அனல் பறக்கும் ஸ்பெக்ட்ரம் ஏலம்!! ஏர்டெல், வோடஃபோன், ரிலையன்ஸ் கடும் போட்டி..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: பிப்ரவரி 3-ஆம் தேதி நடத்த திட்டமிடப்பட்டுள்ள ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்க ஏர்டெல் வோடஃபோன், மற்றும் ரிலையன்ஸ் ஜியோ உள்ளிட்ட 8 முன்னணி நிறுவனங்கள் தங்கள் விண்ணப்பங்களை சமர்பித்து வருகின்றன. எனவே இந்த முறை ஸ்பெக்ட்ரம் ஏலத்திற்கான போட்டி கடுமையானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பங்களை சமர்ப்பிக்க புதன் கிழமை கடைசி நாளாகும். சமர்ப்பித்த விண்ணப்பங்களை திரும்ப பெற்றுகொள்ள விருப்பம் எனில், அதற்கு ஜனவரி 27 கடைசி நாளாகும். வீடியோகான், லூப், மற்றும் சிஸ்டமா ஷ்யாம் போன்ற நிறுவனங்கள் நீங்கலாக மற்ற அனைத்து முன்னணி தொலைதொடர்பு நிறுவனங்களும் களத்தில் உள்ளன. சென்ற ஆண்டு மார்ச் மாதத்தின் போது நடைபெற்ற ஏலத்துதை ஒப்பிட்டு பார்க்கும் போது ஏலத்தொகை கேட்பவராக ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே இருந்தது.

அரசு நேரடி அன்னிய முதலீட்டை அனுமதித்த போதிலும், எந்த ஒரு புதிய அன்னிய நிறுவனமும் ஏலத்தில் பங்கேற்க விண்ணப்பிக்கவில்லை. மிகவும் உற்சாகத்துடன் தொலைதொடர்பு நிறுவனங்கள் ஏலத்தில் பங்கேற்க 2 முதன்மையான காரணங்கள் உள்ளன. ஒன்று, ஏலத்தில் பங்கேற்க ஆரம்ப சுற்றுக்களுக்கான இருப்பு விலை குறைக்கப்பட்டுள்ளது. இரண்டு, இந்நிறுவங்களின் உரிமங்கள் இந்த ஆண்டுடன் காலாவதியாகும் தருவாயில் உள்ளன.

தீடிர் மாற்றம்

தீடிர் மாற்றம்

தொலைதொடர்பு நிறுவங்களுக்கான 20 ஆண்டு உரிமத்தினை நீட்டிக் வேண்டாம் என்று அரசு முடிவு செய்துள்ளதால் ஏர்டெல், வோடஃபோன், ஐடியா செல்லுலர் போன்ற நிறுவனங்களுக்கு ஏலத்தில் குறிப்பாக 900 Mhz அலைவரிசை கொண்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்தில் பங்கேற்பதை தவிர வேறு வழி இல்லை.

1800, 900 Mhz அலைவரிசை

1800, 900 Mhz அலைவரிசை

அரசு 1800 Mhz மற்றும் 900 Mhz அலைவரிசை கொண்ட ஸ்பெக்ட்ரம் ஏலத்தினை நடத்த முடிவு செய்துள்ள போதிலும், இரண்டாவதாக குறிப்பிடப்பட்ட 900 Mhz ஸ்பெக்ட்ரம் அனைவரையும் கவருவதாக உள்ளது.

900Mhz அலைவரிசைக்கு கடும் போட்டி
 

900Mhz அலைவரிசைக்கு கடும் போட்டி

900 Mhz அலைவரிசையினை பயன்படுத்தி அனுப்பப்படும் சிக்னல் உயர்ந்த அதிர்வெண் அலைவரிசையில் அனுப்பப்படும் சிக்னலை விட அதிக தூரம் பயணிக்கின்றன. இந்த பண்பு, 900Mhz அலைவரிசையில் அனுப்பப்பட்ட அதிக ஆற்றல் கொண்டதாக்குகிறது. இரு அலைவரிசைகளையும் ஒப்பிடுகையில் 900Mhz அலைவரிசையை 30-40% சிறப்பான கவரேஜ் (coverage) சேவையை வழங்குவதாக நிரூபிக்கப்பட்டுள்ளது.

ரிலையன்ஸ் ஜியோ

ரிலையன்ஸ் ஜியோ

ஏலத்தில் பங்கு பெறு நிறுவனங்களுள் 900 Mhz அலைவரிசை ஸ்பெக்ட்ரம் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்திற்கு 4G சேவையை வழங்க மிகவும் அவசியமான ஒன்றாகும். ஆயினும் அரசு மூன்று நிறுவனங்களுக்கு போதுமானதாக கருதப்படும் 45 Mhz அலைவரிசை ஸ்பெக்ட்ரம் மட்டும் விற்பனை செய்கிறது.

டாடா களம் இறங்கியது

டாடா களம் இறங்கியது

மேலும் இந்த போட்டிகளத்தை வலிமைப்படுத்த மற்ற போட்டியாளர்களுடன் டாடா டெலிசர்வீசஸ், டெலிவிங்க்ஸ், மற்றும் ரிலையன்ஸ் கம்யூனிகேசன்ஸ், போன்ற நிறுவனங்களும் களத்தில் உள்ளன. எனவே கேட்கப்படும் ஏலத்தொகையின் அளவு உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.இது அரசுக்கு அதிக வருமானத்தை ஈட்டி தரும்.

சட்ட சிக்கல்

சட்ட சிக்கல்

இதில் அரசுக்கு சட்ட ரீதியிலான சிக்கல்களும் உள்ளன. 900Mhz அலைவரிசைக்கான மும்பை உரிமத்தினை தன்வசம் கொண்டுள்ள லூப் நிறுவனம் தன் உரிமத்‌தினை தற்போதுள்ள மார்கெட் விலைக்கே நீட்டிக்கும்படி Telecom Dispute Settlement Appellate Tribunal-டம் மனுவினை தாக்கல் செய்துள்ளது. ஏர்டெல் வோடஃபோன் போன்ற நிறுவனங்களும் இதே போன்றதொரு மனுவினை தாக்கல் செய்துள்ளன. இந்த மனு ஏற்றுக்கொள்ள படும் எனில், ஏலத்தின் போக்கு தடம் மாறி செல்லவும் வாய்ப்புண்டு.

தொலைதொடர்பு துறை

தொலைதொடர்பு துறை

அரசு திட்டமிட்டபடி ஏலம் நடைபெறும் என்றும், அதன் மூலம் தொலை தொடர்புதுறை அதிக வருமானம் பெற்று தரும் என்றும் நம்புவோம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

8 telecom firms in fray for spectrum

The battle for spectrum is expected to be intense this time with as many as eight telecom companies, including Reliance Jio, Airtel and Vodafone, submitting applications to take part in the auctions scheduled for February 3.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X