இந்தியாவின் இரும்பு தாது ஏற்றுமதியில் 28% சரிவு!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கணிக்கும் காரணிகளுள் முக்கிய இடம் கனிமவளத்திற்கு உண்டு. அந்த வகையில் இந்தியாவில் இரும்பு கனிம வளம் முக்கியமானதாகவும், சிறப்பாகவும் காணப்படுகிறது. ஆனால் கடந்த 6 மாத காலமாக இந்திய இரும்பு ஏற்றுமதியில் கடும் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் வர்த்தக பாற்றாக்குறை அதிகரித்து நாட்டின் பொருளாதாரத்தை வீழ்ச்சிக்கு பெரும் சவாலாக திகழ்கிறது.

 

நடப்பு நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் மாதங்களில் இந்தியாவின் இரும்பு தாது உற்பத்தி 28.16% குறைந்தது. அதாவது 11.17 மில்லியன் டன் குறைந்து விட்டது. தற்போது அரசு கடைபிடித்து வரும் ஒழுங்கு முறை நடவடிக்கையின் காரணமாக இரும்பு தாது துறையின் மீதான அதிருப்தி தொடர்ந்து வருகிறது.

இரும்பு தாது கனிம வளத்தில் மூன்றாவது பெரிய ஏற்றுமதியாளராக விளங்கிய இந்தியா சென்ற நிதியாண்டின் இதே காலகட்டத்தில் 15.55 மில்லியன் டன் இரும்பு தாது ஏற்றுமதி செய்தது என இந்திய கனிம தொழிற்சாலை கூட்டமைப்பு (FIMI) வெளியிட்டுள்ள புள்ளி விபரம் தெரிவிக்கிறது.

அரசாங்கம் தனது கொள்கையை மாற்றி கொள்ளாத வரை, இரும்பு தாது ஏற்றுமதி துறையில் ஏற்பட்டுள்ள தொய்வு நிலை நீடிக்கும் என்றும், தற்போது ஏமாற்றத்தை தந்துள்ள அதிருப்தியான நிலையிலிருந்து மீண்டு வரமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட போவதில்லை என்றும் இந்திய கனிம தொழிற்சாலை கூட்டமைப்பின் பொது செயலாளர் R.K ஷர்மா தெரிவித்தார்.

குறையும் ஏற்றுமதி

குறையும் ஏற்றுமதி

கடந்த 2012-2013 -ல் 18.37 மில்லியன் டன் -ஆக இருந்த இரும்பு தாது ஏற்றுமதி இந்த ஆண்டு மேலும் 20% குறையும் என்று அதாவது 14 - 15 டன் அளவு குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது என்றும் அவர் தெரிவித்தார்.

துறைமுகங்கள்..

துறைமுகங்கள்..

பாரதீப் (4 மில்லியன் டன்),விசாகப்பட்டினம் (3.84 மில்லியன் டன்),ஹால்தியா (1.56 மில்லியன் டன்) ஆகியவை இரும்பு தாது ஏற்றுமதி அதிகம் நடைபெறும் துறைமுகங்கள் என்று FIMI வெளியிட்டுள்ள புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.

சுரங்கங்களில் மீது தடை

சுரங்கங்களில் மீது தடை

கோவா மற்றும் கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள சுரங்கங்களில் கடந்த சில வருடங்களாக விதிக்கப்பட்டுள்ள் தடையின் காரணமாக இந்தியாவின் இரும்பு தாது உற்பத்தி மிக மோசமாக பாதிக்கப்பட்டது. மேலும் அது உள்நாட்டு உற்பத்தியின் வீழ்ச்சிக்கும் வழி வகுத்தது.

வரி உயர்வு..
 

வரி உயர்வு..

கட்டி இரும்பு மற்றும் துகள் இரும்பு ஆகிய இரு வகையான இரும்பு தாதின் மீது விதிக்கப்பட்ட ஏற்றுமதிக்கான வரி வீதம் 20% கடந்த டிசம்பர் 2012 -ல் உயர்த்தப்பட்டதும், இரும்பு தாது துறையின் ஏற்றுமதி பெரிதும் பாதிக்கப்பட காரணமாகும்.

தரம் குறைந்த தாதுகள் ஏற்றுமதி

தரம் குறைந்த தாதுகள் ஏற்றுமதி

கோவாவில் சுரங்கங்களில் நீடிக்கும் தடையின் காரணமாக, ஒடிஷா ,ஜார்க்கண்ட், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து தரம் குறைந்த இரும்பு தாது ஏற்றுமதி செய்யப்படுகிறது. கனிம ஏற்றுமதிக்கு கர்நாடகாவில் தற்போதும் அனுமதி இல்லை.

140 மில்லியன் டன் உற்பத்தி

140 மில்லியன் டன் உற்பத்தி

இந்திய தொழிற்சாலைகளின் மதிப்பீட்டின்படி இந்தியாவின் மொத்த இரும்பு தாது உற்பத்தி நடப்பு நிதியாண்டில் 140 மில்லியன் டன் -ஆக இருக்கும் என்று தெரிகிறது. இது ஏறத்தாழ சென்ற நிதி ஆண்டு உற்பத்தி செய்யப்பட்ட இரும்பு தாதின் அளவே ஆகும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Iron ore exports down 28% at 11.2 mt in April-Dec

India’s iron ore exports have gone down by 28.16 per cent to 11.17 million tonnes (mt) during April-December of the current fiscal as gloom continues over the sector due to the present regulatory scenario.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X