இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 2200 வாகனங்களை அளிக்க ஒப்பந்தம்!!!. அசோக் லைலாண்ட்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

இலங்கை அரசுக்கு சுமார் 38.2 மில்லியன் டாலர் மதிப்பிலான 2,200 பேருந்துகளை இலங்கை போக்குவரத்து வாரியத்திற்காக வாங்க திட்டமிட்டுள்ளது. இதை இந்தியாவின் அசோக் லைலாண்ட்மற்றும் இலங்கையரசின் கூட்டு முயற்சியான லங்கா அசோக் லைலாண்ட் பிஎல்சி நிறுவனத்திடம் வாங்கவுள்ளது.

 

இதற்காக இலங்கை அரசு லங்கா அசோக் லைலாண்ட் நிறுவனத்திடம் கடன் விற்பனைக்கான பேரத்தில் ஈடுபட்டுள்ளது என அந்நாட்டு போக்குவரத்து அமைச்சர் குமார வேல்காம கூறியதாக ஊடகங்கள் தெரிவித்தன. இலங்கையரசு போக்குவரத்து வாரியத்திற்கு ஒவ்வொரு வருடமும் 10 லட்சம் இலங்கை ரூபாய்களை 5 வருடங்களுக்கு வழங்கும். அதற்கு மேற்பட்ட தொகையை அவ்வாரியம் ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கும்.

இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 2200 வாகனங்களை அளிக்க ஒப்பந்தம்!!!. அசோக் லைலாண்ட்...

இந்த ஒப்பந்தமானது பலகாலமாக புதிய வண்டிகள் மற்றும் பராமரிப்புகள் இன்றித் தவிக்கும் அரசின் போக்குவரத்துத் துறையை மேம்படுத்தும் முயற்சியாகும். தற்போது அங்கு சாதாரண மனிதர்களும் விலை அதிகமான தனியார் போக்குவரத்தை நம்பியுள்ள நிலை உள்ளது.

லங்கா அசோக் லைலாண்ட் நிறுவனம் 1982இல் துவங்கப்பட்டு அந்நாட்டின் பல்வேறு கடினமான கால கட்டங்களில் துணையாக நின்றதுடன் அதற்கான அதிகாரபூர்வ அங்கீகாரத்தையும் பெற்றுள்ளது. அந்நிறுவனத்தின் பேருந்துகளும் சரக்குந்துகளும் சுமார் 60 விழுக்காடு பங்கை பெற்றுள்ளன. இது கடந்த 29 வருடங்களுக்கு முந்தய அளவான 13 விழுக்காட்டை ஒப்பிடுகையில் சற்று ஆறுதல் தரும் செய்தியாகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Ashok Leyland Set to Get Lankan Order for 2200 Buses

The Sri Lankan government is set to order 2,200 buses for the Sri Lanka Transport Board (SLTB) at a cost of LKR 5 billion (USD 38.2 million) from Lanka Ashok Leyland
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X