புதிய சிஇஒ யார்??.. குழப்பத்தில் மைக்ரோசாப்ட் நிறுவனம்...

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சியாட்டில்: மைக்ரோசாப்ட் நிறுவனம் தலைமை நிர்வாக அதிகாரி ஸ்டீவ் பால்மர் பதிவி விலகியைதை அடுத்து இந்நிறுவனம் அப்பதவியில் சரியான நபரை அமர்த்த பல முயற்சிகள் எடுத்துவந்து. இந்நிலையில் மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியை(CEO) அறிவிக்கும் நேரம் நெருங்கி விட்டது.

 

அந்நிறுவனத்தைப் பற்றி கிடைத்த செய்தியின் படி, ஃபோர்டு நிறுவனத்தின் தலைமை பொறுப்பு வகித்துக் கொண்டிருக்கும் ஆலன் முல்லாலி முதன்மையான வேட்பாளராக தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

ஆனால் கடந்த செவ்வாய்கிழமையன்று அவர் இந்த பொறுப்பில் தான் சேர முடியாது என்று தெரிவித்துள்ளார். ஆகையால் மைக்ரோ சாப்ட் நிறுவனம் தனது முதல் வேட்பாளரான ஆலன் முல்லாலியை இழந்துவிட்டன.

காலியான சிஇஒ நாற்காலி..

காலியான சிஇஒ நாற்காலி..

சென்ற மாதம் மைக்ரோசாப்ட் நிறுவனம், தனது புதிய தலைமை நிர்வாக அதிகாரியை இந்த ஆண்டின் துவக்கத்திலேயே பணி அமர்த்திவிடுவோம் என்று தெரிவித்திருந்தது. நெடுங்காலமாக தலைமை செயல் அதிகாரியாக இருந்து வந்த ஸ்டீவ் பால்மர் ஆகஸ்ட் மாதம் தான் பதவி விலகுவதாக அறிவித்ததால் இந்நிறுவனத்தினர் அவருக்கு மாற்றாக வேறு ஒருவரை பணியிலமர்த்த முயற்சி செய்து வருகின்றனர்.

முன்னணி நிர்வாகிகளின் விலகல்..

முன்னணி நிர்வாகிகளின் விலகல்..

அதனிடையே மற்றொரு வேட்பாளராக இருந்த குவால்காம் நிறுவனத்தின் ஸ்டீவ் மோலான்காப் டிசம்பர் மாதம் போட்டியிலிருந்து நீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து முல்லாலி கூறிய இந்த வார்த்தைகள் அந்நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்படப் போவது யார்? என்ற ஆர்வத்தை அதிகப்படுத்தியுள்ளது.

தேர்ந்தெடுக்கும் முறை..
 

தேர்ந்தெடுக்கும் முறை..

இந்த நிறுவனத்தின் தேர்ந்தெடுக்கும் முறைகளைப் பற்றிய தகவல்களின் படி, மைக்ரோசாப்ட் நிறுவனம், தொழில்நுட்ப துறையினர் மற்றும் ஒன்று அல்லது சில வேறு துறையினர் என 'கணிசமான' வேட்பாளர்களை இறுதிப்பட்டியலுக்கு தேர்ந்தெடுத்து வைத்திருந்தது.

பட்டியலில் யார்...

பட்டியலில் யார்...

இந்த பட்டியலில் நோக்கியாவின் முன்னாள் தலைமை செயல் அதிகாரியாக இருந்த ஸ்டீவன் இலோப் (Stephen Elop) மற்றும் மைக்ரோசாப்டிலேயே இருக்கும் சத்யா நாடெல்லா (Satya Nadella) (இவர் இந்தியர்..) மற்றும் டோனி பேட்ஸ் (Tony Bates) ஆகியோரும் உள்ளனர்.

நான் அந்த விளையாட்டுக்கு வரல...

நான் அந்த விளையாட்டுக்கு வரல...

இந்த வேலையை வேண்டாம் என்று நிராகரிக்காத முல்லாலி, மேலும் ஒரு ஆண்டிற்காவது ஃபோர்ட் நிறுவனத்தில் பணி புரிவேன் என்று தனது கருத்தை அசோசியேடட் பிரஸ்ஸிற்கு செவ்வாய்கிழமையன்று தெரிவித்துள்ளார். இந்த விஷயம் பற்றி நன்கு அறிந்திருக்கும் இருவர் கூறுகையிலும், இந்த பதவிக்கு முல்லாலி வேட்பாளராக இனி இருக்கப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார்கள்.

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பதில்..

மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பதில்..

'இந்த தேர்வு முறையின் மீதும் மற்றும் கலந்து கொள்ளும் வேட்பாளர்களின் மீதும் உள்ள மரியாதையின் யாருடைய பெயரையும் தனிப்பட்ட முறையில் நாங்கள் சொல்ல விரும்பவில்லை' என்று மைக்ரோசாப்ட்-ன் செய்தி தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

ஆலன் முல்லாலி

ஆலன் முல்லாலி

ஃபோர்ட் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான ஆலன் முல்லாலி கூறுகையில், 'ஃபோர்ட்டை தவிர வேறு எந்த நிறுவனத்திலும் பணியாற்ற தனக்கு எந்த வித திட்டமும் இல்லை' என்று தெரிவித்து இந்த தேர்வுக்கு முற்றுப்புள்ளி வைக்க விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

ஃபோர்ட் நிறுவன பங்குகள் ஏறுமுகம்..

ஃபோர்ட் நிறுவன பங்குகள் ஏறுமுகம்..

ஃபோர்ட் நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர் ஜே கோனி முல்லாலி கூறிய கருத்துக்களை உறுதிப்படுத்தியுள்ளார். இந்த செய்திக்கு பின் ஃபோர்ட் நிறுவனத்தின் பங்குகள் 1.3 சதவிகித ஏற்றமும் மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் பங்குகள் 1.1 சதவிகிதம் இறக்கமும் கண்டுள்ளன.

முதலீட்டாளர்களின் கனவு முல்லாலி..

முதலீட்டாளர்களின் கனவு முல்லாலி..

மைக்ரோசாப்டை சேர்ந்த பல முக்கிய முதலீட்டாளர்கள் முல்லாலிக்காக திரைக்கு பின் அமர்ந்து அவருக்காக பிரச்சாரம் செய்துள்ளனர். முல்லாலியின் சேர்க்கை குறித்து அந்நிறுவனத்தின் விவாதப்படி 'கலாச்சாரம் மற்றும் ஆளுமைத்திறன்' பற்றிய கேள்விகள் எழுப்பப்பட்டன என்று செய்திகள் தெரிவிக்கின்றன

சிக்கலில் முஸ்டாங்...

சிக்கலில் முஸ்டாங்...

முல்லாலியின் புதிய வேலை பற்றிய செய்திகள் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்த நிலையில், ஃபோர்ட் நிறுவனத்தின் புதிய படைப்பான முஸ்டாங் வெளிவந்த செய்தி அதிக அளவு பிரபலம் ஆகவில்லை. இது ஃபோர்டு நிறுவனத்தின் போர்ட் ஆஃப் டைரக்டர்ஸ் குழுவை விரக்தியடையச் செய்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Microsoft close to naming CEO, Ford's Alan Mulally bows out of race

Microsoft Corp. is closer to naming a new chief executive officer (CEO), according to a source familiar with the board’s thinking, but it lost a front-runner candidate on Tuesday when Ford Motor Co.’s chief, Alan Mulally, said he would not be going to the software giant.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X