அமேசான் போலவே ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் நஷ்டத்தில் இயங்குகிறது...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரிய இணையதள சில்லறை வியாபாரியான ஃப்ளிப்கார்ட் நிறுவனம், கடந்த நிதியாண்டு முடிவான மார்ச் மாதத்தில், 281.7 கோடி ரூபாய் நஷ்டத்தை சந்தித்துள்ளதாக அறிவித்துள்ளது. இது கடந்த வருட நஷ்டமான 109.9 கோடி ரூபாயை விட மிகவும் அதிகமானது. வருவாயை அதிகரிக்க செலவுகள் அதிகமானதே இதற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

 

சென்ற வருடம் 1,180 கோடி ரூபாயாக இருந்த அதன் வருவாய் இந்த வருடம் ஐந்து மடங்கு குறைந்து 204.80 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. நிறுவனங்களின் பதிவாளர்களிடம் அதன் ஆவணங்களை சமர்ப்பிக்கையில் இந்த தகவல் வெளியானது.

அமேசான் போலவே ஃப்ளிப்கார்ட் நிறுவனமும் நஷ்டத்தில் இயங்குகிறது...

சென்ற வருடம் 265.6 கோடி ரூபாயாக இருந்த ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் செலவுகள் இந்த வருடம் ஐந்து மடங்கள் அதிகரித்து 1,366 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இந்த நிதியாண்டின் தொடக்கத்தில் பண இருப்பு 166.2 கோடி ரூபாயாக குறைந்துள்ளது. அதற்கு முந்தைய ஆண்டில், பண இருப்பு 236 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

நஷ்டங்கள் அதிகரித்தாலும் கூட அதன் விற்பனைகளும் அதிகரித்து கொண்டே தான் இருக்கிறது. இதன் காரணமாக ஃப்ளிப்கார்ட் நிறுவனத்தின் வருவாய் அதிகரித்து பங்குச் சந்தையிலும் அதன் மதிப்பு அதிகரித்துள்ளது. அமெரிக்காவில் அமேசான்.காம் நிறுவனமும் இதையே தான் பின்பற்றியது.

இதற்காக ஃப்ளிப்கார்ட் கடந்த 5 வருடத்தில் 550 மில்லியன் டாலருக்கும் மேலாக நிதியை திரட்டியுள்ளது. இந்த வருடம் திரட்டிய 360 மில்லியன் டாலரும் இதில் அடங்கும். இருப்பினும் சீரான வளர்ச்சியை அதன் வழியில் காண, ஃப்ளிப்கார்ட் நிறுவனம் பெரிதும் திணறி வருவதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.

ஃப்ளிப்கார்ட் இந்தியாவின் ஆடிட்டர்களான எஸ்.வி.கடாலியா & அசோசியேட்ஸ், நிறுவனத்தின் கணக்கு வழக்குகளில் சில இடங்களில் சிக்கல்கள் இருந்தாலும் கூட பொதுவாக பார்க்கும் போது எல்லாம் மிகவும் சரியாக உள்ளதென்று தங்களை அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

 

"எங்களின் கருத்துப்படியும், நாங்கள் இங்கே கொடுத்துள்ள தகவல் மற்றும் விளக்கங்களின் அடிப்படையிலும், நிறுவனத்திடம் உள்ள போதுமான உட்புற கட்டுப்பாட்டு அமைப்பு, நிறுவனத்தின் அளவுடனும், நிலையான இருப்பு கொள்முதல் மற்றும் பொருட்கள், சேவைகளின் விற்பனைகளின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும் தொழிலின் வகையிடனும் ஒப்பிடத்தக்க வகையில் உள்ளது." என்று ஆடிட்டர்கள் கூறியுள்ளார்கள்.

"இருப்பினும், சரக்கு கொள்முதல் அடிப்படையில் பார்க்கும் போது உட்புற கட்டுப்பாட்டு அமைப்பை வலுப்படுத்த வேண்டும். அப்போது தான் நிறுவனத்தின் அளவுடனும் தொழிலின் வகையிடனும் ஒப்பிடத்தக்க வகையில் அமையும். எங்கள் கருத்துப்படி, உட்புற கட்டுப்பாட்டு அமைப்பில் உள்ள மிகப்பெரிய பலவீனத்தை சரி செய்வதில் இது தொடர்ச்சியான தோல்வியே".

"செய்முறைகள் மற்றும் நிதி சார்ந்த உட்புற கட்டுப்பாடுகளை சரியாக அமைத்திட தொழில்நுட்பத்தில் பெருமளவில் முதலீடு செய்யும் செயல்முறைகளை நிறுவனம் கொண்டு வரவுள்ளது" என்று ஃப்ளிப்கார்ட் இந்தியாவின் இயக்குனர்கள் ஆண்டு அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Flipkart India reports loss of Rs.281.7 crore

India’s largest online retailer Flipkart, reported a loss of Rs.281.7 crore in the year ended March, much wider than its loss of Rs.109.9 crore in the previous year, as it significantly raised spending to increase revenues.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X