புது வருடத்தில் உங்கள் பர்சை பதம் பார்க்கும் ஆயுள் காப்பீடு!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: மத்திய அரசு சேவை வரியை ஆயுள் காப்பீடுகளுக்கும் விரிவாக்கியுள்ளது, இதனால் வரும் ஜனவரி மாதம் முதல் ஆயுள் காப்பீட்டு பாலிசிகள் மீதான ப்ரீமியத் தொகைகள் உயர உள்ளன.

 

இதன் மூலம் பாலிசிதாரர்கள் ஆயுள் காப்பீட்டு நிறுவனத்திற்கு செலுத்தும் ப்ரீமியத்தொகைகள் உயரும். பெரும்பாலான தனியார் நிறுவனங்கள் சேவை வரியை ஏற்கனவே தனியாக வசூலிக்கத் தொடங்கிவிட்டன.

 

சேவை வரியை தனியாக வசூல் செய்வதை உறுதி செய்த எல்ஐசி நிறுவன நிர்வாக இயக்குனரும், தென்மத்திய மண்டல தலைவருமான ஏ கே சாஹூ, பிரீமியத்தின் மீது விதிக்கப்படவுள்ள (சேமிப்பு அளவு ) சேவை கட்டணம் குறித்த விதிமுறைகளின் இறுதி வடிவம் ஒருவார காலத்திற்குள் வெளியிடப்படும் என்று பிசினெஸ் லைன் இதழுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்தார்.

புது வருடத்தில் உங்கள் பர்சை பதம் பார்க்கும் ஆயுள் காப்பீடு!!!

பாலிசி திட்டங்களுக்கு தகுந்த வகையில் வரி விகிதம் வேறுபாடு இருக்கும் என்று ஸ்ரீராம் லைப் இன்சூரன்ஸ் கார்பொரேஷன் தலைமை நிர்வாக அலுவலர் மனோஜ் குமார் ஜெயின் தெரிவித்தார்.

முதலீட்டு இணை (unit linked) பாலிசிகளுக்கு 12.36 விழுக்காடும் (முடிவுறும் அல்லது நிர்வாக கட்டணங்களின் மீது மட்டும்), வழக்கமான பாலிசிகளுக்கு அவை பெரும்பாலும் சேமிப்பில் சேருவதால் 3.09 விழுக்காடும், குறித்த கால திட்டங்களுக்கு 12.36 விழுக்காடும் வரி இருக்கும்.

"ஜனவரி 1ஆம் தேதி முதல் முழு மாற்றத்திற்குள்ளகவிருக்கும் இந்நடைமுறையை அடுத்து அனைத்து நிறுவனங்களும் இந்த புதிய விதிகளை அமல் படுத்துவதோடு வரி குறித்த தெளிவான விளக்கங்களையும் தரவேண்டும்" என அவர் மேலும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Your insurance policy will cost more from Jan 1

From January 1, your insurance policy will get costlier as the Government widens its service tax net to cover the policy premiums paid.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X