இந்திய வர்த்தக துறையின் ஒரு மைல்கல்!! ஈ-பிஸ் வலைதளம்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சரான ஆனந்த் ஷர்மா திங்களன்று இ-பிஸ் ப்ளாட்ஃபார்ம், டிபார்ட்மென்ட் ஆஃப் இன்டஸ்ட்ரியல் பாலிஸி அண்ட் ப்ரொமோஷன் போர்டினின் (டிஐபிபி) இரண்டு புதிய சேவைகள் மற்றும் இன்டெக்ரேட்டட் பேமென்ட் கேட்வே முறையை திறந்து வைத்து பயன்பாட்டுக்காக அனுமதி அளித்தார்.

 

இந்திய அரசின் தேசிய இ-கவர்னென்ஸ் திட்டத்தின் கீழ் செயல்பட்டு வரும் இன்டெக்ரேட்டட் மிஷன் மோட் புராஜெக்டகளுள் ஒன்றாகிய இ-பிஸ் திட்டம், ஒரு தொழிற்சாலை அல்லது பிசினஸ் என்டிட்டியின் வாழ்நாள் முழுவதிலும் எதிர்வரக்கூடிய படிவங்கள் & செய்முறைகள், லைசென்ஸ்கள், பெர்மிட்கள், ரெஜிஸ்ட்ரேஷன்கள், ஒப்புதல்கள், தடை நீக்கங்கள், அங்கீகாரங்கள், ரிப்போர்ட்டிங், ஃபைலிங், பேமென்ட்கள் மற்றும் உடன்பாடுகள் ஆகியவை தொடர்பான தகவல்களுக்கென ஆற்றல்மிக்க, வசதியான, வெளிப்படையான மற்றும் ஒருங்கிணைந்த எலக்ட்ரானிக் சேவைகளை, முதலீட்டாளர்கள், தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகங்களுக்கு வழங்குவதன் மூலம் நாட்டின் தொழில் மற்றும் வர்த்தக சூழலை மாற்றியமைக்கும் நோக்குடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்திய வர்த்தக துறையின் ஒரு மைல்கல்!! ஈ-பிஸ் வலைதளம்..

"இந்த திட்டத்தின் இரண்டாவது கட்டம், அதாவது ப்ளாட்ஃபார்ம் லாஞ்ச், தற்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இது இன்டஸ்ட்ரியல் லைசென்ஸ்கள் மற்றும் இன்டஸ்ட்ரியல் என்ட்ரப்ரூனரின் மெமொரண்டம் (Industrial Entrepreneur's Memorandum) என்ற இரண்டு டிஐபிபி சேவைகளையும், சென்ட்ரல் பாங்க் ஆஃப் இந்தியாவுடனான ஒரு இன்டெக்ரேட்டட் பேமென்ட் கேட்வேயையும் உள்ளடக்கியுள்ளது," என்று வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகம் ஒரு பத்திரிக்கை வெளியீட்டில் தெரிவித்துள்ளது.

இது, இ-பிஸ் போர்ட்டலை அதன் ட்ரான்ஸாக்ஷனல் ஆற்றல்களை வெளிப்படுத்த அனுமதிப்பதோடு, இ-பிஸ் புராஜெக்ட்டின் செயல்முறை மற்றும் மதிப்பு சூத்திரம் ஆகியவற்றிற்கு செயல்முறை விளக்கம் அளிப்பதிலும் ஒரு மைல்கல்லாக விளங்கும் என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த விழாவில் பேசிய ஷர்மா, "நாட்டின் தொழில்துறை சூழலை மேம்படுத்துவதற்கான பல்வேறு முன்னெடுப்புகளை ஒருமுகமாக செயல்படுத்துவதே எங்களின் உறுதியான நோக்கமாகும்."

மேலும் அவர் "தொழில்நுட்ப வளர்ச்சியை முடுக்கி விட்டு அதன் மூலம் வெளிப்படையான செயல்பாடு, ஆற்றல் மேம்பாடு மற்றும் வசதி உயர்வு ஆகியவற்றைக் கொண்டு வருவதே எங்கள் அணுகுமுறையின் பிரதான இலக்காகும்." என்று கூறியுள்ளார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Anand Sharma launches eBiz portal and two DIPP services

The Union Minister of Commerce & Industry Anand Sharma on Monday launched the eBiz platform along with two Department of Industrial Policy and Promotion (DIPP) services and an integrated payment gateway.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X