எதிர்பார்ப்புகளை மிஞ்சும் 3ஆம் காலாண்டு முடிவுகள்!! இன்போசிஸ்

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெங்களூரு: இந்தியாவின் மிகப்பெரும் மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான இன்போசிஸ் வெள்ளிக்கிழமை அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலண்டு முடிவுகளை வெளியிட்டது. இவ்வறிக்கையில் அக்டோபர் முதல் டிசம்பர் மாத இடைப்பட்ட காலத்தின் வியாபாரம் ரூ.13,026 கோடிகள் என்றும் அதில் மொத்த இலாபம் ரூ.2875 கோடிகள் என்றும் இந்நிறுவனம் தெரிவித்தது.

என்.டி.டிவியால் தரகர்களிடம் நடத்தப்பட்ட கருத்து கணிப்புகளில் இந்தியாவின் இரண்டாவது பெரிய அவுட்சோர்ஸிங் நிறுவனமான இன்போசிஸ் நிறுவனம் அக்டோபர் முதல் டிசம்பர் மாதங்களில் ரூ.13,063 கோடிகளை விற்பனையாகவும் மற்றும் ரூ.2786 கோடிகளை இலாபம் பெறும் என அறிவித்தது.

இ-பிட்(Ebit) அல்லது செயல்பாட்டு இலாபமானது (Operating Margins) 24.1 சதவிகிதத்தில் இருந்து 25 சதவிகிதமாக உயர்ந்துள்ளது.

UBS நிறுவனத்தை சேர்ந்த கௌதம் சாஹவோசாரியா, இன்போசிஸின் விற்பனை மதிப்பீடு செய்ததை விட குறைவாக இருந்தாலும், இலாபம் நேர்மறையான வகையில் ஆச்சரியப்படுத்தியுள்ள என்று NDTV-க்கு தெரிவித்தார். செலவுகளை குறைத்ததன் காரணமாக இலாபம் உயர்ந்ததற்கான பெரிய தாக்கமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

பங்கு சந்தையில் உயர்வு..

பங்கு சந்தையில் உயர்வு..

திறந்தநிலை வியாபாரத்திற்கு முன்னர் 10 சதவிகித அளவிற்கு உயர்த்தியதால் 2 சதவிகிதமளவிற்கு இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் உயர்ந்துள்ளன. காலை 9:18 மணியளவில், இன்போசிஸ் 1.2 சதவிகிதம் அதிகமாக ரூ.3,494-க்கு விற்பனை செய்தது.

ஜடி துறை பங்குகள்

ஜடி துறை பங்குகள்

மும்பை பங்குச்சந்தையில் 0.1 சதவிகிதம் சரிவு இருந்தாலும் கூட, பரந்த தகவல் தொழில்நுட்ப அளவுகளில் 0.76 சதவிகிதம் அதிகமாகவே விற்பனை நடந்துள்ளது.

டாலர் வருவாய்

டாலர் வருவாய்

தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் மிகவும் முக்கியமானதாக கருதும் டாலர் வருமானங்கள், இக்காலண்டில் இன்போசிஸ் நிறுவனம் சுமார் 2,100 மில்லியன் டாலர்களாக இருந்ததாக இந்நிறுவனம் தெரிவித்தது. இந்நிறுவனம் டிசம்பர் காலாண்டில் 2,109 மில்லியன் டாலர்களை எட்டும் என்று ஆய்வாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 

 

எதிர்பார்ப்புகளை மிஞ்சியது..

எதிர்பார்ப்புகளை மிஞ்சியது..

இந்நிறுவனம் வால் ஸ்ட்ரீட்-ன் மதிப்பீடுகளையும் தாண்டி வருடாந்திர விற்பனைகளை எட்டியுள்ளது. 2013-14-ம் ஆண்டில் தொடக்கத்தில் 9-10 சதவிகிதமாக இருக்கும் என்று மதிப்பிடப்பட்ட வளர்ச்சியைத் தாண்டி 11.5 முதல் 12 சதவிகிதமாக வளர்ந்துள்ளதாக இன்போசிஸ் குறிப்பிட்டது. ஆய்வாளர்களும் இந்நிறுவனத்தின் வழிகாட்டுதல்களை 10-12 சதவிகிதமாக உயர்த்தும் என எதிர்பார்க்கின்றனர்.

 

 

விடுமுறைகளாள் வர்த்தகம் மந்தமானது..

விடுமுறைகளாள் வர்த்தகம் மந்தமானது..

குறைவான வேலை நாட்கள் இருப்பதாலும் மற்றும் இந்திய தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் முக்கியமான சந்தையாக இருக்கும் அமெரிக்கா-ஐரோப்பாவில் ஆண்டு இறுதி நாட்களில் இருக்கும் விடுமுறைகளாலும் மூன்றாவது காலண்டில் அவுட்சோர்சிங் நிறுவனங்களின் வருமானம் அரைகுறையாகவே இருக்கும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Infosys Q3 net profit rises to Rs. 2,875 crore, beats Street

Infosys on Friday posted consolidated net profit of Rs. 2,875 crore on sales of Rs. 13,026 crore for the October to December quarter.
Story first published: Friday, January 10, 2014, 17:21 [IST]
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X