கறுப்பு பணம் ஒழிக்கும் திட்டத்தில் அடுத்த கட்ட முயற்சி!! சுவிஸ் நிதி அமைச்சகம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: சுவிஸ் வங்கிகளில் சட்டவிரோதமாக பதுக்கிவைக்கப்பட்டிருக்கும் கறுப்பு பணம் மீதான, இந்தியாவின் கவனத்தை தீவிரப்படுத்தப்படுத்தும் முயற்சியாக, தற்போதைய நிலைமை பற்றி விவாதிக்கவும், வரி சம்பந்தப்பட்ட விஷயங்களில் கூடுதலான ஒத்துழைப்பை உறுதிப்படுத்துவதற்காகவும் சுவிச்சர்லாந்து இந்தியாவிற்கு ஒரு குழுவை அனுப்பவுள்ளது.

 

மேலும் உலகளாவிய தன்னியக்க வரி தகவல் பரிமாற்ற முறையைக் கொண்டுவருவதற்கான ஒரு பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டு அமைப்பை (OECD) உருவாக்கவும் ஸ்விட்சர்லாந்து ஒப்புக் கொண்டுள்ளது, இது செயல்பாட்டுக்கு வந்த பின்னர், இந்தியாவுடனான தகவல் பரிமாற்ற நுட்பம் மேலும் விரிவடையும் என சுவிஸ் அரசு அதிகாரி ஒருவர் கூறினார்.

கணக்கில் காட்டபடாத அதிகளவு பணத்தை சுவிஸ் வங்கிகளில் மறைத்து வைத்திருக்கும் இந்தியர்களின் வரி சம்பந்தமான தகவல்கள் சுவிச்சர்லாந்த நாட்டு வங்கிகளிடம் இருந்து சரியான மற்றும் முழுமையான தகவல் பெற இந்தியா அரசு முனைந்துள்ளது. வங்கி ரகசிய சீர்திருத்த முறையை செயல்படுத்துவதற்கு ஆல்பைன் நாடு முயற்சி எடுத்தபோதிலும், ஸ்விட்சர்லாந்து இன்னும் ஒரு புகலிடமாக உள்ளது எனவும், தகவல்களை பகிர்ந்து கொள்வதில் அது தயக்கம் தெரிவிக்கிறது என அந்நாட்டின் நிதி அறிக்கை தெரிவித்துள்ளது.

தீவிர முயற்சிகள்

தீவிர முயற்சிகள்

மறைமுக எண்ணங்களைக் களைவதற்கு, சுவிஸ்ஸின் நிதி அமைச்சகம் வெளிப்படையான முறையில் இந்திய அதிகாரிகளிடம் சுவிஸ் சட்ட நடைமுறைகள் பற்றி விளக்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டுவருகிறது.

அதிரடி பதில்

அதிரடி பதில்

இதற்காக, தற்போதைய நிலைமை பற்றி விவாதிக்கவும், தேவைப்பட்டால் செயற்பாடுகளை அதிகரித்து வரி சம்பந்தமான விஷயங்களில் அதிக ஒத்துழைப்பை வழங்கவும், சுவிஸ் நாட்டில் இருந்து ஒரு குழு புதுடெல்லிக்கு வருவதற்கு தயாராக உள்ளது என சுவிஸ் நிதி அமைச்சின் பேச்சாளர் ஒருவர் ஈமெயில் கேள்விகளுக்கான பதிலில் PTIக்கு பதில் தெரிவித்தார். சுவிஸ் நாட்டிற்கும் இந்தியவிற்கும் இடையே ஒரு நட்பு ரீதியான உறவுமுறை காணப்படுகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

தகவல் பறிமாற்றம்
 

தகவல் பறிமாற்றம்

தற்போது, இந்தியாவிற்கு அளிக்கப்படும் தகவல்கள் அனைத்தும் இந்தியா உட்பட சர்வதேச தரங்களை அடிப்படையாக கொண்ட இரட்டை வரி விதிப்பை தவிர்க்கும் உடன்படிக்கையை படியே அளிக்கப்படும் என சுவிஸ் நாட்டின் நிதி அமைச்சம் தெரிவிக்கின்றது. இருப்பினும், OECD வரிக் கொள்கையைக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தத்தில், சுவிஸ் அக்டோபர் 15ல் கையெழுத்திட்டது, ஆனால் இது இன்னும் அமுலுக்கு வரவில்லை.

மேம்படும் உடன்படுக்கை

மேம்படும் உடன்படுக்கை

இத்திட்டம் அமுலுக்கு வந்துவிட்டால், இந்தியாவிற்கும் சுவிஸ் நாட்டிற்கும் இடையிலான தகவல் பரிமாற்றம் மேலும் முறைப்படுத்தப்படும் என இந்திய நிதி அமைச்சகத்தின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

14,000 கோடி மதிப்பீடு..

14,000 கோடி மதிப்பீடு..

ஐரோப்பாவின் தேசிய மத்திய வங்கியின் அண்மைய தகவலின் படி, சுவிஸ் தேசிய வங்கியில் இந்தியர்களால் வைப்பு செய்யப்பட்டுள்ள 9,000 கோடி (1.42 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்க்ஸ்) 2012 இன் இறுதியில் 14,000 கோடிகளாக (2.18 பில்லியன் சுவிஸ் ஃப்ராங்க்ஸ்) மதிப்பிடப்பட்டுள்ளது.

கள்ளப்பணம்..

கள்ளப்பணம்..

2012 ம் ஆண்டில் உலகம் முழுவதிலும் உள்ள பெரும் புள்ளிகளால் சுவிஸ் வங்கியில் வைப்பு செய்யப்பட்டிருந்த 1.65 திரில்லியன் டாலர்கள் சுமார் 1.5 திரில்லியன் டாலர்களாக வீழ்ச்சியடைந்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Switzerland Ready To Discuss Tax Information Matters With India

Intensifying efforts to address Indian concerns over alleged stashing of illicit funds in Swiss banks, Switzerland will send a delegation to India to discuss the “current situation” and define measures for greater cooperation on tax matters.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X