தரம் குறைவான கார்.. 1.25 லட்சம் நஷ்ட ஈடு.. டாடா மோட்டார்ஸ்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் வாடிக்கையாளர் ஒருவர் வாங்கிய கார், வாங்கிய முதல் ஆண்டிலேயே பல சிக்கல்களை உண்டாக்கியது. இதனால் கடுப்படைந்த வாடிக்கையாளர் வழக்கு தொடுத்தார். இப்புகாரின் அடிப்படையில் நுகர்வோர் அமைப்பு ஒன்று டாடா மோட்டார் நிறுவனத்தை ரூ.1.25 லட்சத்தை நஷ்ட ஈடாக வாகன உரிமையாளருக்கு கொடுக்க வேண்டும் என்று அறிக்கை விடுத்துள்ளது.

 

புது டெல்லி நுகர்வோர் குறை தீர்க்கும் சங்கத்தினர் இப்புகாரை ஆராய்ந்ததில், இந்த புதிய நான்கு சக்கர வாகனத்தை வாங்கிய அந்த நபருக்கு தரம் குறைந்த காரை விநியோகம் செய்ததால் மகிழ்ச்சியும், மனநிறைவும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மூலம் கிட்டவில்லை என்று அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கோளாறு நிறைந்த கார்

கோளாறு நிறைந்த கார்

வாங்கப்பட்ட காரில் செய்யப்பட்ட மாற்றங்கள் அதாவது இயந்திர கோளாறுகள் மற்றும் இதர பாகங்களின் கோளாறுகள் குறித்த வேலைக்கான அட்டவணையை பார்க்கும் போது தெரிய வந்துள்ளது.

முதல் வருடமே இப்படி!!

முதல் வருடமே இப்படி!!

இந்த கோளாறுகள் அனைத்தும் காரை வாங்கிய முதல் ஆண்டிலேயே வந்ததும் தெரிய வந்துள்ளது.

டாடா மோட்டார்ஸின் தவறு

டாடா மோட்டார்ஸின் தவறு

இந்த காரில் இன்ஜின் மாற்றப்பட்டும் மற்றும் பல பாகங்களும் மாற்றப்பட்டும், ஒரு புதிய வாகனம் வாங்கி அதன் மூலம் நமக்கு கிடைக்கும் இன்பத்தையும், மன திருப்தியையும் அறவே தர மறுத்து விட்டது டாடா மோட்டார்ஸ். இந்த பழுதுகளை சரி வர கவனிக்காமல் அதன் தரத்தை மதிப்பிடாமல் காரை விநியோகம் செய்துள்ளது டாடா மோட்டார்ஸ் நிறுவனம். இது முற்றிலும் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் தவறு.

நஷ்ட ஈடு..
 

நஷ்ட ஈடு..

'2013-ஆம் ஆண்டில் இந்த கார் உறுதியான நிலையில் மாற்றி தர வேண்டும் என்பது கடினமான ஒன்று. ஆகையால் இதை கருத்தில் கொண்டு டாடா மோட்டார்ஸ் மீதுள்ள தவறின் அடிப்படையில் நஷ்ட ஈடாக ஒரு லட்சம் ரூபாயும் மற்றும் வழக்கை நடத்தியதற்காக 25,000 ரூபாயும் தரும் படி செய்துள்ளோம்' என்று சி.கே.சதுர்வேதி தலைமையிலான பெஞ்ச் குறிப்பிட்டுள்ளது.

விளக்கம் தர மறுப்பு!!

விளக்கம் தர மறுப்பு!!

டெல்லியை சேர்ந்த காலித் ஹாஸ்மி கொடுத்துள்ள புகாரை சாதாரணமாக புறக்ணித்த டாடா மோட்டார் அந்நிறுவனம், 'ஒரு ஆண்டுக்குள் எப்படி இவ்வளவு பிரச்னைகள் அந்த புதிய காரில் வந்தது என்பதற்கும் விளக்கம் தரவில்லை என்பதையும் இந்த சங்கம் கவனித்துள்ளது.

பிரச்சனை!! பிரச்சனை!!

பிரச்சனை!! பிரச்சனை!!

ஹாஸ்மி கொடுத்த புகாரில் இந்த கார் ஜுலை 2004 ஆம் ஆண்டு வாங்கிய வாகனம் என்றும், வாங்கிய முதல் ஆண்டிலேயே இன்ஜின் மற்றும் பல பாகங்களில் கோளாறுகள் ஏற்பட்டதாகவும், இதை மாற்றி அமைத்த போதும் பிரச்சனைகள் சரியாகவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Tata Motors asked to pay Rs 1.25 L for selling defective car

A consumer forum here has directed Tata Motors Ltd to pay Rs 1.25 lakh as compensation to one of its customers whose car developed numerous defects within the first year of its purchase.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X