இன்போசிஸ் நிறுவனத்தில் 8 உயர்மட்ட அதிகாரிகள் ராஜினாமா!!! மூர்த்தி தான் காரணமா???

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்து உயர் பதவி வகிக்கும் பலர் வெளியேறி வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக இன்போசிஸ் நிறுவனத்தின் பிபிஓ, பைனாக்லி, மற்றும் இந்திய வணிக பிரிவின் தலைபர் வி.பாலகிருஷ்ணன் கடந்த வாரம் வெளியேறினார். இதனால் நிறுவனம் தன் பிரகாசமான பொலிவை இழந்து நிற்கிறது.

 

இதன் எதிரொலியாக பங்குச்சந்தையில் இந்நிறுவனம் சரிவை சந்தித்துள்ளது. நேற்றைய வர்த்தகத்தில் இறங்கு முக பட்டியலில் முதல் இடத்தை பெற்றுள்ளது இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள். தேசிய பங்குச் சந்தையில் இந்த நிறுவனத்தின் பங்குகள் 1.5 சதவீதத்திற்கும் குறைவாக 3500 ரூபாய் மதிப்பிலான வணிகத்தில் ஈடுபட்டுள்ளது.

8 உயர் அதிகாரிகள்

8 உயர் அதிகாரிகள்

வி.பாலகிருஷ்ணன் அவர்கள் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறியது நிறுவனத்திற்கு மிகப்பெரிய இழப்பாக பார்க்கப்படுகிறது. இதுவே அவர்களுக்கு பெரிய பேரதிர்ச்சியையும் அளித்துள்ளது. நாராயண மூர்த்தி தலைவராக பதவியேர்த்த பிறகு மூத்த நிர்வாகக் குழுவில் இருந்து விலகியவர்களில் இவர் எட்டாவது நபர்.

நாராயண மூர்த்தியின் பதில்

நாராயண மூர்த்தியின் பதில்

நிறுவனத்தின் தலைவர் நாராயண மூர்த்தி ஒரு அறிக்கையில் கூறுகையில், " பாலாவின் மனக்கிளர்ச்சி மற்றும் ஒப்பிய பொறுப்பு இல்லாமல் இன்போசிஸ் நிறுவனத்தை கற்பனை செய்து கூட பார்க்க முடியவில்லை."

மாற்று அதிகாரிகள்

மாற்று அதிகாரிகள்

இந்த இடைப்பட்ட காலத்திற்கு திரு க்றிஸ் கோபாலகிருஷ்ணன் BPO வணிகத்திற்கு தலைமை வகிப்பார் என்றும் பி.ஜி ஸ்ரீனிவாஸ் லோட்ஸ்டோனின் தலைவராக பதவி வகிப்பார் என்றும் இந்நிறுவனம் அறிவித்துள்ளது.

அடுத்த சிஇஒ இவர் தான்...
 

அடுத்த சிஇஒ இவர் தான்...

பாலகிருஷ்ணன் அவர்கள் பிபிஒ வணிகத்தை தலைமை வகித்து வந்ததாலும் கடந்த 22 வருடமாக அவர் இன்போசிஸ் நிறுவனத்தில் இருந்ததாலும் அவர் வெளியேறியது இந்நிறுவனத்தை வெகுவாக பாதிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். சொல்லப் போனால், திரு ஷிபுலால்-க்கு பிறகு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அலுவலர் பொறுப்பை இவர் தான் ஏற்றுக் கொள்வார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டது.

பாலகிருஷ்ணனின் கருத்து

பாலகிருஷ்ணனின் கருத்து

இதைப்பற்றி பாலகிருஷ்ணன் கூறுகையில் எந்தவொரு பிரச்சனைக்காகவும் இன்போசிஸ் நிறுவனத்தை விட்டு வெளியேறவில்லை. "இன்போசிஸ் நிறுவனத்திற்கு வெளியே சென்று நான் எதையாவது செய்ய வேண்டும்" என்று அவர் கூறியுள்ளார்.

பங்கு நிறுவனத்தை துவக்க திட்டம்..

பங்கு நிறுவனத்தை துவக்க திட்டம்..

தன் வசமுள்ள இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் சிலவற்றை விற்று விட்டு, இப்போது ஒரு தனியார் பங்கு நிறுவனம் ஒன்றை தொடங்கியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys stock reacts to Balakrishnan's exit

The Infosys stock was among the top losers in trade, following the exit of V Balakrishnan from the company. The stock was trading lower by 1.5 per cent at Rs 3500 on the NSE.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X