திருப்பதி கோவிந்தா உண்டியலுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் புது கணக்ஷன்!!!...

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருப்பதி கோவிந்தாவுக்கும் ரிசர்வ் வங்கிக்கும் அப்படி என்ன கணக்ஷன் என்று யோசிக்கிறீர்களா. உலகில் இரண்டாம் பணக்காரக் கடவுள் திருப்பதி பிரசன்ன வெங்கடேச பெருமாள் என்பது நாம் அனைவரும் அறிந்தததே. திருமலை கோவிலுக்கு வரும் பத்தர்கள் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமே உள்ளனர்.

இந்நிலையில் பக்கதர்கள் தங்களின் காணிக்கை பணமாகவும், சில்லரையாகவும், தங்கம், வெள்ளி, மேலும் பல வகையில் கோவில் உண்டியலில் செலுத்துகின்றனர். இப்படி காணிக்கையாக கிடைக்கும் பணம் தினமும் பல கோடிகளில் சேகரிக்கப்படுகின்றன. அப்படி சேகரிக்கும் நாணயங்களில் கோல்மால் வேலை நடப்பதாக திருமலை தேவஸ்தானத்திற்கு புகார் வந்துள்ளது. இதனை சமாளிக்க திருமலை தேவஸ்தானம் ரிசர்வ் வங்கியை அனுகியது.

தங்கம், வெள்ளி, வைரம்

தங்கம், வெள்ளி, வைரம்

தங்கம், வெள்ளி, மற்றும் விலை உயர்ந்த ரத்தினங்கள், வைர கற்கள், ஆபரணங்கள் அனைத்தும் கோவிலின் உள்ள இருக்கும் அறையில் தனியாக பிரிக்கப்பட்டு கோவிலின் இரகசிய பாதுகாப்பு பெட்டகத்தில் வைக்கப்படும்.

பணம்

பணம்

அதே அறையில் பணத்தை மதிப்பு வாரியாக பிரித்து வங்கியில் வரவு வைக்கப்படுகிறது. பணத்தை வரவு வைப்பதிலும், அதை உரிய முறையில் செலவு செயவதிலும் எந்த சிரமம் தெரியவில்லை. ஆனால் நாணயங்களை கையாளுவதில் சில சிக்கல் ஏற்ப்பட்டுள்ளதாக திருமலை தேவஸ்தான அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

 

 

நாணயங்கள்

நாணயங்கள்

ரூபாய் நோட்டிகளை பரித்தவாரே நாணயங்களை பரித்து முட்டையில் கட்டி கணக்கிட்டு மாதம் ஒரு முறை வங்கிகளுக்கும் அளிக்கப்பட்டு வந்தது.

10- 15 லட்சம் ரூபாய்

10- 15 லட்சம் ரூபாய்

தினமும் 10 முதல் 15 லட்ச ரூபாய் வரை சில்லரை நாணயங்கள் சேகரிக்கப்படுகிறது. இப்படி கிடைக்கும் சில்லரைகளில் சில விசமிகளுடன் தேவஸ்தான அதிகாரிகள் கூட்டு சேர்ந்து ரூ.100 சில்லரைகளுக்கு ரூ.10 முதல் ரூ.20 வரை கமிசன் பெற்று கள்ள சந்தையில் விற்பதாக தேவஸ்தான உயர் அதிகாரிகளுக்கு புகார் வந்தது.

தேவஸ்தான அதிரடி முடிவுகள்

தேவஸ்தான அதிரடி முடிவுகள்

இத்திருட்டை ஒழிக்க தேவஸ்தானம் கண்டிப்பான முடிவுகளை எடுக்க திட்டமிட்டது. இதனையடுத்து தேவஸ்தான செயல் இணை அதிகாரி ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சந்தித்தனர்.

திருமலை - ரிசர்வ் வங்கி

திருமலை - ரிசர்வ் வங்கி

ரிசர்வ் வங்கி அதிகாரிகளை சந்தித்த திருமலை தேவஸ்தான அதிகாரிகள் "திருமலை பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலின் உண்டியல் மூலம் கிடைக்கும் நாணயங்களை, நேரடியாக சேகரிக்க வேண்டும், என கோரிக்கை விடுத்தார்.

ரிசர்வ் வங்கியின் பதில்

ரிசர்வ் வங்கியின் பதில்

ரிசர்வ் வங்கி அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. திருப்பதியில் வெகு விரைவில், ரிசர்வ் வங்கி, தனி கவுன்ட்டர் அமைக்க உள்ளது. இதன் மூலம் திருமலையில் கிடைக்கும் நாணயங்களை, நாணயங்கள் அதிகம் தேவைப்படும் போக்குவரத்து துறை உட்பட, பல்வேறு அரசு துறைகளுக்கு வழங்க உள்ளதாக, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

tirumala devasthanam ask RBI to collect the coins directly

tirumala devasthanam ask RBI to collect the coins directly 
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X