பொருளாதார மந்த நிலைக்கு நான் காரணம் இல்லை!!! ரகுராம் ராஜனின் பதில்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: இந்தியப் பொருளாதாரம் பல்வேறு பிரச்சனைகளில் சிக்கித் தவித்துவரும் நிலையில், 2008 ஆம் ஆண்டில் ஏற்பட்ட உலகபொருளாதார நெருக்கடியினால் ஏற்படும் விளைவுகளில் இருந்து பாதுகாத்துக்கொள்ள அரசு அறிவித்த ஊக்கத் திட்டங்களே இந்த நிலைக்குக் காரணம் என ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் தெரிவித்துள்ளார். இந்த ஊக்கத திட்டங்கள், பணவீக்க அதிகரிப்பு, நடப்புக்கனக்குப் மற்றும் நிதிப் பற்றாக்குறை போன்றவற்றை உள்ளடக்கிய ஒரு பொருளாதார "ஜுரத்திற்கு" நாட்டை இட்டு சென்றதாகவும் தெரிவித்துள்ளார்.

 

நியூயார்க் நகரில் சிட்டிபேங்க் நிறுவனம் நடத்திய நிகழ்ச்சியில் முதலீட்டாளர்களிடையே பேசும்போது இது போன்ற உள்நாட்டுக் காரணிகளால் 2002-2012 ஆண்டு வரை 8 சதவிகிதமாக இருந்த பொருளாதார வளர்ச்சியானது 5 சதவிகிதமாக சரிந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

"இந்த மந்தநிலை பெரும்பாலும் பொருளாதார அமைப்புகளின் பலவீனம் மற்றும் திரும்பப் பெறப்பட்டுள்ள ஊக்கத் திட்டங்கள் மற்றும் மூன்றில் ஒரு பங்கு உலக பொருளாதார காரணங்களினாலும் ஏற்பட்டுள்ளது" என திரு ராஜன் கூறியதை மேற்கோள் காட்டி சிட்டி நிறுவனம் தெரிவித்துள்ளது.

"துவக்கத்தில் ஊக்கத்திட்டங்கள் வளர்ச்சிக்கு உதவியாக இருந்தபோதும் பின்னர் அது பலவீனமான பொருளாதாரம், பணவீக்கம் அதிகரிப்பு, வருமான உயர்வு மற்றும் அதன் விளைவாக விரிவடைந்த அளவுக்கதிகமான பற்றாக்குறைகள் ஆகியவற்றிற்கு இட்டுச்சென்றுள்ளது".

பிரணாப் முகர்ஜி

பிரணாப் முகர்ஜி

அப்போது நிதியமைச்சராக இருந்த பிரணாப் முகர்ஜி 2008ல் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியை சமாளிக்க தொழிற்துறைக்கு மூன்று வித ஊக்கத்திட்டங்களை அறிவித்திருந்தார்.

நடப்புக்கனக்குப் பற்றாக்குறை

நடப்புக்கனக்குப் பற்றாக்குறை

நடப்புக்கனக்குப் பற்றாக்குறை அல்லது அந்நிய செலாவணி வரவிற்கும் செலவிற்கும் உள்ள இடைவெளி, 2010-11 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது மொத்த உற்பத்தியில் 2.8 சதவிகிதத்திலிருந்து முன் எப்போதும் இல்லாத அளவான 4.8 சதவிகிதமாக அதிகரித்தது.

தங்க இறக்குமதி

தங்க இறக்குமதி

அந்நிய செலாவணி வரவை அதிகரிக்கவும், தங்க இறக்குமதியை கட்டுப்படுத்தவும் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகளினால் பற்றாக்குறை சற்று குறைந்து 3.1 ஆக நடப்பு ஆண்டின் முதற் பாதியில் இருந்தது. இது கடந்த ஆண்டின் முதற் பாதியில் 4.5 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

5-3 சதவீதம்
 

5-3 சதவீதம்

"பற்றாக்குறையை சரிசெய்ய மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் பலனளித்துள்ளது. இதனால் மொத்த உற்பத்தியில் பற்றாக்குறை கடந்த ஆண்டு அளவான 5 சதவிகிதத்திலிருந்து 3 சதவிகிதத்திற்கும் குறைவாக இருக்கும் என்று அவர் தெரிவித்ததார்.

ஒரு நீண்ட கால அவகாசத்தில் பணவீக்கப் பட்டியலிடப்பட்ட பத்திரங்கள் மூலாமாக தங்கத்தின் தேவையை குறைக்க இயலும் என்று நம்புவதாக அவர் தெரிவித்தார்.

வருவாய் பற்றாக்குறை

வருவாய் பற்றாக்குறை

வருவாய் பற்றாக்குறையை பற்றி குறிப்பிடும்போது மொத்த உற்பத்தி இலக்கான 4.8 சதவிகிதம் எட்டப்படலாம் என்றும் ஆனால் நிதிப் பற்றாக்குறையின் அளவைப் பொறுத்து செலவுகளை குறைக்க வேண்டியிருக்கும் என்றும் திரு ராஜன் தெரிவித்தார். கடந்த ஆண்டு பற்றாக்குறை 4.9 சதவிகிதமாக இருந்தது.

வங்கிக் கட்டமைப்பு

வங்கிக் கட்டமைப்பு

நிதிக்கொள்கை வடிவமைப்பை தெளிவுபடுத்துதல், வங்கிக் கட்டமைப்பை புதிய வங்கிகள் மூலமாகவோ, வங்கிகள் விரிவாக்கம் மூலமாகவோ வலுப்பெறச்செய்தல் மற்றும் நிதிச்சந்தைகளை விரிவுபடுத்துதல் ஆகிய நடவடிக்கைகள் மூலம் நிதியமைப்பை முன்னேறச் செய்ய ஒரு தேவை ஏற்பட்டதாகத் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Rajan says current economic woes due to domestic factors

Attributing the current economic woes to stimulus provided by the government to tide over the global crisis of 2008.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X