ரோபோடிக் துறையில் ரகசியமாக செயல்படும் கூகுள்!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: உலகின் மிகப்பெரும் இன்டெர்நெட் ஜாம்பவானான கூகுள் நிறுவனம், சயின்ஸ் ஃபிக்க்ஷன் திரைப்படங்களில் காணப்படுவதைப் போன்ற நவீன ரோபாட்களை தத்ரூபமாக வடிவமைப்பதில் பெயர் பெற்றுள்ள தனியார் நிறுவனமான பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனத்தை கையகப்படுத்தியுள்ளது. இந்த ரோபாட்களின் உருவாக்கத்தில் இணைத்தயாரிப்பு அல்லது நிதியுதவி அளித்தல் போன்றவற்றில் அமெரிக்க இராணுவம் பங்கெடுத்து வருகிறது.

இந்த கையகப்படுத்தும் திட்டம், கூகுள் நிறுவனத்தின் ஆன்ட்ராய்ட் மொபைல் ஆபரேட்டிங் சிஸ்டமின் முன்னாள் தலைவராக விளங்கிய ஆண்டி ரூபின் அவர்களின் தலைமையின் கீழ் தற்போது செயல்பட்டு வரும் கூகுளின் இரகசியமான ரோபாட்டிக்ஸ் பிரிவின் சமீபத்திய அதிரடியாகும். கூகுளின் புதிய பிரிவான ரோபாட்டிக்ஸ் பிரிவு, அரை டஜனுக்கும் அதிகமான இதர ரோபாட்டிக்ஸ் நிறுவனங்களை கையகப்படுத்தியுள்ளது.

ரோபோடிக் துறையில் ரகசியமாக செயல்படும் கூகுள்!

இதனைப் பற்றி விமர்சிக்க கூகுள் நிறுவனம் மறுத்து விட்டது; பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனமோ விமர்சிக்கும்படி விடப்பட்ட வேண்டுகோள்களை கண்டுகொள்ளவில்லை. இவ்விஷயத்தைப் பற்றி நன்கு அறிந்த நபர் ஒருவர், சனிக்கிழமையன்று நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான இந்த ஒப்பந்தம் பற்றிய தகவலை உறுதி செய்துள்ளதோடு, கூகுள் நிறுவனம் பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனத்தின் இராணுவ ஒப்பந்தங்களை கௌரவிக்கவிருப்பதாகவும் கூறியிருக்கிறார்.

இந்த ஒப்பந்தம் தொடர்பான நிதி சார்ந்த தகவல்களைப் பற்றி ஒன்றும் அறிந்து கொள்ள இயலவில்லை.

மஸ்ஸாசூட்ஸ் இன்ஸ்டிட்யூட் ஆஃப் டெக்னாலஜியிலிருந்து தனியாகப் பிரிந்து, 1992 ஆம் ஆண்டில் தனிப்பட்ட நிறுவனமாக, மஸ்ஸாசூட்ஸின் வால்தாமில் நிறுவப்பட்டிருக்கும் பாஸ்டன் டைனமிக்ஸ் நிறுவனம், அமெரிக்க இராணுவம், கப்பற்படை, மரைன் கார்ப்ஸ் மற்றும் பாதுகாப்புத் துறையின் அட்வான்ஸ்ட் ரிஸர்ச் புராஜக்ட்ஸ் ஏஜென்ஸி ஆகியவற்றுடன் பணியாற்றி வருவதாக அந்நிறுவனத்தின் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google acquires developer of military robots

The world's largest Internet search company acquired Boston Dynamics. Google's new robotics division has acquired more than a half-dozen other robotics companies.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X