நிதித் திட்டமிடல் என்றால் என்ன? நமக்கு எவ்வாறு உதவும்???

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: காசு, பணம், துட்டு, மனி என்ன பாஸ் பாட்டு மாறி இருக்கா?, இந்த எல்லா வார்த்தைக்குமே ஒரே பொருள் தான். அதேபோல் தான் நாம் செய்யும் எல்லா செயல்களும் பணத்திற்கான தேடல் தளமாக இருக்கிறது. நாள் முழுவதும் கடுமையாக உழைத்து பணத்தை சேர்ப்பது எதற்காக, நாம் வாழும் முறையை நவீன முறையில் மேம்படுத்தவும், நினைத்த வாழ்க்கையை அடையவும் தான்.

 

அத்தகைய பணத்தை முறையாக சேமித்து, பராமரித்தால் தான் நாம் முழுமையாக வாழ்கையை நடத்த முடியும். இத்தகையை செயல் முறையை கார்ப்பரேட் பாணியில் கூறினால் நிதி திட்டமிடல்.

நிதி திட்டமிடுதல் என்பது உங்களுடைய தற்போதய சூழ்நிலையை ஆய்வு செய்து புரிந்து கொள்ளுதலில் தொடங்கி, இது தொடர்பான தகவல்களை சேகரித்தல், குறிகிய மற்றும் நீண்ட கால நிதி இலக்குகளை நிர்ணயித்துப் பின்னர் விவரமான திட்டங்களை முடிவு செய்தலில் முடிகிறது. இதன் மூலம் தற்போதய சூழ்நிலைகளில் எவ்வாறு நிதித் தேவைகளை பூர்த்தி செய்யவேண்டும் என்பதையும் எதிர்கால திட்டங்களையும் கையாள முடியும்.

இப்போது நிதியை திட்டமிடுதலில் படிப்படியான வழிமுறைகளைப் பார்ப்போம்.

அளவிடத்தக்க இலக்கினை நிர்ணயம் செய்யவும்

அளவிடத்தக்க இலக்கினை நிர்ணயம் செய்யவும்

நிதி திட்டமிடும்போது உங்கள் இலக்கு என்ன அதை எப்போது அடைய விரும்புகிறீர்கள் என்பதை மிகத்தெளிவாக வரையறுப்பது அவசியம். அதேபோன்று நன்கு அளவிடத்தக்க இலக்குகளை நிர்ணயிப்பதன் மூலம் அதை அடைய முடியுமா என்பதை புரிந்துகொள்ள ஏதுவாக இருக்கும்.

அலசி ஆராய்தல்

அலசி ஆராய்தல்

நிதியை திட்டமிடுதலில் ஒவ்வொரு முடிவும் மற்றொன்றோடு தொடர்புடையதாகவும், ஒன்று மற்றொன்றை பாதிப்பதாகவும் இருக்கும். எனவே ஒரு விளக்கமான நிதி திட்டமிடுதல் அவசியமாகிறது. இல்லையேல் இலக்கை அடைவது கடினம்.

மறு ஆய்வு
 

மறு ஆய்வு

திட்டமிடுகையில், அவ்வப்போது உங்கள் நிதி நிலையை ஆய்வு செய்வது அவசியமாகிறது. உங்களுடைய வருமானத்தினை பொறுத்து உங்கள் செலவுககளும் மாறுபடும். திருமணம், குழந்தைகள், வீடு வாங்குதல் அல்லது வருமான உயர்வு போன்றவை இதை நிர்ணயிக்கும் நிதித் திட்டமிடுதல் சிக்கல் மற்றும் கடினமான ஒன்று என்பதால், அதில் அவ்வப்போது மாற்றங்கள் செய்வதன் மூலம் உங்கள் நீண்டகால இலக்கின் பாதையில் சரியாக பயணிக்கலாம்.

முன்னதாகவே திட்டமிடுங்கள்

முன்னதாகவே திட்டமிடுங்கள்

இயன்ற அளவு முன்னதாகவே நிதியை திட்டமிடுதல் உங்களுக்கு நன்மை தரும். சேமிப்பு, நிதி அளவீடு, முதலீடு போன்ற நிதி மேலாண்மை பழக்கங்களை முன்னதாகவே பழகுவதன் மூலம் நீங்கள் மாறிவரும் வாழ்கைக்கும் எந்த விதமான அவசர நிலைகளை எதிர்கொள்ளவும் உங்களை தயார் படுத்திக்கொள்ளலாம்.

ஆபத்துக்களை எதிர்கொள்ளுதல்

ஆபத்துக்களை எதிர்கொள்ளுதல்

பணவீக்கம், பங்குச்சந்தை நிலவரங்கள், மற்றும் வட்டி விகிதங்கள் உங்கள் திட்டங்களை பாதிப்பதோடு, உங்கள் கட்டுப்பாட்டிலும் இல்லாதவை. எனவே இது போன்ற எதிர்பாராத திருப்பங்களுக்கு தயாராக இருங்கள்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

5 steps of financial planning process

Financial Planning process starts from understanding & examining your current situation, gathering relevant financial information, setting up financial goals and finalizing a plan in detail.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X