விற்பனைக்கு வந்த உலக புகழ் ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: உலகின் கோடீஸ்வரர்கள் மற்றும் சக்தி வாய்ந்த மனிதர்களின் பட்டியலை வெளியிடும் மிகவும் பிரபலமான ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை. இப்பிரபலமான ஃபோர்ப்ஸ் மீடியா நிறுவனம் ஆண்டு முழுவதும் சிறப்புமிக்க செய்திகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் அப்பத்திரிக்கையை விற்று விட அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன் மூலம் சுமார் 400 மில்லியன் டாலர் பணத்தைப் திரட்ட முடிவு செய்துள்ளது.

இது பற்றி அந்நிறுவனத்தின் முத்த அதிகாரிகளிடம் கேட்டபோது "இத்தகைய நிலையில் நிறவனத்தை குறித்து ஒரு தீர்க்கமான முடிவு எடுப்பதற்கு எங்களை உட்படுத்தியுள்ளோம். ஃபோர்ப்ஸ் மீடியாவின் விற்பனை தொடர்பாக எத்தகைய எண்ணப்போக்கு நிலவி வருகிறது என்பதை சோதனையிட நாங்கள் ஒரு செயல்திட்டத்தை மேற்கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம்," என்று ஃபோர்ப்ஸ் மீடியாவின் தலைமை நிர்வாக அதிகாரியான மைக்கேல் பெர்லிஸ் கூறியுள்ளார்.

 96 வருட பழமை

96 வருட பழமை

ஃபோர்ப்ஸ் குடும்பத்தினருக்குச் சொந்தமான இந்த 96 வருட பழமை வாய்ந்த வணிக பத்திரிக்கையை, முதல் முறையாக அக்குடும்பத்தைச் சேராத நபராக இருந்து, நடத்தி வரும் பெருமையைப் பெற்றுள்ளார் இவர்.

டாச்சிஸ் வங்கி

டாச்சிஸ் வங்கி

இவ்விற்பனையில் தனது பிரதிநிதியாக டாச்சிஸ் வங்கியை தேர்வு செய்துள்ளது ஃபோர்ப்ஸ் நிறுவனம், "தகுதி வாய்ந்த ஏராளமானோர்", இவ்விற்பனையில் ஆர்வம் கொள்வர் என்றும் எதிர்பார்க்கிறது.

400 மில்லியன் டாலர்
 

400 மில்லியன் டாலர்

இவ்விற்பனை திட்டத்தைப் பற்றி நன்கு அறிந்த ஒரு நபர், ஃபோர்ப்ஸ் மீடியா இவ்விற்பனையின் மூலம் குறைந்த பட்சம் 400 மில்லியன் டாலர் ஈட்டும் என்று எதிர்பார்க்கப்படுவதாகக் கூறியுள்ளார் என்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையின் அறிக்கை ஒன்றில் குறிப்பிடப்பட்டுள்ளது.

டைம் இன்க் நிறுவனம்

டைம் இன்க் நிறுவனம்

டைம்ஸ் தலைமையகத்தில் ஃபோர்ப்ஸ் மீடியா நிர்வாகிகள் தென்பட்டதையடுத்து ஃபோர்ப்ஸ் பத்திரிக்கையை வாங்கக்கூடியவர்களின் பட்டியலில் டைம் இன்க் நிறுவனம் முதலிடம் வகிக்கிறது.

டிஜிட்டல் துறை

டிஜிட்டல் துறை

ஃபோர்ப்ஸ் பத்திரிக்கை நிறுவனத்தை மறுசீரமைக்கும் பொருட்டு, 2010 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பெர்லிஸ் அவர்களை ஃபோர்ப்ஸ் நிறுவனம் பணியமர்த்தியது. டிஜிட்டல் மற்றும் லைசென்ஸிங் அண்ட் கான்ஃபரன்சஸ் ஆகிய துறைகளின் வருவாய் வளர்ச்சி ஊட்டிய வலுவின் காரணமாக, கடந்த ஆறு வருடங்களைக் காட்டிலும் நடப்பு ஆண்டில் இந்நிறுவனத்தின் நிதி செயல்பாடு மிகச் சிறந்ததாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

அதிகமான வாடிக்கையாளர்கள்

அதிகமான வாடிக்கையாளர்கள்

பெர்லிஸ் அவர்களின் தலைமையின் கீழ், இந்நிறுவனம் மிகப்பெரும் டிஜிட்டல் வாடிக்கையாளர்களை பெற்றிருப்பதோடு, கடந்த மூன்று ஆண்டுகளில் ஃபோர்ப்ஸ்.காம் வெப்சைட்டை உபயோகிக்கக்கூடிய தனித்தன்மை வாய்ந்த விஸிட்டர்களின் எண்ணிக்கை 12 மில்லியனிலிருந்து சுமார் 26 மில்லியன் வரை அதிகரித்துள்ளது.

25% வரை உயரும்

25% வரை உயரும்

இவ்வாண்டு இறுதிக்குள் டிஜிட்டல் வருவாய்கள் சுமார் 25 சதவீதம் வரை உயரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக பெர்லிஸ் கூறியுள்ளார். சுமார் 1,200 வலை பதிவர்களை கொண்டது இந்நிறுவனம்.

கைமாறிய செய்தி நிறுவனங்கள்

கைமாறிய செய்தி நிறுவனங்கள்

தி நியூயார்க் டைம்ஸ் நிறுவனம், தி பாஸ்டன் குளோப் உள்ளிட்ட அதன் நியூ இங்கிலாந்து மீடியா க்ரூப் சொத்துகளை, ஜான் ஹென்றி என்னும் வணிகரிடம் சுமார் 70 மில்லியன் டாலருக்கு இவ்வருடம் விற்பனை செய்துள்ளது. தி வாஷிங்டன் போஸ்ட் நிறுவனம் அதன் ஃப்ளாக்க்ஷிப் நாளிதழை அமேஸான்.காம் நிறுவனரான ஜெஃப் பெஸோஸ் அவர்களுக்கு சுமார் 250 மில்லியன் டாலருக்கு விற்பனை செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Forbes magazine up for sale

Forbes Media, which publishes the Forbes magazine, best known for its annual billionaire and power lists, is up for sale and hopes to generate at least $400 million through the move.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X