சரிவின் விளிம்பில் நிற்கும் ப்ளாக்பெர்ரி நிறுவனத்தை தாங்கிபிடிக்க புதிய அதிகாரி...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: மொபைல் கம்யூனிகேஷன் மற்றும் மொபைல் தயாரிப்பு துறையில் உலகளவில் முதலிடத்தில் இருந்த ப்ளாக்பெர்ரி நிறுவனம், கடந்த சில வருடங்களாக வருவாய், வற்பனை, தயாரிப்பு என அனைத்திலும் சரிவை சந்தித்தது. இதனால் அந்நிறுவனத்தின் சிஇஒ-வை பணிநீக்கம் செய்தது.

 

இதனால் நிறுவனத்தை முழுவீச்சில் செயல்படுத்த பல முயற்சிகளை செய்துவந்தது. இதன் ஒரு பகுதியாக அந்நிறுவனத்தின் குளோபல் என்டர்பிரைசஸ் சர்வீசஸ் பிரிவின் பிரசிடென்ட் ஆக திரு.ஜான் சிம்ஸ் பதவியேற்கவிருப்பதாக அறிவித்துள்ளது.

சரிவின் விளிம்பில் நிற்கும் ப்ளாக்பெர்ரி நிறுவனத்தை தாங்கிபிடிக்க புதிய அதிகாரி...

"ஜான் போன்ற அனுபவமிக்க நிர்வாகி ஒருவரை ப்ளாக்பெர்ரி நிறுவனத்திற்கு வரவேற்பதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன். அவரது சிறந்த நிர்வாகத் திறன் மூலம் எங்களின் முக்கிய வணிக செயல்பாடுகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள மறுசீரமைப்பு மற்றும் மாறுதல்களை திறம்பட நிறைவேற்றுவார் என்பதில் சந்தேகமேயில்லை," என்று ப்ளாக்பெர்ரி நிறுவனத்தின் எக்ஸிக்யூட்டிவ் சேர் மற்றும் சிஇஓவாகிய ஜான் சென் கூறினார்.

மேலும் அவர் "வணிகத்தில் மாற்றங்களைக் கொண்டு வருதல், ப்ராண்ட்களை ரீடிஃபைன் செய்தல் மற்றும் குழுக்களை ஊக்குவித்தல் போன்றவற்றில் அவருக்கு இருக்கக்கூடிய பரந்துபட்ட அனுபவம், தற்போது ப்ளாக்பெர்ரி நிறுவனத்தை மேலும் சுறுசுறுப்பானதாகவும், செயல்திறன்மிக்கதாகவும் மாற்றும் பணிகளில் ஈடுபட்டிருக்கும் எங்களுக்குக் கிடைத்த மிகப்பெரும் வரப்பிரசாதம் ஆகும். நாங்கள் மேற்கொண்டு வரும் மாற்றங்கள், ப்ளாக்பெர்ரியின் மீது நம்பிக்கை வைத்துள்ள தற்போதைய வாடிக்கையாளர்களுக்கும், ப்ளாக்பெர்ரி 10 ப்ளாட்ஃபார்ம் எத்துணை ஆற்றல் வாய்ந்தது என்றும் அது எவ்வளவு இன்றியமையாதது என்றும் அறிந்து கொள்ள விழையும் புதிய வாடிக்கையாளர்களுக்கும் புதுமையான பல வசதிகளை அளிக்க வேண்டும் என்ற எங்களது நோக்கத்தை எடுத்துரைக்கக்கூடியவையாகும். இவை அனைத்திற்கும் நடுநாயகமாக இருக்கக்கூடியதாக நாங்கள் நம்புவது ஜான் அவர்களின் திறமையைத் தான்." என்றும் கூறியுள்ளார்.

சேப் (SAP) நிறுவனத்தில், அதன் மொபைல் சர்வீசஸ் வர்த்தகப் பிரிவின் பிரசிடென்ட் ஆக பணியாற்றிய ஜான் சிம்ஸ், ஜனவரி மாதத்தில் ப்ளாக்பெர்ரி நிறுவனத்தில் சேரவிருக்கிறார். வயர்லெஸ் ஆபரேட்டர்களுக்கு மொபைல் டெலிகம்யூனிக்கேஷன்ஸ் புராடக்ட்கள் மற்றும் சேவைகளை வழங்கி வரும் நிறுவனங்கள் பலவற்றில் பணியாற்றிய வகையில் சுமார் 20 வருட அனுபவம் வாய்க்கப்பெற்றவர் திரு.ஜான் அவர்கள். சேப் நிறுவனத்தில் சேர்வதற்கு முன், ஜான் அவர்கள் 724 சொல்யூஷன்ஸ், டான்டாயு சாஃப்ட்வேர், இன்ட்ராடோ மற்றும் டான்டெம் கம்ப்யூட்டர்ஸ் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களில் தலைமைப் பொறுப்புகளை வகித்துள்ளார்.

 

ப்ளாக்பெர்ரி போன்களின் விற்பனை 0%!!! சோகத்தில் ப்ளாக்பெர்ரி நிறுவனம்...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

BlackBerry appoints John Sims as President, Global Enterprise Services

BlackBerry Limited, a world leader in mobile communications, announced that John Sims will join the Company as President, Global Enterprise Services.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X