மொபைல் கட்டணத்தை 10-20% உயர்த்த திட்டம்!!! ஏர்டெல்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் முதன்மையான தொலைதொடர்பு சேவை நிறுவனங்களில் ஒன்றான பாரதி ஏர்டெல் நிறுவனம் மொபைல் அழைப்பு கட்டணங்களை 10-20 சதவிகிதம் வரை அதிகரிக்க வாய்ப்புக்கள் உள்ளது என்று பங்கு ஆய்வு நிறுவனமான நொமூரா (Nomura) தெரிவித்துள்ளது. 'இது குறித்து பாரதி நிறுவனத்துடன் பேசிய போது இந்த சேவைகளின் பயன்பாடுகள் அதிகமாக உள்ளதால் தற்போதைய அளவிலிருந்து 10-20 சதவிகிதம் உயர்த்த அதிக வாய்ப்புகள் உள்ளது' என்று திட்டவட்டமாக தெரிவித்தது.

 

ஏர்டெல் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் கூறுகையில் "இந்தியாவை செயல்பாட்டின் பொறுத்தவரை தற்சமயம் விலையை உயர்த்தும் எண்ணம் எதுவும் இல்லை. ஆனால் தற்போது இருக்கும் தள்ளுபடி திட்டங்களையும் மற்ற சலுகைகளையும் குறைக்க முற்பட்டுள்ளோம்" என்றார்.

இந்நிறுனம் தனது போஸ்ட் பெய்டு வாடிக்கையாளர்களின் அழைப்பு கட்டணங்களை 50 சதவிகிதம் வரை செப்டம்பர் மாதத்தில் உயர்த்தியுள்ளதாக கூறியுள்ளது.

உள்ளுர், வெளியூர் அழைப்புகள்

உள்ளுர், வெளியூர் அழைப்புகள்

உள்ளுர் மற்றும் வெளியூர் ஏர்டெல் மொபைல்களுக்கான கட்டணம் ஒரு நமிடத்திற்கு 50 பைசாவிலிருந்து 60 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது. லேண்ட்லைன் அழைப்புகளுக்கான கட்டணம் 60 பைசாவிலிருந்து 90 பைசாவாக உயர்த்தப்பட்டுள்ளது.

ஏர்டெல்- ரிலையன்ஸ்

ஏர்டெல்- ரிலையன்ஸ்

பாரதி நிறுவனம், அனில் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனத்துடன் அண்மையில் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் மூலம் சந்தையில் அனைத்து தொலைபேசி நிறுவனங்களும் எந்தவிதமான தாக்குதலுக்கும் பயமின்றி, அமைதி-ஒத்துழைப்புடன் இருக்க முடியும் என நொமூரா தெரிவித்தது.

பின்வாங்கும் ஏர்டெல்

பின்வாங்கும் ஏர்டெல்

பாரதி ஏர்டெல் நிறுவனம், ஆப்ரிக்காவில் அளித்து வரும் தொலைபேசி சேவையில் ஆர்கானிக் அல்லது இன்-ஆர்கானிக் வளர்ச்சி அளவுகளில் சாதகமான செயல்பாடுகள் மூலம் முதன்மையான நிலையை அடைய முடியாத பட்சத்தில் தங்களுடைய சேவையை அங்கே நிறுத்தி விடவும் யோசித்து வருவதாக இந்த ஆய்வு நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை...
 

இலங்கை...

இலங்கையில் தொலைதொடர்பு சேவை அளிக்கும் நிறுவனங்களில் 5ஆம் இடத்திலுள்ள ஏர்டெல், பங்குச்சந்தையில் ஏற்றம் காணவில்லை எனில் பாரதி ஏர்டெல் நிறுவனம் இலங்கையிலிருந்தும் வெளியேறும் என எதிர்பார்ப்பதாக நொமூரா தெரிவித்தது.

6 மடங்கு லாபம் அதிகரித்தது....

6 மடங்கு லாபம் அதிகரித்தது....

பாரதி நிறுவனம் எஸ்.எம்.எஸ் சேவை மங்கும் நிலையில் இருப்பதாகவும், அதற்கு காரணம் மொபைல் இன்டர்நெட் சேவை மூலம் கிடைக்கும் வருவாய் எஸ்.எம்.எஸ் சேவையை விட 6 மடங்கு அதிகம் என கணித்துள்ளதாக நொமூரா தெரிவித்தது.

10% லாபம் கொண்ட இன்டர்நெட் சேவை

10% லாபம் கொண்ட இன்டர்நெட் சேவை

ஏர்டெல் நிறுவனத்தின் இன்டர்நெட் சேவையில் அதிகரித்து வரும் வருமானத்தை கணக்கில் கொள்ளும் போது, அது அவர்களின் மொத்த வருவாயில் 10 சதவிகிதமாக உள்ளதாக, நொமூரா தெரிவித்தது.

ஸ்பெக்ட்ரம் ஏலம்

ஸ்பெக்ட்ரம் ஏலம்

பாரதி ஏர்டெல் நிறுவனம் வரவிருக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலத்தை பற்றி கருத்து கூறவில்லை என்றும் ஆனால் அடுத்த வருடம் ஜனவரி 23ல் தொடங்கும் ஏர்வேவ்ஸ் நிறுவனத்தின் ஏல வேலையில் மும்முரமாக இருப்பதாகவும் நொமூரா தெரிவித்தது.

"பாரதி நிறுவனம் ஜனவரி 2014ல் நடைபெறும் ஏலத்தில் பங்கு பெற விரும்பும் என்று நினைக்கிறோம்" என நொமூரா தெரிவித்தது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel may increase mobile call rates by 10-20%: Nomura

Telecom major Bharti Airtel may increase mobile call rates by 10 to 20%, equity research firm Nomura said in a report.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X