வரி நிலுவை வழக்கில் சிக்கித் தவிக்கும் வோடஃபோன் நிறுவனம்!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 2007 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு ஹட்சிசன் வாம்போ மொபைல் சேவை வர்த்தகம் மூலமாக இந்தியாவிற்குள் நுழைந்து பல்வேறு சட்ட சிக்கல்களில் விழி பிதுங்கி நிற்கும் வோடஃபோன் நிறுவனம் இந்திய அரசு அதிகாரிகளிடமிருந்து மேலும் ஒரு 3,200 கோடி ரூபாய் வரி நிலுவை நோட்டீஸை பெற்றுள்ளது

 

இந்த பிரிட்டிஷ் தொலைதொடர்பு நிறுவனமான வோடஃபோன் இதை எதிர்த்து வழக்கு தொடர உள்ளதாகத் தெரிவித்துள்ளது.

வரி நிலுவை வழக்கில் சிக்கித் தவிக்கும் வோடஃபோன் நிறுவனம்!!!

கடந்த வருடம் வோடஃபோன் நிறுவனம் பல்வேறு நிறுவனங்களுக்கு அழைப்பு சேவைகளை வழங்கி வந்தது, இந்நிலையில் அந்நிறுவனத்தின் இந்திய கிளையின் வருவாய் கணக்கில் இந்திய அதிகாரிகள் சுமார் 8,500 கோடி ரூபாயை சேர்க்க விழைந்தது தொடர்பாக மாற்று விலை விவகாரம் (Transfer pricing) எனப்படும் ஓர் வழக்கினை உள்ளூர் நீதிமன்றத்தில் தொடர்ந்தது இந்நிறுவனம்.

செப்டம்பர் மாதம் மும்பை உயர்நீதிமன்றம் அரசு விதித்த இந்த இறுதி வரி கேட்பு ஆணைக்கு தடை விதித்தது.

மாற்று விலை எனப்படுவது நிறுவனங்கள் அவற்றின் சக குழும நிறுவனங்களுக்கிடையே வர்த்தகம் செய்வது அல்லது சொத்துப் பரிமாற்றம் செய்வதை குறிக்கும். விதி திட்டங்களின் படி, பல்வேறு நாடுகளில் உள்ள அக்குழும நிறுவன அங்கங்களுக்கிடையே நடைபெறும் பரிவர்த்தனைகள் தொடர்பில்லாத பிற வர்த்தக நிறுவனங்களுக்கிடையே நிகழும் சாதாரண வர்த்தகத்தைப் போலவே அல்லது போதிய இடைவெளியுடன் மதிப்பிடபடவேண்டும்.

"வோடபோன் இதுபோன்ற பரிவர்த்தனைகளுக்கு வரி செலுத்தத் தேவையில்லை, மேலும் இது தொடர்பாக ஒரு வேண்டுகோள் வரி வழக்குத் தீர்ப்பாயத்திடம் வைக்கப்படும்" என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. "வோடபோன், இந்த ஆணையை எதிர்த்து உறுதியுடன் தொடர்ந்து போராடும்" என்றும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவின் மிகப்பெரும் முதலீட்டாளரான வோடபோன் தன் ஹட்சிசன் தொலைதொடர்பு சேவைகளை துவங்கியதிலிருந்து, தொடர்ந்து பல்வேறு சமயங்களில் அரசு அதிகாரிகளுடன் வரி தொடர்பான கருத்து வேறுபாடுகளில் ஈடுபட்டு வந்தது. இந்த வர்த்தகத்தின் மூலம் அந்நிறுவனம் முதலீட்டு ஈட்டு வரி செலுத்த கடமைப்பட்டது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

 

இந்த மாற்று வரி வழக்கு ஏற்கனவே உள்ள 2 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கான வரி வழக்கிலிருந்து வேறுபட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone gets $604 million tax demand from Indian authorities

Vodafone Group Plc has received a final tax demand of about $604 million from Indian authorities, adding to its tax disputes in the country since it bought Hutchison Whampoa's mobile business there in 2007.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X