லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிகர லாபம் 16.3% உயர்ந்தது!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: நிதியாண்டு 2012-13 -இன் போது, லைஃப் இன்சூரன்ஸ் துறையின் நிகர லாபம் கடந்த ஆண்டின் போது இருந்த 5,975 கோடி ரூபாயைக் காட்டிலும் சுமார் 16.3% அதிகரித்து 6,948 கோடி ரூபாயை எட்டியிருக்கிறது.

 

தற்போது இயங்கி வரும் 24 லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களுள், 17 நிறுவனங்கள் லாபம் ஈட்டியுள்ளதாகத், இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (ஐஆர்டிஏ) கடந்த புதன் கிழமையன்று வெளியிட்ட 2012-13 வருடத்துக்கான அதன் வருடாந்திர அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

நான்-லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் மொத்த நிகர லாபம் கடந்த ஆண்டில் இருந்த 25 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ள இவ்வருடத்தின் போது சுமார் 3,282 கோடி ரூபாயாக இருந்துள்ளது. அனைத்து பொதுத்துறை நிறுவனங்களும் லாபங்கள் ஈட்டியுள்ளதாக இத்தகவலறிக்கை கூறுகிறது.

லைஃப் இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிகர லாபம் 16.3% உயர்ந்தது!!

லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பொரேஷன் ஆஃப் இந்தியாவின் வர்த்தக அதிகரிப்பின் காரணமாக லைஃப் இன்சூரன்ஸ் துறையின் பிரதான வருவாய் சுமார் 2.87 லட்சம் கோடியாக உயர்ந்துள்ள அதே வேளையில் தனியார் இன்சூரர்களின் வர்த்தகம் சுமார் 7.4 சதவீதமாக சரிவடைந்துள்ளது.

எல்ஐஸியின் சந்தைப் பங்கு சுமார் 70.68 சதவீதத்திலிருந்து 72.70 சதவீதமாக அதிகரித்துள்ளது. மேலும் இந்த நிதியாண்டில் சுமார் 442 லட்சம் புதிய பாலிஸிகள் வழங்கப்பட்டுள்ளன.

அதே சமயம், இதர காரணங்களுள் முதன்மையானதாக, கமிஷன் செலவுகளின் அதிகரிப்பினால் நிர்வாக செலவுகள் உயர்வடைந்துள்ளன. நிர்வாகத்தின் கீழ் உள்ள சொத்துக்கள் சுமார் 11.5 சதவீதம் என்ற விகிதத்தில் 16.80 லட்சம் கோடி ரூபாய் வரை அதிகரித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Life insurers’ net profit rises 16.3% in FY13

During financial year 2012-13, the life insurance industry’s net profit grew 16.3 per cent to Rs 6,948 crore from Rs 5,975 crore in the previous year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X