ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் ஏலம் ஜனவரி 23ம் தேதி துவக்கம்!!

By Prasanna
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்திய தொலைதொடர்பு துறை ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை ஏலம் விட முடிவுசெய்துள்ளது. அதற்காக இந்தியாவில் செயல்படும் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுத்துள்ளது. நிறுவனங்கள் ஏல விண்ணப்பத்தை சமர்ப்பிக்கும் கடைசி நாள் ஜனவரி 4. மேலும் இந்த ஏலம் வரும் ஜனவரி 23ஆம் தேதியன்று நடைபெறும் என இந்திய தொலைதொடர்பு துறை தெரிவித்தது.

 
ஸ்பெக்ட்ரம் அலைவரிசையின் ஏலம் ஜனவரி 23ம் தேதி துவக்கம்!!

நம் இந்திய நாட்டையே கலக்கிய ஸ்பெக்ட்ரம் ஊழல், அதில் ஈடுப்பட்ட முன்னாள் தொலைதொடர்பு அமைச்சரான ஆர்.ராஜா, கனிமொழி அகியோரை மறக்க வாய்ப்பு இல்லை. இந்த ஊழல் நம் இந்தியா நாட்டையே உழுக்கியது. மேலும் இந்த ஊழலுக்கு எதிராக தொடுத்த வழக்கு இன்னும் முடிந்தபாடு இல்லை. (கடவுளே இந்த முறையவது ஊழல் இல்லாமல் நடக்கனும்..)

 

தற்போதுள்ள திட்டத்தின் படி ஸ்பெக்ட்ரம் அலைவரிசையை உபயோகிப்பதற்காக தொலைதொடர்பு நிறுவனம் தங்கள் வருமானத்தின் 1 சதவீதம் முதல் 8 சதவீதம் செலுத்த வேண்டும். ஆனால் டிராய் இதனை எதிர்த்து அனைவருக்கும் சமமாக 3 சதவீதம் கட்டணம் விதிக்க முயற்சி செய்து வருகிறது.

இந்த புதிய 3 சதவீதவித கட்டணம் அனைத்து தொலைதொடர்பு நிறுவனங்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. ஏர்டெல், வோடபோன் போன்ற நிறுவனங்கள் தற்போது தங்கள் வருமானத்தில் 8% கட்டணமாக செலுத்தி வருகின்றனர். இத்திட்டம் இவர்களுக்கு சாதகமாக இருந்தாலும் சிலருக்கு பாதகமாக இருக்கிறது. ரிலையன்ஸ் ஜீயோ நிறுவனம் தற்போது ஒரு சதவீதம் மட்டுமே கட்டணமாக செலுத்தி வருகிறது.

மேலும் இந்த ஏலத்திற்கு முன்பே இத்திட்டதின் முடிவை சட்டசபையில் நிறைவேற்ற திட்டமிட்டுள்ளனர் தொலைதொடர்பு துறையினர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Spectrum auction to start on Jan 23

The Department of Telecom has released the Notice Inviting Application for the next round of spectrum auction which will start on January 23. Last date for bidders to put in their application is January 4.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X