நீரழிவு நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு அப்போலோ மருத்துவமனையின் அதிரடி திட்டம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: காய்ச்சல், தலைவலி போன்று இப்பொழுது நீரழிவு நோய் சரவ சாதரணமாக அனைவரையும் பாதித்துள்ளது. இதில் என் கொடுமை என்றால் இந்த வரிசையில் கேன்சரும் சேர உள்ளது. (அட மக்கா இந்த கேன்சருக்கு நல்ல மருந்த கண்டு பிடக்க கூடாத!!!). சரி வாங்க மேட்டருக்கு போவோம். மருத்துவ சந்தையில் இப்பொழுது நீரழிவு நோய்களுக்கு மிக பெரிய வர்த்தகம் துவங்கியுள்ளது. என்னென்றால் இந்நோயால் பாதிக்கப்பட்டோர் மிகவும் அதிகம்.

 

நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டு மருத்துவ செலவுகளை குறித்து கவலைப் படுவோருக்கு பயன் அளிக்கும் வகையில் தனியார் துறை காப்பீட்டு நிறுவனமான அப்போலோ ம்யூனிக், நீரழிவு நோயாளிகளுக்கான ஒரு புதிய காப்பீட்டுத் திட்டத்தினை அறிமுகம் செய்துள்ளது.

நீரழிவு நோயால் பாதிக்கபட்டவர்களுக்கு அப்போலோ மருத்துவமனையின் அதிரடி திட்டம்!!!

அப்போலோ மருத்துவமனை மற்றும் ஐரோப்பிய நிறுவனமாக ம்யுனிக் ஹெல்த் ஆகியவற்றின் கூட்டு நிறுவனமான இது நீரழிவு நோய், மருத்துவம் அல்லது மேலாண்மை உக்தி மூலம் ஒரு காப்பீட்டுத் திட்டத்தினை அமையச்செய்ய எண்ணியுள்ளது.

உதாரணமாக எனெர்ஜி என அழைக்கப்பட்டும் திட்டத்தின் மூலம் காப்பீடு முதல் நாளிலிருந்தே துவங்குவதுடன் 2 லட்சம் ரூபாய் முதல் 10 லட்சம் ரூபாய்க்கான கப்பீட்டுத் தொகையையும் கொண்டுள்ளது. மருத்துவ பரிசோதனை உள்ளிட்ட பல ஆரோக்கிய திட்டங்களை உள்ளடக்கியதாக இது இருக்கும்.

அந்நிறுவனம் நீரழிவு பயிற்ச்சியாளர்கள் பலரை நியமித்து வாடிக்கையாளர்களுக்கு ஆரோக்கியத்தை கண்காணிக்கவும் பதிவு செய்யவும் உதவுகிறது. (இது நல்லா இருக்கே...)

"இந்த குறிப்பிட்ட விஷயத்தில் யாரும் நுழைய விரும்ப மாட்டார்கள். ஆமாம் இது ஒரு ஆபத்து நிறைந்த ஒன்று ஆனால் அப்போலோ ம்யுனிக் இதை செய்ய காரணமிருக்கிறது. ஏனெனில், நாம் இழப்பீட்டை கொடுக்கும் தொழிலில் இருக்கிறோம் என்பதை இத்தொழில் செய்வோர் மறந்துவிடலாகாது" என்று அந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி ஆண்டனி ஜேகப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

இப்புதிய திட்டம் டிசம்பர் 16ஆம் தேதி சில குறிப்பிட்ட நகரங்களில் அறிமுகப்படுத்தப்படும். இதன் இலக்கு இரண்டாம் நிலை நீரழிவு நோயாளிகளாக இருப்பர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apollo Munich to offer insurance for diabetes

Private insurer Apollo Munich, on Monday, rolled out an insurance product aimed at people with diabetes.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X