ஆடம்பர சந்தைக்கு முதல் அடி!!! லோக்பால் மசோதா எதிரொலி...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஊழலை ஒழிக்கும் வகையில் லோக்பால் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்பட்டு, ஒப்புதலும் பெற்றது. தற்போது குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜியின் கையெழுத்துக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. பொதுவாக மக்களுக்கும் பல நிறுவனங்களுக்கும் நல்ல செய்தி என்றாலும், ஆடம்பர பொருட்களான கைககடிகாரங்கள், விலைஉயர்ந்த மதுபானங்கள் மற்றும் சுற்றுலா விடுமுறை சேவைகள் ஆகியவற்றின் விற்பனை குறையும் என்று அஞ்சப்படுகிறது.

 

ஐஎம்ஆர்பி எனும் ஆய்வு அமைப்பின் துணைத் தலைவர் பிரியதர்ஷினி நரேந்திரா குறிப்பிடும்போது "இந்தியாவில் ஊழல் எதிர்ப்பு சட்டங்கள் கடுமையாக அமல் படுத்தப்படுமானால் அதனுடைய தாக்கம் கண்டிப்பாக உயர்தர ஆடம்பர பொருட்களின் விற்பனையை பாதிக்கும்" என குறிப்பிட்டுள்ளார்.

ஆடம்பர பொருட்களின் சந்தை

ஆடம்பர பொருட்களின் சந்தை

அந்த அமைப்பு சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்தியாவின் ஆடம்பர பொருட்களின் சந்தை 17 சதவிகிதம் வரை வளர்ந்து 60,000 கோடி ரூபாய்களைத் தாண்டக்கூடும் என்று கூறியுள்ளது. இது போன்ற ஆடம்பரப் பொருட்கள் லஞ்சம் கொடுக்க அனைவரும் அறிந்த ஒரு வழிமுறை என அவ்வமைப்பு கருதுகிறது. பெருமளவில் ஆடம்பர பொருட்கள் வாங்கப்படுவதும் இந்த அச்சத்திற்கு மற்றுமொரு காரணமாக கருதப்படுகிறது.

கருப்பு பணம்!!

கருப்பு பணம்!!

அவர் மேலும் கூறுகையில், சுங்க அதிகாரிகள் ஆடம்பர பொருட்கள் விற்பனையை மிகவும் கவனத்துடன் கண்காணித்து வருவதாகவும் அவற்றை வாங்கும் போது வருமான வரி எண்னை கட்டாயமாக தரவேண்டும் என்றும் இதனால் மக்கள் கருப்புப் பணத்தை செலவழிக்கும்போது பிடிபடும் பயத்தால் மிகவும் ஜாக்கிரதையாக செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.

சூப்பர் சூப்பர் பாஸ்..
 

சூப்பர் சூப்பர் பாஸ்..

ஆடம்பர திருமணங்களை நிர்வகிக்கும் பேஷன் ஒன் இண்டெர்நேஷனல் என்னும் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் விஜய் சிங் இதுகுறித்து கருத்து தெரிவிக்கையில், பெரும்பாலான ஆடம்பரப் பொருட்கள் பணப்பரிமாற்றத்தின் மூலமே நடக்கிறது என்றும், "சட்டம் கடுமையாகையில், கருப்புப் பணத்திற்கு எதிரான நடவடிக்கைகள் அதிகரிக்கும்" என்றும் கூறினார்.

வர்த்தக சந்தை

வர்த்தக சந்தை

ஒரு பொதுவான நோக்கில், ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகள் கடுமையாகும் போது இந்தியா, சீனாவின் ஆடம்பர சந்தைகளுக்கு ஏற்பட்ட அதே நிலைமையை பிரதிபலிக்கும் எனலாம். மேலும் இந்தியாவின் பொருளாதாரம் நிலை மாறும்.

கடுமையான சட்டங்கள் தேவை

கடுமையான சட்டங்கள் தேவை

உலகளாவிய ஆலோசனை நிறுவனமான பெயின் அன்ட் கோ அளிக்கும் விவரங்கள் படி சீனாவின் முக்கிய ஆடம்பர சந்தைகள் ஜனவரி முதல் நவம்பர் வரையில்லான காலத்தில் அரசின் கடுமையான நடவடிக்கைகளால் 2 சதவிகிதம் மட்டுமே உயர்ந்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. இதற்குமுன் அந்த சந்தை 2012இல் 6 சதவிகிதமும் 2011இல் 13 சதவிகிதமும் வளர்ந்தது.

சீனா

சீனா

பெயின் நிறுவனத்தின் அறிக்கையில் மக்களின் வரிப்பணத்தை வீணடிப்பதை தடுப்பதிலும் ஊழலை வேரோடு அழிப்பதிலும் சீன அரசு காட்டிய தீவிர முயற்சி ஆடம்பர பரிசுகளின் மீது கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

தகவல் அறியும் சட்டம்

தகவல் அறியும் சட்டம்

உண்மையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமும் அரசு மற்றும் தனியார் நிறுவனங்களின் ஆவன மற்றும் கணக்கு ஆய்வுகளில் காட்டப்படும் தீவிரம், அதிகாரத்தில் உள்ளவர்களை லஞ்சம் பெறுவதைப் பற்றி மிகவும் எச்சரிக்கையோடு இருக்கச் செய்துள்ளது..

லஞ்சம் பெற அதிகாரிகளுக்கும் பயமாம்!!

லஞ்சம் பெற அதிகாரிகளுக்கும் பயமாம்!!

தங்கள் திட்டங்களுக்கு கடன்களைப் பெற அதிகாரிகளுக்கு ஐபாட் மற்றும் கடிகாரங்கள் போன்ற விலை உயர்ந்த பொருட்களை கொடுக்கும் வேலையை தன் வேலையில் ஒரு பகுதியாக கொண்ட டெல்லியிலுள்ள ஒரு தனியார் நிறுவன அதிகாரி, சமீபகாலமாக அதிகாரிகள் பயப்படுவாதக் கூறுகிறார்.

லஞ்ச வழக்கு

லஞ்ச வழக்கு

"கடும் நடவடிக்கைகளுக்குப் பயந்து பரிசு பொருட்களை மறுக்கும் சில அதிகாரிகளை நான் பார்த்துள்ளேன். இது சமீபத்தில் ஒரு மூத்த அரசு வாங்கி அதிகாரியை லஞ்சம் பெற்றதாக சிபிஐ கைது செய்ததான் விளைவாக இருக்கலாம்" என அவர் தெரிவித்த்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Lokpal Bill may hurt luxury market

The passage of the Lokpal Bill in the Lok Sabha and the expected clampdown on graft may be good news for most individuals and corporates, but there are fears it may slow down sale of luxury products
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X