நியூயார்க்கில் கால் பதித்தது கனரா வங்கி!!... புதிய கிளை திறப்பு..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: நியூயார்க் மாகாணத்தில் கூடிய விரைவில் கனரா வங்கி கிளையை திறக்கப்படும், இதற்கான ஒப்புதலை அமெரிக்க வங்கி கட்டுப்பாட்டு அதிகாரிகளிடம் பெற்றதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது.

 

"பெடரல் ரிசர்வ் அமைப்பை சேர்ந்த ஆளுநர்கள் குழுவிடமிருந்து கட்டுப்பாட்டு ஒப்புதலை வாங்கி விட்டோம். அதனால் நியூயார்க்கில் எங்கள் கிளையை விரைவில் துவங்க உள்ளோம்", என கனரா வங்கியின் இயக்குனர் ஏ.கே.குப்தா ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றப் போது தெரிவித்தார்.

இந்த கிளையின் மூலம், அமெரிக்க சந்தைக்குள் கனரா வங்கி நுழைய உள்ளது என்றும் அவர் மிக பெருமிதமாக கூறினார். இது மட்டும் அல்லாது துபாய், டோக்கியோ, பிராங்பேர்ட் (ஜெர்மனி) மற்றும் கத்தார் போன்ற உலக நாடுகளிலும் தன் கிளையை துவங்க முனைந்துள்ளது கனரா வங்கி.

5 உலக நாடுகளில் கிளைகள்

5 உலக நாடுகளில் கிளைகள்

தற்சமயம் பெங்களூரை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த வங்கி லண்டன், லெய்செஸ்டர், ஷாங்காய், மனாமா மற்றும் ஹாங்காங் என ஐந்து வெளிநாட்டுகளில் தன் கிளையை கொண்டுள்ளது.

கடன் பத்திரங்கள்

கடன் பத்திரங்கள்

வங்கியின் முதலீட்டை அதிகரிக்க சென்ற மாதம் கடன் பத்திரங்கள் மூலமாக 1,500 கோடி ரூபாய் திரட்டியுள்ளது. அதன் மூலதனம் 500 கோடிக்கு மேல் உயர்த்தப்படவுள்ளதால், மார்ச் 2014-ஆம் வருடத்திற்குள் வங்கிக்குள் உட்செலுத்த வேண்டும் என கனரா வங்கி முடிவு செய்துள்ளது.

2 முக்கிய குறிக்கோள்..
 

2 முக்கிய குறிக்கோள்..

அரசாங்கத்தின் இந்த மூலதன உட்செலுத்துதலுக்கு இரண்டு குறிக்கோள்கள் உள்ளது. ஆக்க வளமுடைய துறையின் நிதி தேவைப்பாட்டை போதுமான அளவோடு சந்திப்பது, பொது துறை வங்கிகளிடம் போதுமான விகிதத்தில் கட்டுப்பாட்டு மூலதனத்தை பராமரித்தல்.

நிதி வலிமை..

நிதி வலிமை..

வங்கி உட்புறமாக திரட்டப்பட்ட மூலதனத்தை போக, பொதுத்துறை வங்கிகளில் அரசாங்கத்தின் உட்செலுத்துதல் நடைபெறும். இப்படி செய்வதால் டையர்-1 பங்குகள் அல்லது மூலதனம் என அனைத்திலுமே வங்கிகள் வசதி வாய்ப்புடன் விளங்கும்.

நிதி அமைச்சகம்

நிதி அமைச்சகம்

2012-13 நிதியாண்டில் 13 பொது துறை வங்கிகளில் 12,517 கோடி ரூபாய் உட்செலுத்தப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 14,000 கோடி ரூபாயை உட்செலுத்த நிதி அமைச்சகம் திட்டமிட்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Canara Bank to open branch in New York shortly

State-owned Canara Bank today said it will soon open a branch in New York as it has got regulatory approvals from the US authorities.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X