மின்வெட்டல்ல – மின்கட்டணத்தில் வெட்டு: மஹாராஷ்டிரா மக்கள் குஷி

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி பெறுப்பு ஏற்றவுடன் மின்கட்டணங்களை அதிரடியாக குறைத்தது. இதேபாணியில் காங்கிரஸ் ஆதிக்கம் அதிகமுள்ள மகாராஷ்டிரா மாநிலத்தில் மின்கட்டணங்கள் 15 முதல் 20 சதவிகிதம் வரை குறைக்கப்படவுள்ளதாக தொலைக்காட்சி செய்திகள் தெரிவித்தன. இந்த மின் கட்டண குறைப்பு மும்பை நகரத்திற்கு பொருந்தாது எனவும் செய்திகள் பரவி வருகிறது.

 

அம்மாநில அமைச்சரவை இது தொடர்பான அமைச்சர்கள் குழுவின் பரிந்துரைகளுக்கு ஒப்புதல் அளித்துள்ளதாக தொலைக்காட்சிகள் தெரிவித்தன. இது தொடர்பான ஏனைய விவரங்கள் உடனடியாக கிடைக்கவில்லை.

டெல்லியில் புதிதாக பதவியேற்றுள்ள ஆம் ஆத்மி கட்சியின் குறைந்த மின் நுகர்வு கொண்ட மக்களுக்கான மின்கட்டண குறைப்பு நடவடிக்கைகளையடுத்து காங்கிரஸும் இதை பின்பற்ற முடிவு செய்துள்ளதோடு வரும் மே மாதம் வரவிருக்கும் மக்களவை தேர்தலை முன்னிட்டு பிற மாநிலங்களிலும் இதை நடைமுறைப் படுத்தக் கோரிக்கை எழுந்துள்ளது.

மின்வெட்டல்ல – மின்கட்டணத்தில் வெட்டு: மஹாராஷ்டிரா மக்கள் குஷி

நகர மற்றும் தொழில் சார்ந்த மின் தேவை மின் உற்பத்தி வளர்ச்சி விகிதத்தை மிஞ்சி உள்ளதால், இந்தியா உச்ச பயன்பாட்டு நேரங்களில் 4 சதவிகித அளவிற்கு மின் தட்டுப்பாட்டை எதிர்கொள்ள நேரிடுகிறது.

மகாராஷ்டிரா மாநிலத்திற்கு மின் விநியோகத்தில் ஈடுபட்டுள்ள நிறுவனம் மஹாவித்ரான், இந்த விலை குறைப்பினால் சுமார் 1 பில்லியன் ரூபாய் வரை நிதி நெருக்கடி ஏற்படும் என் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிதி நெருக்கடியை சமாலிக்க அரசு மானியம் வழங்க உள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Maharashtra cuts power tariff by up to 20 pct: TV

Maharashtra said on Monday it will cut electricity tariffs by a fifth with immediate effect, as the Congress party-headed state government woos voters ahead of national elections later this year.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X