50% வளர்ச்சியுடன் கம்பீரமாய் திகழும் டிசிஎஸ்!! ஐடி சந்தையில் முன்னிலை

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: டிசம்பர் 31-ம் நாளுடன் முடிவடைந்த காலாண்டின் முடிவுகள அனைத்து நிறுவனங்களும் வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த வார இறுதியில் இந்தியாவில் முன்னணி மென்பொருள் நிறுவனமாக இரக்கும் டாடா கன்சல்டன்சி நிறுவனம் தனது 3ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டது. இந்த அறிக்கையில் குறிப்பிட்ட படி 3ஆம் காலாண்டு காலகட்டத்தில் மொத்த இலாபமாக ரூ.5,333 கோடிகளைப் பெற்றுள்ளது.

இது எதிர்பார்க்கப்பட்டதை விட அதிகபட்ச வளர்ச்சியாக, அதாவது 50.3% ஆக உள்ளது. உயர் அறிவியல் துறைகள், உற்பத்தி துறைகள் மற்றும் ஐரோப்பிய வர்த்தகத்தில் மேம்பாடு ஆகியவற்றின் காரணமாக இந்த வளர்ச்சி சாத்தியமானது என டிசிஎஸ் நிறுவனம் தெரிவித்தது.

மும்பை பங்குச் சந்தையின் இந்திய GAAP-யின் ஒரு ஆண்டுக்கு முந்தைய புள்ளி விபரங்களில் நாட்டின் மிகப்பெரிய மென்பொருள் ஏற்றுமதி நிறுவனமான டாடா கன்சல்டன்சி நிறுவனம் ரூ.3,550 கோடிகளை இலாபமாக பெற்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

50% வளர்ச்சி!!..

50% வளர்ச்சி!!..

இந்திய IFRS மதிப்பீடுகளின் படி இந்நிறுவனத்தின் நிகர இலாபம் 50 சதவிகிதமளவிற்கு உயர்ந்து ரூ.5,314 கோடிகளாக உள்ளது. இது கடந்த ஆண்டின் மூன்றாவது காலண்டில் ரூ.3,549.62 கோடிகளாக இருந்தது.

மொத்த வருமானம்

மொத்த வருமானம்

நகரங்களை அடிப்படையாக கொண்ட இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 32.5 சதவிகிதம் உயர்ந்து ரூ.21,294 கோடிகளாக உள்ளது. இது 2012-13-ம் நிதியாண்டின் அக்டோபர்-டிசம்பர் காலண்டில் ரூ.16,070 ஆக இருந்தது.

என்.சந்திரசேகரன் கூறுகையில்

என்.சந்திரசேகரன் கூறுகையில்

'இது மிகவும் சிறந்த வர்த்தக நிலை, அடுத்த காலாண்டு மேலும் சிறப்பாக அமையும் ' என்று டாடா கன்சல்டன்சி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாகவும் மற்றும் நிர்வாக இயக்குநராகவும் உள்ள திரு. என்.சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

15.1 சதவிகித வளர்ச்சி

15.1 சதவிகித வளர்ச்சி

ஒவ்வொரு காலண்டிற்கும் இடையிலான ரூபாய் மதிப்பீடுகளில் (Quarter-on-quarter), இந்நிறுவனத்தின் நிகர இலாபம் 15.1 சதவிகிதமும், வருமானம் 1.5 சதவிகிதமும் அதிகரித்துள்ளது.

சர்வதேச சந்தை

சர்வதேச சந்தை

'சர்வதேச அளவில் எங்களுடைய சேவைகளுக்கு இருக்கும் தேவைகள் மற்றும் செயல்படுவதில் நாங்கள் காட்டும் ஒழுங்கு முறை ஆகியவற்றின் உதவியால் டிசிஎஸ் உத்வேகம் பெற்றுள்ளது மற்றும் ஆரோக்கியமான வளர்ச்சியை அளவீடுகளிலும், உண்மை நிலைகளிலும் பெற்றுள்ளது', என்று திரு.சந்திரசேகரன் குறிப்பிட்டார்.

8 ஒப்பந்தங்கள்

8 ஒப்பந்தங்கள்

இந்த காலாண்டில் நாங்கள் 8 பெரிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளோம், ஆனால், உள்நாட்டு சந்தையைப் பொறுத்தவரையில் ஜுன் அல்லது செப்டம்பர் வரையிலும் எந்த விதமான நம்பிக்கைகளும் இல்லை என்றும் அவர் சொன்னார்.

டாலர் வர்த்தகம்

டாலர் வர்த்தகம்

சர்வதேச வர்த்தகம் டாலர்களில் 3.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்று குறிப்பிட்ட அவர், இந்த காலாண்டில் வேலையிலிருந்து செல்வது 10.9 சதவிகிதமாக இருந்தது என்பதையும் குறிப்பிட்டார்.

பல்வகை சேவை

பல்வகை சேவை

பல்வேறு வகையான சந்தைகளில் இருந்ததும், பல்வேறு வகையான சேவைகளை அளித்ததும் மற்றும் இந்திய சந்தைகளின் தேவை மென்மையாக இருந்ததும் தான் இந்நிறுவனத்தின் பருவகால பலவீனங்களை எதிர்கொள்ள உதவியாக இருந்தன என்றும் அவர் சொன்னார்.

டாலர் வருவாய்

டாலர் வருவாய்

டாலர் மதிப்பில், கடந்த நிதியாண்டில் 652 மில்லியன் டாலர்களாக இருந்த நிகர வருமானம் 31.7 சதவிகிதம் அளவிற்கு உயர்ந்து இந்த நிதியாண்டில் 858 மில்லியன் டாலர்களாக உள்ளது. அதே நேரம், கடந்த ஆண்டில் 2.95 பில்லியன் டாலர்களாக இருந்த வருமானம் 17 சதவிகிதம் உயர்ந்து 3.44 மில்லியன்களாக ஆனது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

TCS net surges over 50% to Rs 5,333 cr in Q3; raises hiring target

IT services major Tata Consultancy Services (TCS) today posted a better than expected growth of 50.3 per cent in consolidated net profit at Rs 5,333 crore for the third quarter.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X