இந்தியாவில் 30,000 சொகுசு கார்கள் விற்பனை!! வரலாற்று சாதனை..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: 2013 ஆம் ஆண்டின் இறுதியில் ஆடம்பர கார்களின் விற்பனை, உச்சகட்டத்தை தொட்டது, எந்த வருடமும் இல்லாத அளவில் 30,000 கார்கள் விற்பனையாகி உள்ளது.

 

சொகுசு கார்களின் விற்பனை மந்தமடைந்துள்ள இத்தருணத்தில் அதன் தயாரிப்பாளர்கள் தற்போதைய புதிய யுக்தியாக விலை குறைவான சொகுசு கார்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். முதன் முறையாக இத்தகைய கார்களை வாங்க முற்படுவோரை கவரும் வண்ணம் இத்தயாரிப்பாளர்கள் அதன் நெட்வொர்க்களை பெரு நகரங்களையும் தாண்டி விரிவாக்கம் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

ஜாகுவார் லேண்ட் ரோவர்

ஜாகுவார் லேண்ட் ரோவர்

2013 ஆம் ஆண்டில் ஜெர்மனியில் தயார் செய்யப்பட்ட சொகுசு கார்கள் அதிக அளவில் விற்பனையாகி இருந்தாலும் ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover-JLR) மற்றும் வோல்வோ கார்களின் விற்பனையும் வலிமையாகத்தான் இருந்தது.

போர்ஸ்சே, ரோல்ஸ்-ராய்ஸ்

போர்ஸ்சே, ரோல்ஸ்-ராய்ஸ்

இதர சொகுசு கார் தயாரிப்பாளர்களான போர்ஸ்சே, ரோல்ஸ்-ராய்ஸ், பென்ட்லே மற்றும் ஆஸ்டன் மார்டின் ஆகியவர்களும் தங்களது விற்பனையை அதிகப்படுத்தியுள்ளன.

விற்பனையில் ஆடி தான் முதல் இடம்
 

விற்பனையில் ஆடி தான் முதல் இடம்

2013 முதல் காலாண்டின் இறுதியில் அதிகபட்ச விற்பனையை எட்டிய சொகுசு காரான 'ஆடி' இந்த வருட இறுதியிலும் முதலிடம் வகிக்கும் என்று எதிர்ப்பார்க்கப்படுகின்றது. வருடாந்திர விற்பனையை பார்க்கும் போது ஆடி தான் இதுவரை இந்தியாவில் அதிகபட்சம் விற்பனையான சொகுசு கார் என்று கணக்கிடப்பட்டுள்ளது. ஆடி-இந்தியாவின் தலைவரான ஜோ கிங் கூறுகையில் 'இதுவரை கண்டிராக வகையில் 10,000 சொகுசு கார்களை ஒரே ஆண்டில் விற்பனை செய்த பெருமை நிச்சயம் எங்களை சேரும் என்று நாங்கள் நம்புகிறோம்' என்று தெரிவித்துள்ளார். 4

மெர்சிடஸ் பென்ஸ்

மெர்சிடஸ் பென்ஸ்

2013-ம் ஆண்டில் பிரசித்தி பெற்ற மெர்சிடஸ் பென்ஸ் நிறுவனமும் வலிமையான முறையில் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தி மகத்தான வெற்றியை தனது யுக்திகளின் மூலம் கொண்டு வந்துள்ளது.

இந்த ஜெர்மன் சொகுசு கார் நிறுவனம் 9000 கார்களை விற்பனை செய்து இரண்டாவது இடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதே நிறுவனம் சென்ற ஆண்டு 7138 கார்களை விற்பனை செய்துள்ளது.

8 புதிய கார்கள்

8 புதிய கார்கள்

'எட்டு புதிய கார்களை இந்த வருடம் அறிமுகப்படுத்திய மெர்சிடஸ்-பென்ஸ் சிறந்த முறையில் விற்பனை ஆகும் மாடல்களை தாயார் செய்துள்ளது. அவற்றில் A-கிளாஸ் லக்சரி காம்பாக்ட் மற்றும் ஜி.எல் கிளாஸ் லக்சரி எஸ்.யு.வி ஆகிய ஆடம்பர கார்களும் பெருமளவில் விற்பனையாகிக் கொண்டிருக்கின்றன. புதிதாக வந்த E-கிளாஸ் சொகுசான செடான்களின் வரிசையில் சிறந்ததாகவும், விற்பனையில் முதன்மையானதாகவும் பிரபலமாக உள்ளது. புகழ் பெற்ற எம்.எல்-கிளாஸ் மிகவும் பிரபலமானதாக இருந்து வரும் வேளையில், சி-கிளாஸ் மிகவும் நம்பகமானதாக ஆடம்பர காராக உள்ளது' என் மெர்சிடஸ்-பென்ஸின் மேனேஜிங் டேரக்டர் எபெர்ஹார்ட் கெர்ன் தெரிவித்துள்ளார்.

பிஎம்டபிள்யூ

பிஎம்டபிள்யூ

2012 ஆம் ஆண்டின் முதன்மையான ஆடம்பர காராக விளங்கிய பிஎம்டபிள்யு நிறுவனம், இந்த ஆண்டு இரண்டு இடங்கள் சறுக்கி மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. கார்களுக்கான ஆலோசனை நிறுவனம் ஒன்று கூறியுள்ள விவரப்படி BMW மற்றும் மினி ஆகிய இரண்டு நிறுவனங்களையும் சேர்த்து, ஜனவரி முதல் நவம்பர் வரையிலா காலத்தில் 8000 கார்களை விற்பனை செய்துள்ளன.

ஜாகுவார் லேண்ட் ரோவர்

ஜாகுவார் லேண்ட் ரோவர்

ஆடம்பர கார்களை அறிமுகப்படுத்தும் களத்தில் புதிதாக இறங்கியுள்ள JLR மற்றும் வால்வோ ஆகிய கார் நிறுவனங்கள் தங்களின் கால்களை இங்கு பதித்து முன்னேறி வந்துள்ளன. ஏறக்குறைய 2000 கார்களை 2013 ஆம் ஆண்டில் JLR விற்பனை செய்துள்ளது என்று கணக்கிடப்பட்டுள்ளது. 'ஜாகுவார் லேண்ட் ரோவர் (JLR) கடந்த வருடங்களில் பெருமளவு வெற்றியை சந்தித்துள்ளது. அது மட்டுமில்லாமல் மிகுந்த திருப்திகரமான விற்பனையையும் தெடர்ந்து பெற்று வருகின்றது.

வால்வோ கார் நிறுவனம்

வால்வோ கார் நிறுவனம்

கொல்கத்தா மற்றும் மேற்கு டெல்லியில் விரைவில் திறக்கப்பட உள்ள விற்பனை மையங்களை அடுத்து, வால்வோ கார் நிறுவனம் அதன் அடுத்த முயற்சியாக அகமாதாபாத், குர்கான், பெங்களுர் மற்றும் விசாகப்பட்டனம் ஆகிய இடங்களில் அதன் விற்பனை மையங்களை துவங்க உள்ளது.

15% முன்னேற்றம்

15% முன்னேற்றம்

'2012 ஆண்டை ஒப்பிட்டுப் பார்க்கும் போது ஏறக்குறைய நாங்கள் 15 சதவிகிதம் முன்னேறி தோராயமாக 1000 கார்கள் விற்பனையை அடைந்திடுவோம். இதன் மூலம் இந்தியாவில் வேகமாக முன்னேறி வரும் சொகுசு கார் தயாரிப்பாளர்களில் ஒருவராக வால்வோ இருக்கும். இந்தியாவில் நாங்கள் சரியான பாதையில் தான் உள்ளோம், மேலும் சந்தைகளில் நீண்ட காலம் நிலைத்து நிற்போம்' என வால்வோ ஆட்டோ இந்தியாவின் மேலாண் இயக்குனர் டோமஸ் எர்ன்பர்க் தெரிவித்துள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Sales of luxury cars set to cross 30,000 units in 2013

The luxury cars segment is set to report its highest ever annual volumes of over 30,000 units for the calendar year 2013.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X