இந்தியாவில் எண்ணை உற்பத்தியை அதிகரிக்க ரூ.54000 கோடி முதலீடு!! ஒஎன்ஜிசி..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இந்தியாவின் மாபெரும் எரிசக்தி நிறுவனமான இந்திய எண்ணை மற்றும் எரிவாயு நிறுவனம் (ஒஎன்ஜிசி) நாட்டின் கிழக்குக் கடற்கரை பகுதிகளில் புதியாதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள எண்ணை மற்றும் எரிவாயு வளங்களுக்காக சுமார் 9 பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதாவது 54,000 கோடி ரூபாயை அடுத்த பத்து ஆண்டுகளில் முதலீடு செய்ய ஒஎன்ஜிசி திட்டமிட்டுள்ளது.

 

பெட்ரோலியத் துறையின் கீழ் இயங்கும் ஹைட்ரோகார்பன்கள் இயக்குனரகம் கடந்த மாதம் வெளியிட்ட அறிக்கையை மேற்கோள் காட்டி ஒஎன்ஜிசியின் இயக்குனர் என்.கே.வர்மா தொலைபேசிப் பேட்டியின் போது கூறுகையில் "வங்காள விரிகுடாவில் கடந்த ஆண்டு தோண்டப்பட்ட மூன்று கிணறுகள் வர்த்தக பயன்பாட்டிற்கு ஏற்றாதாக உள்ளன" என்றார். முன்னர் செய்யப்பட்ட கண்டுபிடிப்புகளுடன் புதிய எண்ணை இருப்புகளும் விரிவாக்கப்படுவதோடு 2016ஆம் ஆண்டில் உற்பத்தியை துவங்கும் என அவர் தெரிவித்தார்.

பிற நாட்டை சார்ந்திருக்கும் இந்தியா!!..

பிற நாட்டை சார்ந்திருக்கும் இந்தியா!!..

இந்த புதிய கண்டுபிடிப்புகள் எண்ணை மற்றும் எரிவாயு உற்பத்திய உயர்த்த போராடும் ஒஎன்ஜிசியின் 30 ஆண்டு கால முயற்சிகளை எளிதாக்குவதோடு எண்ணை மற்றும் எரிவாயுத் தேவைகளுக்காக 80 சதவிகிதம் அந்நிய நாட்டை சார்ந்திருக்கும் நம் நாட்டின் இறக்குமதி செலவுகளையும் பெருமளவில் குறைக்க உதவும்.

லாபத்தில் சரிவு

லாபத்தில் சரிவு

குறைந்த உற்பத்தி மற்றும் செலவுகளுக்கும் குறைவான விலையில் செய்யப்படும் விற்பனை ஆகியவை ஒஎன்ஜிசியின் லாபத்தை கடந்த 12 ஆண்டுகளில் இல்லாத குறைவான அளவுகளுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

அதிகளவில் உற்பத்தி துவங்கும்..
 

அதிகளவில் உற்பத்தி துவங்கும்..

"இந்த கண்டுபிடிப்புகள் பெருமளவு எண்ணையை கொண்டுள்ளதாகத் தெரிகிறது" என்ற அவர் "எங்களால் தேவையான அளவு ஹைட்ரோகார்பன்களை கண்டுபிடிக்க முடியவில்லை என்ற விமர்சனங்களை நாங்கள் எங்களால் இயன்ற அளவு சிறப்பாக உற்பத்தியை உயர்த்த செயலாற்றிக் கொண்டிருக்கிறோம்" என மேலும் கூறினார்.

பங்கு சந்தை நிலவரம்

பங்கு சந்தை நிலவரம்

மும்பை பங்கு சந்தையில் ஒஎன்ஜிசியின் பங்குகள் 4.95% சதவிகிதம் சரிந்து 276.15 ரூபாய்க்கு விற்கப்பட்டது. இப்பங்குகள் 2013 ஆம் ஆண்டில் 7.8 சதவிகித அளவிற்கு லாபமடைந்தன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

ONGC to spend $9 billion developing new oil discoveries in India

India’s biggest energy explorer ONGC, plans to spend about $9 billion over the next decade to produce crude oil and natural gas discovered in new blocks off the nation’s east coast.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X