என்.ஆர்.ஐக்கள் இந்தியாவில் அசையா சொத்துக்களை வாங்குவது எப்படி?

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் (என்.ஆர்.ஐ) மற்றும் இந்திய வம்சாவளியை சேர்ந்தவர்கள் (பி.ஐ.ஓ) ஆகிய இருவரும் அன்னிய செலாவணி மேலாண்மை சட்டத்தின் (எப்.இ.எம்.ஏ) கீழ் அனுமதியளிக்கப்பட்ட அசையா சொத்துக்களை இந்தியாவில் வாங்கலாம். எனினும், வர்த்தக மற்றும் குடியிருப்பு சொத்துக்களை மட்டுமே வாங்குவதற்கு அனுமதி உண்டு. பண்ணை வீடு மற்றும் விவசாய நிலம் போன்றவற்றை வாங்குவதற்கு சட்டத்தில் அனுமதி இல்லை.

இந்த அசையா சொத்துக்கள் அனுமதி அளிக்கப்பட்ட சொத்துக்களாக இருந்தால், என்.ஆர்.ஐ-க்கள் மற்றும் பி.ஐ.ஓ. க்கள் இவற்றை வாங்குவதற்கு நாட்டின் உச்ச நிதி நிறுவனத்திற்கு எந்த ஆவணங்களையும் சமர்ப்பிக்க தேவையில்லை. மேலும், பி.ஐ.ஓக்கள் அல்லது என்.ஆர்.ஐ க்கள் வாங்கும் ஆசையா சொத்துக்களின் எண்ணிக்கைகளுக்கு கட்டுப்பாடோ அல்லது உச்சவரம்போ கிடையாது.

எந்தெந்த வழிகளில் என்.ஆர்.ஐக்கள் அல்லது பி.ஐ.ஓக்கள் இந்தியாவில் சொத்துக்களை வாங்கலாம் என்ற கேள்விக்கு தொடர்ந்து படியுங்கள் சரியான பதில் கிடைக்கும்.

பரிசு

பரிசு

ஒரு என்.ஆர்.ஐ அல்லது பி.ஐ.ஓ இந்தியாவில் வாழும் நபரிடம் இலவசமாக குடியிருப்பு சொத்துக்களை வர்த்தகமாகவோ அல்லது பரிசாகவோ பெறலாம். எனினும், இந்தியாவில் வசிக்காத இந்திய வம்சாவளியை சேராத நபர் இந்தியாவில் அசையா சொத்துக்களை பரிசாக பெற முடியாது.

மரபுவழி முறை

மரபுவழி முறை

மேலும், என்.ஆர்.ஐ அல்லது பி.ஐ.ஓ அல்லது இந்திய வம்சாவளியை சாராத நபர்கள் இந்த அசையா சொத்துக்களை இந்தியாவில் வாழும் நபரிடமோ அல்லது இந்தியாவில் வசிக்காத நபரிடமோ மரபுவழி முறையாக பெறலாம்.

சட்டத்திற்கு உட்பட்டது

சட்டத்திற்கு உட்பட்டது

இந்த மரபுவழி முறையை அனுமதி அளிப்பதற்கு அந்த சொத்து யாரிடம் இருந்து மரபு வழி முறையாக வந்ததோ அவரும் அந்த சொத்தை எப்.இ.எம்.ஏ சட்டத்தின் விதிகளுக்கு உட்பட்டு வாங்கி இருக்கவேண்டும்.

வெளிநாட்டு நபர்கள்

வெளிநாட்டு நபர்கள்

இந்தியாவில் வசித்து வரும் வெளிநாட்டு நபர்களும் இந்தியாவில் அசையா சொத்துக்களை வாங்கலாம். இந்தியாவில் வசித்துவரும் வெளிநாட்டு நபர் இந்தியாவில் சொத்துக்களை வாங்குவதற்கு போதுமான அனுமதிகளும் அந்தந்த மாநிலங்களின் அதிகாரத்திற்கு உட்பட்ட குறிப்பிட்ட தேவைகளை பூர்த்தி செய்து அனுமதியை பெறவேண்டும்.

முன்னனுமதி

முன்னனுமதி

இந்தியாவில் வாழும் வெளிநாட்டினர் ஆப்கானிஸ்தான், வங்காளம், பூடான், சீனா, ஈரான், நேபால், பாக்கிஸ்தான் அல்லது இலங்கை போன்ற நாடுகளின் குடியுரிமை பெற்றவராக இருந்தால் ரிசர்வ் வங்கியின் முன்னனுமதி தேவைப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Can NRIs and other residents outside India acquire immovable property in India?

Non-resident Indians together with Persons of Indian (PIO) origin in accordance with the allowed permissions under the Foreign Exchange Management Act (FEMA) can acquire immovable property in India.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X