விர்ச்சுவல் நாணயத்தை வெளியிடும் இ-பே நிறுவனம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

வாஷிங்டன்: இணையதள வர்த்தக நிறுவனமான இபே, இதன் கிளை நிறுவனமான பேபால் நிறுவனத்தின் உதவியுடன் தன்னுடைய உள்பரிமாற்றத்திற்கான ஒரு மாற்றுப்பணத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளது. மேலும் இத்திட்டத்திற்கு காப்புரிமை பெற விண்ணப்பித்துள்ளதாகத் தெரிகிறது.

இந்த காப்புரிமை விண்ணப்பம் ஒருவகையான பாதுகாப்பான டோக்கன்களை வழங்கி வாடிக்கையாளர்கள் அதன் மூலம் மறைமுகமாக எந்த பணபரிமாற்ற பதிவும் இன்றி பொருட்களை வாங்க உதவும் ஒரு திட்டத்தினை இபே நிறுவனம் வடிவமைத்துள்ளது.

சமூக மற்றும் தொழில்நுட்ப இணையதளமான மாஷஏபிள் கூற்றுப்படி இந்த காப்புரிமை திட்டத்தின் படி டோக்கனைப் பெரும் நபர் பணம் வழங்கும் நிறுவனத்தின் சிறு சரிபார்த்தலுக்குப் பிறகு ஒரு பொருளை வாங்கிக் கொள்ளலாம், இதன்முலம் ஒருவர் தன்னுடைய வங்கி அல்லது நிதி நிறுவனத்தை நாடாமல் இதை செய்ய முடியும்.

விர்ச்சுவல் நாணயத்தை வெளியிடும் இ-பே நிறுவனம்!!

இத்திட்டத்தின் படி டோக்கன்கள் பரிசுப் பொருட்களை வாங்க மற்றும் வழங்க பயன்படும் என குறிப்பிட்டாலும், பொதுவாக அது ஒரு பணத்திற்கு மாற்றான கருவியாக பயன்படும் எனத் தெரிகிறது. இதை வைத்து இபே-விற்கு வெளியிலும் பொருட்களை வாங்க முடியும் என்பதோடு, ஏற்கனவே சந்தையில் உள்ள பிட்காயின், டாகிக்காயின் மற்றும் லைட்காயின் போன்றவற்றிற்கு பேபால் பரிந்துரைக்கும் இத்திட்டம் ஒரு போட்டியாக விளங்கும்.

பேபால் நிறுவனத் தலைவர் டேவிட் மார்கஸ் கூறுகையில், இந்த டோக்கன் பணமாக பயன்படுத்த மாட்டாது எனவும் அதன் விலை நிறைய மாறுதல்களுக்கு உள்ளாவதால் அது நடைமுறையில் சாத்தியமில்லை எனவும் தெரிவித்தார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: gift பரிசு ebay
English summary

eBay likely to launch own virtual currency

Online commerce site eBay’s PayPal has reportedly filed a patent application that hints to a possible launch of its own virtual currency.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X