்பு வரை, டாட்டா குழுமம் தான் அனைவரும் விரும்பத்தக்க பிராண்டாக இருந்து வருகின்றது.
இந்த நிறுவனம் ஊழல் எதிர்ப்பு திட்டங்களின் அடிப்படையில் 92% மதிப்பெண்களையும் நிறுவனத்தின் தெளிவுத்தன்மையில் 88% மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

 

 

பாரதி ஏர்டெல்

பாரதி ஏர்டெல்

இந்த நிறுவனம் ஊழல் எதிர்ப்பு திட்டங்களின் அடிப்படையில் 85% மதிப்பெண்களையும் நிறுவனத்தின் தெளிவுத்தன்மையில் 75% மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

பெட்ரோனாஸ்

பெட்ரோனாஸ்

இது மலேசியாவில் உள்ள எண்ணெய் மற்றும் எரிவாயு நிறுவனம் ஆகும். இது மலேசியா அரசின் முழு கட்டுப்பாட்டின் கீழ் ஒரு நிறுவனமாகும்.

யுனைடெட் கம்பெனி ரூசல்

யுனைடெட் கம்பெனி ரூசல்

யுனைடெட் கம்பெனி ரூசல் நிறுவனம் உலகின் மிகப் பெரிய அலுமினிய உற்பத்தி நிறுவனம் ஆகும்.
ரூசல் நிறுவனம் உலகில் இருக்கும் அலுமினிய நிறுவனங்களுக்கு எல்லாம் தலைமையாக இருக்கின்றது. உலக அலுமினிய உற்பத்தியில் 9% , உலக அலுமினிய வெளியீட்டில் 9% பெற்றுள்ளது.

மஹிந்திரா & மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா

மஹிந்திரா & மஹிந்திரா இந்தியாவில் முன்னணி ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் ஒன்றாகும். இது இந்திய நிறுவனம் மகேந்திரா குழுமத்தின் துணை நிறுவனம் ஆகும். இந்நிறுவனம் 2011 மற்றும் 2012 ஆண்டின் மிகவும் நம்பகமான பிராண்ட்ஸ் பட்டியலில் இருந்த 17,000 ப்ராண்ட்களில் 68 ஆவது மற்றும் 66 ஆவது இடங்களைப் பிடித்தது.

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

டாடா கன்சல்டன்சி சர்வீசஸ்

நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் சேவைகள் நிறுவனம், டாடா கன்சல்டன்சி சர்வீசஸ். அதன் IT உள்கட்டமைப்பு மேம்படுத்துவதற்காகவும் மாற்றுவதற்காகவும் SAS ஸ்காண்டிநேவிய ஏர்லைன்ஸ்யிடம் 5-வருட மல்டி மில்லியன் யூரோக்கள் ஒப்பந்தத்தை பெற்றுள்ளது.

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்

இந்தியாவின் மிக பெரிய வணிக அதிபர் , திருபாய் அம்பானி அவர்களால் 1966 ஆம் வருடம் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவப்பட்டது. இன்று, இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் வருவாய் அடிப்படையில், ரிலையன்ஸ் இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனம் ஆகும்.

விப்ரோ

விப்ரோ

விப்ரோ நிறுவனம் ஐடி சேவைகள் உள்ளிட்ட தீர்வுகள் மற்றும் சேவைகள் போன்றவற்றில் உலக வழங்குனராக இருகின்றது. இந்த நிறுவனம் ஊழல் எதிர்ப்பு திட்டங்களின் அடிப்படையில் 77% மதிப்பெண்களையும் நிறுவனத்தின் தெளிவுத்தன்மையில் 63% மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

லெனோவா

லெனோவா

லெனோவா குழு பெய்ஜிங் தலைமையிடமாக சீன பன்னாட்டு தொழில்நுட்ப நிறுவனம். இது தனிநபர் கணினிகள், மாத்திரையை கணினிகள், ஸ்மார்ட்போன்கள், பணிமனைகள், சர்வர்கள், மின்னணு சேமிப்பு சாதனங்கள், ஐடி மேலாண்மை மென்பொருள் மற்றும் ஸ்மார்ட் தொலைக்காட்சிகள் விற்கிறது.

சாசொல்

சாசொல்

சாசொல் ஜோகன்னஸ்பர்க் அடிப்படையாக ஒரு ஒருங்கிணைந்த ஆற்றல் மற்றும் ரசாயன நிறுவனம் ஆகும். அவை செயற்கை எரிபொருள் தொழில்நுட்பங்களை வெவ்வேறு திரவ எரிபொருட்களை, ரசாயனங்கள் மற்றும் மின்சாரம் போன்றவற்றை இந்நிறுவனம் உற்பத்தி செய்கிறது. இந்த நிறுவனம் ஊழல் எதிர்ப்பு திட்டங்களின் அடிப்படையில் 88% மதிப்பெண்களையும் நிறுவனத்தின் தெளிவுத் தன்மையில் 75% மதிப்பெண்களையும் பெற்றுள்ளது.

அமெரிக்கா மோவில்

அமெரிக்கா மோவில்

அமெரிக்கா மோவில் ஒரு மெக்சிகன் தொலைத்தொடர்பு நிறுவனம் ஆகும். இது பங்கு சந்தாதாரர்கள் அடிப்படையாக கொண்ட உலகின் மிகப்பெரிய தொலை தொடர்பு நிறுவனங்களில் ஒன்றாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

11 Most Transparent Companies In The World

Corruption in big multinational companies could be considered as the biggest drawback to the company. However, many companies are taking certain measures to combat corruption and are raising anti-corruption systems in their organization.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X