2014ம் ஆண்டில் சீனா 7.7% மட்டுமே வளர்ச்சி அடையும்: அப்ப இந்தியா??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

டெல்லி: ஆசியாவின் வளரும் பொருளாதார நாடுகள் தங்கள் மேற்கத்திய வர்த்தகக் கூட்டாளிகள் வீழ்ச்சியிலிருந்து மீண்டிருந்தாலும் 2014 ஆம் ஆண்டில் எதிர்பார்த்ததைவிட உலக வளர்ச்சிக்கு குறைந்த அளவே பங்களிக்க உள்ளதாக ரியுடர்ஸ் நிறுவனம் நடத்திய வாக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.

 

சீனா, இந்தியா, இந்தோனேஷியா, தாய்வான் மற்றும் தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளிலிருந்து 225-க்கும் மேற்பட்ட பொருளாதார வல்லுனர்கள் ஜனவரி 16-23 தேதிகளில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வாக்களித்தனர். இதில் முதல் பதிமூன்று இடங்களில் உள்ள நாடுகளில் ஒன்பது பொருளாதாரங்களில் ஜப்பானைத் தவிர ஒட்டு மொத்த பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் எதுவும் இல்லை என்றோ அல்லது வளர்ச்சிக் குறைவாகவோ உள்ளதாக மதிப்பிட்டுள்ளனர்

"பெரும் வளர்ச்சியை கொண்டிருக்கும் பொருளாதாரங்களில் இரு இலக்க வளர்ச்சியை அடைந்த நாட்கள் கடந்துவிட்டன" என பிஎன்பி பாரிபாஸ் வங்கியின் உலக பொருளாதார வல்லுனர் டாமினிக் பிரையன்ட் தெரிவித்தார்.

சீனா

சீனா

"சீனா தன் உள்நாட்டுச் சந்தையை ஒட்டிய பொருளாதாரத்தை மறுஅமர்வு செய்துகொண்டதால் அதன் வளர்ச்சி வேகம் குறைந்துள்ளது. ஆசிய பொருளாதாரத்தில் அது 50 சதவிகிதம் கொண்டுள்ளதால் இப்பகுதியில் இந்த வளர்ச்சிக் குறைவு சில விளைவுகளை உண்டாக்கும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

புதிய முயற்சியில் சீனா

புதிய முயற்சியில் சீனா

கடந்த முப்பது ஆண்டுகளில் 10 சதவிகிதத்திற்கும் அதிகமான வளர்ச்சியுடன் உலகை பிரமிக்க வைத்த சீனா, கடன் மற்றும் முதலீடுகளுக்கு முக்கியத்துவம் அளித்து வந்த தன் வழக்கத்திலிருந்து மாறுபட்டு உள்நாட்டு நுகர்வை அதிகப்படுத்த முயன்றுவருகிறது.

 7.7% வளர்ச்சி
 

7.7% வளர்ச்சி

இதனால், அதன் வளர்ச்சி விகிதம் தொடர்ந்த சரிவைக் கண்டது. இந்த மாத புள்ளிவிவரங்கள் அந்நாடு 7.7 சதவிகித வளர்ச்சியை 2013 ஆம் ஆண்டின் கடைசி காலண்டில் எட்டியுள்ளதாகத் தெரிவிக்கின்றன. 2015ஆம் ஆண்டில் இந்நாட்டின் வளர்ச்சி 7.2 சதவிகிதமாக குறையும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்தியாவின் நிலை என்ன??

இந்தியாவின் நிலை என்ன??

இந்தியா வலுவற்ற முதலீட்டு சூழ்நிலையினாலும் வரவிருக்கும் தேர்தலினாலும் ஒரு ஆர்வமூட்டாத அளவான 5.4 சதவிகித வளர்ச்சியை 2014-15 ஆம் ஆண்டில் அடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொருளாதார வளர்ச்சிக் குறைவு

பொருளாதார வளர்ச்சிக் குறைவு

சீன முதலீட்டாளர்களுக்கு அந்நாட்டு பொருளாதார வளர்ச்சிக் குறைவு ஒரு பெரும் கவலையாக உள்ளதாக பாங்க் ஆஃப் அமெரிக்கா மற்றும் மெரில் லின்ச் ஆகிய நிறுவனங்களின் நிதி மேலாளர்கள் நடத்திய ஆய்வின் அறிக்கை குறிப்பிடுகிறது.

சீனாவை அடுத்து ஆஸ்திரேலியா

சீனாவை அடுத்து ஆஸ்திரேலியா

ஆனால் இந்த மாற்றம் சீனாவின் நுகர்வுப் பொருட்களை வழங்கும் நாடுகளை பாதித்துள்ளன. ஆஸ்திரேலியாவின் மூலப்பொருட்கள் ஏற்றுமதி தொடர்ந்து குறைந்து அந்த நாட்டின் பொருளாதாரத்தை பாதித்துள்ளது.

ஆஸ்திரேலியாவின் வளர்ச்சி 3% மட்டுமே

ஆஸ்திரேலியாவின் வளர்ச்சி 3% மட்டுமே

சமீபத்திய வாக்கெடுப்பு மூலம் ஆஸ்திரேலியாவின் 1.5 ட்ரில்லியன் ஆஸ்திரேலிய டாலர் மதிப்புள்ள பொருளாதாரம் 2015 ஆம் ஆண்டில் 3 சதவிகித வளர்ச்சியையும் அதற்கு முன் 2014 ஆம் ஆண்டில் 2.8 சதவிகித வளர்ச்சியையும் அடையும். ஆனால், அது சராசரி வளர்ச்சியான 3.25 முதல் 3.5 சதவிகித வளர்ச்சியை ஒப்பிடுகையில் குறைவுதான்.

உலக நாடுகள்..

உலக நாடுகள்..

ஆசியாவின் பிற நாடுகளில் 2014 ஆம் ஆண்டின் வளர்ச்சியானது இந்தோனேஷிய தேர்தல், தாய்லாந்தின் உள்நாட்டு போராட்டங்கள், தென்கொரியாவின் வலிமையான நாணய மதிப்பு மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை புறந்தள்ளி உயர்ந்துவரும் வளரும் நாடுகளின் கடன் பத்திர வருவாய் ஆகிய காரணங்களால் சற்று சூடுபிடித்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

India to grow 5.4% in 2014: poll

Emerging Asian economies will contribute less to global growth in 2014 than earlier expected even as their major trading partners in the West show signs of recovery
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X