இத்தாலி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த ஹீரோ மோடோகார்ப்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இருசக்கர வாகன உற்பத்தியில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழ்ந்தது ஹீரோ ஹோண்டா தான். 25 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த இரு நிறுவனமும் இணைந்து இந்தியாவில் இருசக்கர வாகனகளை தயாரித்து வந்தது. சில ஆண்டுகளுக்கு முன்பு ஒப்பந்த முடிவுக்கு வந்ததை தொடர்ந்து இரு நிறுவணங்களும் தனிதனியே பரிந்தது.

இந்நிலையில் ஹீரோ நிறுவனம் தனது பெயரை ஹீரோ மோடோகார்ப் என்று மாற்றிக்கு கொண்டது. மேலும் ஹீரோ நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கு உலக தரம் வாய்ந்த சேவை அளிக்கு அந்நிறுவனம் முடிவு செய்தது. இதனால் உலகின் பல நிறுவனங்களுடன் ஹீரோ மோடோகார்ப் கூட்டு சேர்ந்து கொண்டு வருகிறது.

இதன்படி ஹீரோ மோடோகார்ப் இத்தாலியின் மக்னேட்டி மரெல்லி (Magnetti Marelli) நிறுவனத்துடன் இணைந்து அடுத்தத் தலைமுறை மோட்டார் வாகன உதிரி பாகங்களுக்கான ஆராய்ச்சியை மேம்படுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளது.

இத்தாலி நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்த ஹீரோ மோடோகார்ப்!!!

இவ்விரு நிறுவனங்களும் இணைந்து உருவாக்கியுள்ள ஹெசெம்சி-எம்எம் (HMC-MM) ஆட்டோ நிறுவனத்தில் 85 லட்சம் டாலர்களை அடுத்த மூன்று வருடங்களிலும் 2.7 கோடி டாலர்களை அடுத்த பத்து வருடங்களிலும் முதலீடு செய்ய உள்ளதாகத் தெரிகிறது. ஹீரோ இதில் 60 சதவிகித பங்கினையும், 40 சதவீத பங்கினை மக்னேட்டி மரெல்லி நிறுவனம் பெற்றிருக்கும்.

ஹீரோ நிறுவனத்தின் இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாகியான பவன் முஞ்சால் பேசுகையில், "இந்த வளர்ச்சிக் குறிக்கோளானது ஹீரோ எஞ்சின்களையும், ஹீரோவின் பிற தயாரிப்புகளையும், மேம்படுத்தி சுற்றுப்புற சூழல் விதிகளை அனுசரித்து நாட்டின் வளர்ச்சிக்கும், நிறுவனத்தின் வளர்ச்சிக்கும் உதவும்" என்றார்.

இந்த புதிய தொழிற்சாலை டிசம்பர் மாதத்தின் கடைசியில் உற்பத்தியை தொடங்குவதுடன் வரும் பத்து ஆண்டுகளில் 20 கோடி டாலர்கள் மதிப்பிலான விற்பனையை இலக்காக கொண்டிருக்கும் என அவர் தெரிவித்தார்.

இந்த அமைப்பு மூலம் பிற தயாரிப்பாளர்களுக்கும், தயாரிப்பு நிறவனங்களுக்கும் வழங்கலாம் எனவும் முஞ்சால் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Hero ties up with Italy's Magnetti Marelli to boost research capability

Hero MotoCorp, the country's largest two-wheeler maker, announced a joint venture with Italy's Magnetti Marelli for developing powertrains and next-generation electronic fuel-injection systems.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X