சத்யம் ராஜு குடும்பத்திற்கு 1 வருட சிறை தண்டனை 10,000 ரூபாய் அபராதம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: இந்தியா ஊழலுக்கு பெயர்போன நாடு என உலகநாடுகள் நம்மை சித்தரிக்கும் வகையில் இங்கு சட்ட திட்டங்கள் இலகுவாக உள்ளது. இங்கு ஊழல் கறைபடியாத துறையை தேடுவது கூட கடினம் தான். இந்தியாவில் பல துறைகளில் ஊழல் புகார் வெளிவந்தது, ஆனால் ஜடி துறையில் சத்யம் நிறுவனத்தில் நடந்த ஊழல் நாட்டையே உழுக்கியது. இதனால் பல நிறுவனங்கள் சிக்கிதவித்தது. மேலும் இலட்சக்கணக்கான ஊழியர்கள் செய்வது அறியாது நின்றனர்.

இந்த ஊழல் குறித்து பொருளாதார குற்றங்களுக்கு எதிரான நீதிமன்றத்தில் வியாழக்கிழமையன்று நடந்த அமர்வில் 19 நிறுவனங்களைச் சேர்ந்த 84 இயக்குநர்களுக்கு 6 மாதம் முதல் 1 வருடம் வரையிலான சிறை தண்டனைகளை நிதிபதி அளித்தார். இதில் சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தின் நிறுவனர் பி.ராமலிங்க ராஜுவின் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் பலரும் அடங்குவார்கள்.

டோட்டல் பேமிலியும் ஜெயிலில்..

டோட்டல் பேமிலியும் ஜெயிலில்..

ராமலிங்க ராஜுவின் மனைவி நந்தினி ராஜு, மகன்களான தேஜா மற்றும் இராமா, அவருடைய தம்பிகளின் மனைவிகள் ஆகியோரும் மத்யாஸ் ஹில் கவுன்டி திட்டத்தில் ரூ.30 கோடி அளவிற்கு வருமான வரியை செலுத்தாமல் ஏமாற்றியதற்காக தண்டனை பெற்றுள்ளனர். 90 ஏக்கர்கள் பரப்பளவிலான நிலம் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் மூலம் வருமானம் சம்பாதித்ததாக இந்த 19 நிறுவனங்களும் அறிவித்துள்ளன.

1 மாத தண்டனை குறைந்தது..

1 மாத தண்டனை குறைந்தது..

தண்டனைக்குள்ளானவர்கள் மாற்று சட்ட நடவடிக்கைகள் எடுக்கும் பொருட்டாக சிறப்பு நீதிபதியாக இருக்கும் எம்.லக்ஷ்மன் ஒரு மாத காலத்திற்கான சிறை தண்டனையை இரத்து செய்துள்ளார். தண்டனைக்கு உள்ளானவர்கள் இந்த வசதியைப் பெறுவதற்காக உறுதிப்பாடுகளை சமர்ப்பிக்க வேண்டும்.

ரூ10,000 அபராதம் சரி... ஊழல் செய்த பணம்..
 

ரூ10,000 அபராதம் சரி... ஊழல் செய்த பணம்..

அனைத்து ஆண் இயக்குநர்களுக்கும் 1 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10000/- அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. அதே போல அனைத்து பெண் இயக்குநர்களுக்கும் 6 மாத சிறை தண்டனையும், ரூ.10000/- அபராதமாகவும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த ஆணை பிறப்பிக்கப்பட்டவுடன் அனைவருமே அபராதத் தொகையை கட்டியதுடன், உறுதிப்பாடுகளையும் சமர்ப்பித்துள்ளனர்.

19 முன்னணி நிறுவனங்கள்

19 முன்னணி நிறுவனங்கள்

வருமான வரித்துறையில் ஆலோசகராக உள்ள ஏ.இராமகிருஷ்ண ரெட்டியின் கருத்துப்படி ராமலிங்க ராஜுவின் 19 முன்னணி நிறுவனங்களின் மேலும் வருமான வரி சட்ட மீறல்களுக்கான வழக்குகள் போடப்பட்டுள்ளன.

வரியா?  யார் கட்டுவது??

வரியா? யார் கட்டுவது??

சத்யம் நிறுவனரின் உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு இந்த நிறுவனங்களுக்கான வரியை செலுத்தும் அவசியம் இருந்த போதிலும் அவர்கள் யாரும் வரியை செலுத்தவில்லை.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Satyam Raju's wife, sons get jail terms

The Economic Offences Court on Thursday convicted and sentenced to imprisonment ranging from six months to one year 84 directors of 19 companies floated by the relatives and friends of Satyam Computers founder B Ramalinga Raju.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X