புதிய சேவையை விற்க குட்டிக்கரணம் போடும் இன்டெல் நிறுவனம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சான் பிரான்சிஸ்கோ: இன்டெல் கார்ப் நிறுவனம், அறிமுகப்படுத்தப்படவிருக்கும் அதன் இன்டெர்நெட் தொலைக்காட்சி சேவையை சுமார் 500 மில்லியன் டாலருக்கு விற்க முயன்று வருவதோடு, இந்த வருட இறுதிக்குள் இது தொடர்பான ஒப்பந்தத்தை முடிப்பதிலும் மும்முரமாக செயல்பட்டு வருகிறது என்று ப்ளூம்பெர்க் திங்களன்று செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய சேவையை விற்க குட்டிக்கரணம் போடும் இன்டெல் நிறுவனம்!!

 

இந்த வணிக ஒப்பந்தத்தில் ஆர்வமுடைய, தகுதி வாய்ந்த நிறுவனங்களுள் ஒன்றான வெரிசோன் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், ஸ்ட்ரீமிங் டெலிவிஷன் சேவையைப் பற்றி கன்டென்ட் புரொவைடர்களுடன் பேசிவருவதாக வெளியிடப்படாத ஆதாரங்களின் அடிப்படையில் ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.

இது பற்றி கருத்து தெரிவிக்க இன்டெல் நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது.

ஆன்க்யூ (OnCue) என்று பெயரிடப்பட்ட இத்திட்டதை இன்டெல் நிறுவன பிப்ரவரி மாதத்தில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. அன்று முதல் இன்று வரை ஏராளமான சவால்களை சந்தித்து வருகிறது. இந்த சிப் உற்பத்தி துறையின் புதிய சிஇஓவாகிய பிரையன் கிர்ஸானிக், இன்டெல் நிறுவனத்தால் இத்தகைய செலவீனம் மற்றும் குழப்பத்தை நிச்சயமாக தாங்க முடியாது என்று திடமாக முடிவு செய்துள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் கடந்த வாரம் செய்தியாளர்களிடம் கூறியுள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Intel wants $500 million for Internet TV service

Intel Corp is trying to sell its yet-to-launch Internet television service for $500 million and wants to complete a deal by year-end.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?