5,000 பிபிஒ ஊழியர்களை பணி நீக்கம் செய்த டெக் மஹிந்திரா!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஹைதராபாத்: டெக் மஹிந்திரா நிறுவனத்தின் பிசினஸ் ப்ராசஸ் அவுட்சோர்ஸிங் (பிபிஓ) பிரிவில் பணியாற்றி வந்த சுமார் 5,000 ஊழியர்களை, லாப பிரச்சினைகளை காரணம் காட்டி, பணிநீக்கம் செய்துள்ளது.

 

செப்டம்பர் 30, 2012 -இன் போது 28,611ஆக இருந்த ஊழியர்களின் எண்ணிக்கை, செப்டம்பர் 2013 -இன் போது, அதற்கு முற்பட்ட மூன்று காலாண்டுகளின் போது பெரும்பாலான ஊழியர்கள் பணிநீக்க உத்தரவைப் பெற்று வெளியேறியதன் காரணமாக, சுமார் 23,225 ஆக குறைந்துள்ளது.

 

கடந்த ஆண்டின் இதே காலாண்டுடன் ஒப்பிடுகையில், சுமார் 87,000 ஆக இருந்த ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 85,234 ஆக குறைந்துள்ளது. இந்த எண்ணிக்கை, கடந்த ஆண்டு டெக் மஹிந்திராவினால் கையகப்படுத்தப்பட்ட நிறுவனமான மஹிந்திரா சத்யம் நிறுவனத்தின் ஊழியர்களையும், அதன் இதர குழும நிறுவன ஊழியர்களையும் உள்ளடக்கியதாகும்.

 5,000 பிபிஒ ஊழியர்களை பணி நீக்கம் செய்த டெக் மஹிந்திரா!!!

இந்நிறுவனம், வாய்ஸ் செக்மென்டைச் சேர்ந்த முக்கியமான ஐந்து இந்திய ஒப்பந்தங்களை இழந்தனாலேயே, பிபிஓ வர்த்தகத்தில் ஆட்குறைப்பு எழுந்துள்ளதாக டெக் மஹிந்திராவின் தலைமை நிர்வாக அதிகாரியான (பிசினஸ் சர்வீசஸ் க்ரூப்) சுஜித் பக்ஸி கூறியுள்ளார்.

ஐடி துறையைப் பொறுத்தவரை உள்ளூர் சந்தை நிலவரம் சாதகமாக இல்லாததால், பணப்புழக்கம் அதிகமாக இருக்கும் சந்தைகளின் மீது இத்துறை தன் கவனத்தை திருப்பியுள்ளது. தொழில் செயல்பாடுகளுக்கான விலைகள் அதிகரிப்பு மற்றும் தாமதமாக முடிவெடுத்தல் போன்றவையே, உள்ளூர் சந்தை பெரிய ஐடி நிறுவனங்களை வசீகரிக்கத் தவறியதன் காரணங்களாகக் கூறப்படுகின்றன.

ஊதிய உயர்வு

ஜனவரி 1ஆம் தேதியிலிருந்து நடைமுறைக்கு வரும் ஊதிய உயர்வின் மூலம், சராசரியாக ஆஃப் ஷோர் ஊழியர்கள் சுமார் 7 சதவீத உயர்வும், ஆன் சைட் ஊழியர்கள் சுமார் 2.5 சதவீத உயர்வும் பெறுவார்கள். சுமார் 70,000 ஊழியர்கள் இந்த ஊதிய உயர்வை பெறவிருக்கிறார்கள்.

இந்நிறுவனம் தன் ஊழியர்களுக்கு இது தொடர்பான கடிதத்தை அனுப்பி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்நிறுவனம் கடந்த வருடத்தில் சில காலாண்டுகள் வரை ஊதிய உயர்வை தள்ளிப் போட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tech Mahindra reduces 5,000 BPO jobs in one year

Tech Mahindra Ltd has removed about 5,000 employees in its business process outsourcing (BPO) arm in the last 12 months due to “profitability issues”.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X