ரூ.50 லட்சம் ரூபாய் அபராதம்!! சிக்கியது ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: டெலிகாம் ஒழுங்குமுறை ஆணையமான டிராய், மக்களுக்கு வழங்கப்படும் சேவையின் தரத்துக்கென வரையறுக்கப்பட்ட சில கோட்பாடுகளை வைத்துள்ளது, இந்த விதிமுறைகளின் படி அனைத்து நிறுவனங்களும் செயல்பட வேண்டும். 2013 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தோடு நிறைவடைந்த இரண்டாம் காலாண்டின் போது இவ்விதிமுறைகளை எட்டத் தவறிய ஒன்பது மொபைல் ஆபரேட்டர்களின் மீது சுமார் 50 லட்ச ரூபாயை அபராதமாக விதித்துள்ளது டிராய்.

 

மேலும் இந்த ஒழுங்குமுறை ஆணையம், தரமான சேவைக்குரிய வரைமுறைகளுள் சுமார் 13 வரைமுறைகளை கடைபிடிக்காததை காரணம் காட்டி, மாநில அரசால் நடத்தப்படும் டெலிகாம் நிறுவனமான பிஎஸ்என்எல் மீது அதிகபட்சமாக சுமார் 14.5 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளதோடு, விடியோகான், லூப் மொபைல் மற்றும் மாநில அரசுக்குச் சொந்தமான எம்டிஎன்எல் ஆகியவற்றின் மீது அபராதம் எதுவும் விதிக்கவில்லை என்றும் அந்த ஆதாரங்கள் வாயிலாக அறியப்படுகின்றது.

 
ரூ.50 லட்சம் ரூபாய் அபராதம்!! சிக்கியது ஏர்டெல், வோடஃபோன் நிறுவனங்கள்..

குறிப்பிட்ட சில வரையறைகளை எட்டத் தவறியதால், ஏர்செல் மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ரிலையன்ஸ் டெலிகாம் உள்பட) மீது சுமார் 12.5 லட்ச ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

ஐடியா செல்லுலார் மீது சுமார் 3 லட்ச ரூபாயும், பாரதி ஏர்டெல் மற்றும் வோடஃபோன் ஆகியவற்றின் மீது தலா 2 லட்ச ரூபாயும், யுனிநார் மற்றும் வோடஃபோன் ஆகியவற்றின் மீது தலா 1.5 லட்ச ரூபாயும் இந்த ஒழுங்குமுறை ஆணையத்தால் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதாக ஆதாரங்கள் கூறுகின்றன.

சிஎம்டிஏ ஆபரேட்டரான எம்டிஎஸ் மீது சுமார் 50,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. நடைமுறையில் உள்ள சில விதிமுறைகளின் படி, மொபைல் சேவைகளுக்கான தரமான சேவைக்குரிய ஏதேனும் ஒரு வரைமுறையை மீறினால், டெலிகாம் ஆபரேட்டர்களின் மீது, சுமார் 50,000 ரூபாய் வரையிலான அபராதத்தையும், அதே தவறை மீண்டும் செய்வோரின் மீது சுமார் 1 லட்ச ரூபாய் வரையிலான அபராதத்தையும் விதிப்பதற்கு டிராய்க்கு அதிகாரம் உள்ளது.

உதாரணமாக, 2% (-க்கும் குறைவான) கால் டிராப் ரேட் பெஞ்ச்மார்க்கை எட்டத் தவறினால், அத்தகைய விதிமுறைகள் நடைமுறைக்கு வந்த பின்னான முதல் காலாண்டில் எட்டாத ஆபரேட்டர் மீது 50,000 ரூபாய்க்கு மிகாத தொகை அபராதமாக விதிக்கப்படும்.

அடுத்தடுத்த காலாண்டுகளிலும் இதே வரைமுறை, அதாவது கால் டிராப் ரேட் பெஞ்ச்மார்க் எட்டப்படாத சூழலில், இந்த ஆணையம் சுமார் 1,00,000 ரூபாய்க்கு மிகாத தொகையை அபராதமாக விதிக்கலாம்.

அதே நேரம், சர்வீஸ் பெஞ்ச்மார்க்கின் தரத்தைப் பற்றிய பொய்யான உடன்பாட்டு அறிக்கையை டெலிகாம் ஆபரேட்டர்கள் சமர்ப்பித்திருப்பது கண்டுபிடிக்கப்படும் பட்சத்தில், சுமார் 10 லட்சம் ரூபாய் வரையிலான அபராதம் விதிப்பதற்கு இந்த ஆணையத்துக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

மக்களை பல நூதன முறையில் ஏமாற்றும் இந்நிறுவனங்களுக்கு இந்த அபராம் போதாது...

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Airtel, Vodafone, others fined Rs 50 lakh for poor service

Telecom regulator Trai has imposed cumulative penalty of Rs 50 lakh on nine mobile operators for failing to meet quality of service benchmarks in the second quarter ended June 2013, official sources said.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X