ஐடி துறையில் இருந்து வெளியேறும் ஆதித்யா பிர்லா குழுமம்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: சுமார் 40 பில்லியன் டாலர் பெறுமானமுள்ள ஆதித்யா பிர்லா குழுமம், பெங்களூரில் அமைந்துள்ள அதன் பிசினஸ் புராசஸிங் அவுட்சோர்ஸிங் (பீபிஓ) நிறுவனமான மினாக்ஸ் நிறுவனத்தை விற்க முடிவு செய்துள்ளது. தொழில்நுட்ப தொழில் முனைவோராக இருந்து தற்போது முதலீட்டாளராக மாறியுள்ள திரு.சஞ்சய் சக்ரபர்த்தி என்பவரால் வடிவமைக்கப்பட்டுள்ள தனியார் ஈக்விட்டி கூட்டமைப்பிற்கு, சுமார் 270 மில்லியன் டாலர், அதாவது 1,600 கோடி ரூபாய்க்கு விற்க ஆதித்யா பிர்லா குழுமம் முடிவு செய்துள்ளது.

ஆதித்யா பிர்லா குழுமம் பாரம்பரியமாக இந்திய வர்த்தக கூட்டு ஸ்தாபனங்கள் பலவும் பெரிய அளவிலான செயல்பாடுகளை நிர்வகிப்பதில் திணறிக் கொண்டிருப்பது, இதனால் இந்த விற்பனை முடிவுக்கு வந்தது. இந்த விற்பனை நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், ஐடி துறையிலிருந்து குமார் மங்கலம் பிர்லா அவர்கள் தலைமையிலான இக்குழுமம் வெளியேறும்.

21,000 ஊழியர்கள்

21,000 ஊழியர்கள்

உலகெங்கிலும் சுமார் 35 இடங்களில் ஏறத்தாழ 21,000 ஊழியர்களை பணியமர்த்தியுள்ள மினாக்ஸ் நிறுவனம் நாட்டின் ஆறாவது பெரிய பீபிஓ நிறுவனமாக நாஸ்காம் தரப்பட்டியலில் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

450 மில்லியன் டாலர் வருமானம்

450 மில்லியன் டாலர் வருமானம்

ஆதித்யா பிர்லா மினாக்ஸ் நிறுவனம் உலகளவில் சுமார் 450 மில்லியன் டாலர் வருமானத்தையும், சுமார் 40 மில்லியன் டாலர் ஆபரேட்டிங் லாபத்தையும் கொண்டுள்ளது.

6-7 மடங்கு

6-7 மடங்கு

பிர்லா நிறுவனம் கோரிய விலை சற்றே அதிகமாக இருந்த போதிலும், இந்த ஏலத்தில், இந்நிறுவனத்தின் ஆபரேட்டிங் லாபத்தைக் காட்டிலும் சுமார் ஆறு முதல் ஏழு மடங்கு அதிகமான தொகையே அதன் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

 

மினாக்ஸ் நிறுவனத்தின் சேவைகள்

மினாக்ஸ் நிறுவனத்தின் சேவைகள்

மினாக்ஸ் நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு மார்க்கெட்டிங், ஃபைனான்ஸ் அண்ட் அக்கவுன்ட்டிங், ப்ரொக்யூர்மென்ட் மற்றும் ஐடி சொல்யூஷன்களுக்கான பேக் ஆஃபீஸ் சேவையை வழங்கி வருகிறது.

 

 

கடைசி கட்ட பேச்சுவார்த்தை

கடைசி கட்ட பேச்சுவார்த்தை

முதலீட்டாளர் கூட்டமைப்பு, இந்த நிறுவனத்தை வாங்குவதற்கான பிரத்யேக கடைசிகட்ட விவாதங்களில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது. கடைசி நேர இடையூறுகள் ஏதும் குறுக்கிடாத பட்சத்தில், இந்த ஒப்பந்தம் இன்னும் சில வாரங்களில் கையெழுத்தாகிவிடும்.

 

 

சஞ்சய் சக்ரபர்த்தி

சஞ்சய் சக்ரபர்த்தி

மொபி ஆப்ஸ் நிறுவனத்தின் நிறுவனராக இருந்து, பின்னர் பிஇ முதலீட்டாளராக மாறியுள்ள சக்ரபர்த்தி அவர்களுக்கு, மினாக்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகளைக் கொண்டுள்ள இதர முதலீட்டாளர்கள் அடங்கிய குழு ஆதரவளித்து வருகிறது. அவர்கள் யார் என்பதை உடனடியாக அறிந்து கொள்வதற்கில்லை.

 

 

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Kumar Birla to sell Minacs for Rs 1.6k cr

Aditya Birla Group is close to selling its business process outsourcing (BPO) firm Minacs to a private equity consortium for about Rs 1,600 crore.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X