ஸ்டீல் விலை உயர்வு!! கட்டுமான நிறுவனங்கள் அதிர்ச்சி!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்த புது வருடத்தில் இரும்பின் தேவைப்பாடு அதிகரிக்கும் என்ற நம்பிக்கையில் அதன் விலையை டன்னிற்கு 1,500 ரூபாய் வரை அதிகரித்துள்ளனர் நம் நாட்டின் எஃகு உற்பத்தியாளர்கள். உட்பாடு செலவு மற்றும் சரக்கு கட்டணத்தின் உயர்வை ஈடு செய்யும் விதமாகவும் இந்த விலை உயர்வு அமைந்துள்ளது.

"அனைத்து இரும்பு உற்பத்தியாளர்களும் அதன் விலையை டன்னிற்கு 1,000 ரூபாய் முதல் 1,500 ரூபாய் வரை உயர்த்தியுள்ளனர். அதிகரிக்கும் உட்பாடு செலவுகள் மற்றும் சரக்கு கட்டணங்களை ஈடு செய்து விளிம்பு நிலை சரிவை சந்திக்காமல் இருக்கவே இந்த உயர்வு." என்று தனியார் இரும்பு தொழிற்சாலையை சேர்ந்த ஒரு நிர்வாகி கூறியுள்ளார்.

ஸ்டீல் விலை உயர்வு!! கட்டுமான நிறுவனங்கள் அதிர்ச்சி!!

இந்த விலை உயர்வை தொடர்ந்து, இரும்பு பொருட்களின் குறியீடாக விளங்கும் ஹாட் ரோல்ட் காயிலின் (HRC) விலை டன்னிற்கு, 37,500 ரூபாயிலிருந்து 39,500 ரூபாயாக உயர்ந்துள்ளது.

போட்டியை நிலைநிறுத்திட இரும்பின் விலையை முன்பின்னாக உயர்த்திய வண்ணம் உள்ளனர் இரும்பு உற்பத்தியாளர்கள். ஆனால் இந்த தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவருமே இந்த இடைவெளியில் தான் விலையை உயர்த்தியுள்ளார்களா என்பதை உறுதி செய்ய முடியவில்லை.

கடைசியாக கடந்த வருடம் செப்டம்பர் மாதம் டன்னிற்கு 2,500 ரூபாய் வரை உயர்த்தினார்கள் இரும்பு உற்பத்தியாளர்கள். ஆனால் அதன் பிறகு NMDC இரும்புத் தாதுவின் விலையை டன்னிற்கு 100 ரூபாய் அதிகரித்தும் கூட, இரயில் துறை அக்டோபர் முதல் விலையை உயர்த்தினாலும் கூட இவர்கள் விலையை உயர்த்தாமல் இருந்தனர்.

ஸ்டீல் விலை உயர்வு!! கட்டுமான நிறுவனங்கள் அதிர்ச்சி!!

கட்டுமானம் மற்றும் வெண்ணிற பொருட்களின் வாடிக்கையாளர்களின் தேவைப்பாடு பெருமளவில் குறைந்ததால், சந்தையின் சூழ்நிலையும் கீழ்ப்படுத்தது. இதனாலும் அவர்களால் விலையை உயர்த்த முடியவில்லை. இந்தியாவின் நடப்பு நிதியாண்டில் ஏப்ரல்-நவம்பர் மாத கால கட்டத்தில் இரும்பின் தேவைப்பாடு 0.4 சதவீதம் அதிகரித்துள்ளது.

"இந்த விலை உயர்வுக்கு முக்கிய காரணமே இரும்புத் தாது மற்றும் இரயில் கட்டணங்களின் உயர்வே. இந்த இரண்டும் சேர்த்து இரும்பு உற்பத்தியின் செலவை டன்னிற்கு 700 ரூபாய் வரை அதிகரித்துள்ளது." என்று அந்த நிர்வாகி தெரிவித்துள்ளார்.

டாடா ஸ்டீல் மற்றும் ஸ்டீல் அதாரிட்டி ஆஃப் இந்தியா (SAIL) ஆகிய நிறுவனங்களை தவிர்த்து, இதர இரும்பு நிறுவனங்கள் அனைத்தும் தங்களுக்கு தேவையான இரும்புத் தாதுவை NMDC-யிடம் வாங்குகிறது. அரசாங்க துறையை சேர்ந்த நிறுவனங்கள் கடந்த டிசம்பர் மாதம் ஒரு டன்னின் விலையை 200 ரூபாய் அதிகரித்துள்ளதால் தனியார் இரும்பு உற்பத்தியாளர்களை பாதித்துள்ளது. ஒரு டன் இரும்பை தயாரிக்க 1.6 டன் இரும்புத் தாது தேவைப்படுகிறது.

"கடந்த அக்டோபர் முதலே பல விலை உயர்வுகளை இரும்பு உற்பத்தியாளர்கள் சந்தித்து வருகிறார்கள். இப்போது அவர்களின் விளிம்பு நிலையை அது பாதிக்க தொடங்கியுள்ளது. அதனால் டன்னிற்கு 1,000 ரூபாய் வரை இரும்பின் விலை உயர்த்தப்பட உள்ளது", என்றும் அவர் கூறினார்.

வாடிக்கையாளர்களிடம் இந்த விலை உயர்வை கொண்டு செல்ல இரும்பு உற்பத்தியாளர்கள் இன்னொரு காரணத்தையும் கூறுகின்றனர். ஏற்றுமதியில் அவர்களின் பங்களிப்பு அதிகமாக உள்ளதால் உள்ளூர் சந்தையில் அதிகமாக உள்ள கொள்ளளவு குறையத் தொடண்டியதும் ஒரு காரணமாக கூறப்படுகிறது.

SAIL, எஸ்ஸார் ஸ்டீல், ஜிண்டால் ஸ்டீல் அண்ட் பவர் மற்றும் JSW ஸ்டீல் போன்ற முன்னணி இரும்பு நிறுவனங்கள், தேவைப்பாட்டை உயிர்பிக்க எண்ணி, ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில் விலையை உயர்த்தியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Steel makers raise price by upto Rs.1,500 per tonne

Hoping demand for steel to pick up in the new year, domestic producers have raised its price by upto Rs.1,500 a tonne to offset rising input costs and higher freight charges.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X