டாடா மோட்டார்ஸின் நிகர லாபம் 31.1% உயர்வு!!! எல்லாம் ஜகுவார் செய்த மாயம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: டாடா மோட்டார்ஸ் லிமிட்டெட், அதன் ஜகுவார் லாண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) யூனிட், நட்சத்திர செயலாக்கத்துடன் மீண்டும் முன்னணி வகிப்பதனால், எதிர்பார்த்ததைக் காட்டிலும் அதிகமான வருவாய் மற்றும் லாபத்தை ஈட்டியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

2013, செப்டம்பர் 30 ஆம் தேதியோடு முடிவடைந்த காலாண்டின் போது ஒருங்கிணைக்கப்பட்ட வருவாய் (நெட் ஆஃப் எக்சைஸ்), சுமார் 56,882 கோடி ரூபாயை எட்டியுள்ளது. இது, கடந்த ஆண்டின் இதே காலாண்டின் போது இருந்ததான 43,403 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில், இந்திய வணிகத்தின் வலுவற்ற தொழிற்பாட்டு சூழலையும் தாண்டி, சுமார் 31.1% வளர்ச்சியை எட்டியுள்ளதைக் காணலாம்.

திடீர் திருப்பம்

திடீர் திருப்பம்

ஜாக்குவார் லாண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) யூனிட்டில் ஏற்பட்ட மொத்த விற்பனை அளவுகளின் அதிகரிப்பு, உற்பத்திப் பொருள் மற்றும் சந்தையின் செறிவான கலவை ஆகியவற்றினாலேயே இந்த திடீர் திருப்பம் சாத்தியமாகியுள்ளது.

வரி விதிப்புக்கு முன் லாபம்

வரி விதிப்புக்கு முன் லாபம்

இந்த காலாண்டுக் குரிய, வரி விதிப்புக்கு முன் ஒருங்கிணைக்கப்பட்ட லாபமான ரூ.4,752 கோடி ரூபாய், கடந்த ஆண்டின் இதே காலாண்டின் போது இருந்த ரூ.3,089 கோடி ரூபாயைக் காட்டிலும், சுமார் 53.9% வளர்ச்சியைக் கொண்டுள்ளது.

லாபத்தில் 70.7% வளர்ச்சி

லாபத்தில் 70.7% வளர்ச்சி

வரிக்குப் பின் ஒருங்கிணைக்கப்பட்ட லாபத் (கூட்டு நிறுவனங்கள் தொடர்பான போஸ்ட் மைனாரிட்டி வட்டி மற்றும் லாபம்/நஷ்டம்) தொகை ரூ.3,542 கோடி ரூபாயாகும், கடந்த ஆண்டின் இதே காலாண்டின் போது ரூ.2,074 கோடி ரூபாயைக் காட்டிலும் சுமார் 70.7% வளர்ச்சியடைந்து இந்நிலையை எட்டியுள்ளது.

ஜேஎல்ஆர் செயல்பாடு

ஜேஎல்ஆர் செயல்பாடு

ஜகுவார் லாண்ட் ரோவர் (ஜேஎல்ஆர்) மீண்டும் ஒருமுறை தன் இணையற்ற செயலாக்கத்தை நிலைநாட்டியுள்ளது. 2013 செப்டம்பர் 30 ஆம் தேதியோடு முடிவடைந்த காலாண்டின் போது, ஜகுவார் லாண்ட் ரோவரின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை வணிகத்தின் அளவுகள், கடந்த ஆண்டின் இதே காலாண்டின் போது இருந்ததான தலா 1,01,931 யூனிட்கள் மற்றும் 1,02,644 யூனிட்கள் ஆகியவற்றைக் காட்டிலும் முறையே 31.6% மற்றும் 21.1% என்ற வீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளன.

ஜகுவார்

ஜகுவார்

ஜகுவாரின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை அளவுகள் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த 9,832 யூனிட்கள் மற்றும் 12,798 யூனிட்களைக் காட்டிலும் முறையே 91.6% மற்றும் 56.5% என்ற வீதத்தில் வளர்ச்சியை எட்டியுள்ளன.

ரேஞ்ச் ரோவர்

ரேஞ்ச் ரோவர்

ஆல்-நியூ ரேஞ்ச் ரோவருக்குக் கிடைத்திருக்கும் பலமான வரவேற்பு, இவோக் மற்றும் இதர உற்பத்திகளில் தொடரும் பலமான வளர்ச்சி ஆகியவற்றின் காரணமாக லாண்ட் ரோவரின் மொத்த விற்பனை மற்றும் சில்லறை விற்பனை அளவுகள் கடந்த ஆண்டின் இதே காலாண்டை காட்டிலும் 22.9% மற்றும் 14.8% என்ற வீதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Motors Q2 net surges; beats forecasts

Tata Motors Ltd reported revenues and profits that were way ahead of expectations, once again led by a stellar performance from its Jaguar Land Rover (JLR) unit.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X