இந்தியாவில் மொபைல் போன் வாடிக்கையாளர் அதிகரிப்பு!!! ஏர்டெல் தான் டாப்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: நம் நாட்டில் மொபைல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை கடந்த நவம்பர் மாதத்தில் 68.80 கோடியை எட்டியுள்ளது. மேலும் நவம்பர் மாதத்தில் மட்டும் சுமார் 48.67 லட்சம் புதிய வாடிக்கையார்களர்கள் இணைந்துள்ளனர் என்று தொழில் துறை குழுவான COAI தெரிவித்துள்ளது.

 

அக்டோபர் 2013ஆம் ஆண்டின் கடைசியில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 68.31 கோடியாக இருந்தது என்று செல்லுலார் ஆபரேட்டர்ஸ் அசோஸியேஷன் ஆஃப் இந்தியா (COAI) கூறியுள்ளது.

முன்னணி நிறுவனமான பாரதி ஏர்டெல் மட்டும் கடந்த மாதத்தில் 17.22 லட்ச புதிய வாடிக்கையாளர்களை தன்னுடன் சேர்த்துள்ளது.

ஏர்டெல்

ஏர்டெல்

நவம்பர் மாத இறுதியில் ஏர்டெல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 19.65 கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது. ஒட்டு மொத்த ஜி.எஸ்.எம் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கையில் 28.57 சதவீதத்தை ஏர்டெல் நிறுவனம் மட்டுமே கொண்டுள்ளது.

ஏர்செல் நிறுவனம்

ஏர்செல் நிறுவனம்

ஏர்செல் நிறுவனம் அதன் பங்கிற்கு 15.4 லட்சம் புதிய வாடிக்கையாளர்களை தன்னுடன் சேர்த்துள்ளது. அதன் படி, நவம்பர் மாத இறுதியில், ஏர்செல் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 6.52 கோடியாக இருக்கிறது.

வோடபோன்

வோடபோன்

இந்தியாவின் இரண்டாவது பெரிய நிறுவனமான வோடபோன் 13.3 லட்ச வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதால், நவம்பர் மாத இறுதியில் எடுக்கப்பட்ட கணக்கின்படி 15.80 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஜி.எஸ்.எம் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையில் இதன் பங்கு 22.97 சதவீதமாக உள்ளது என்று COAI கூறியுள்ளது.

வாட் எ ஐடியா சார் ஜி!!..
 

வாட் எ ஐடியா சார் ஜி!!..

ஐடியா செல்லுலார் நிறுவனம் 36,219 புது வாடிக்கையாளர்களை தன்னுடன் சேர்த்துள்ளதால், நவம்பர் மாத இறுதியில் 12.84 கோடி வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது. ஜி.எஸ்.எம் வாடிக்கையாளர்களில் 18.66 சதவீதம் பேர் இந்த சேவையை பயன்படுத்துகின்றனர். விதி மீறலின் காரணமாக அந்நிறுவனத்திற்கு ரூ.600 கோடி ஆபாராதம் விதிக்கப்பட்டது.

வீடியோகான்

வீடியோகான்

வீடியோகான் 1.85 லட்ச புது வாடிக்கையாளர்களை தன்னுடன் சேர்த்துள்ளதால், நவம்பர் மாத இறுதியில் 36.7 லட்ச வாடிக்கையாளர்களை பெற்றுள்ளது அது.

யூனினார்

யூனினார்

யூனினார் நிறுவனமும் 36,089 புது வாடிக்கையாளர்களை நவம்பர் மாதத்தில் தன்னுடன் சேர்த்துள்ளது. அதனால் நவம்பர் மாத இறுதியில் அதன் மொத்த வாடிக்கையாளர்கள் 2.23 கோடியாக உயர்ந்துள்ளார்கள்.

எம்டிஎன்எல்

எம்டிஎன்எல்

மாநில அரசால் இயங்கப்படும் எம்டிஎன்ல் (MTNL) 5,933 புது வாடிக்கையாளர்களை தன்னுடன் இணைத்துள்ளது. அதனால் அதன் மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 34.52 லட்சமாக உயர்ந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

GSM User Base Increases to 68.80 Crore in November: COAI

The GSM subscriber base in the country rose marginally in November to reach 68.80 crore, with 48.67 lakh new users added during the month.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X