டீப்மைண்ட் நிறுவனத்தை ரகசியமாய் வளைத்துப்போட்ட கூகுள்!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

நியூயார்க்: தனியார் நுண்ணறிவு நிறுவனமான டீப்மைண்ட் டெக்னாலஜீஸ் நிறுவனத்தை கூகுள் நிருவனம் வாங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்துள்ளது. டீப்மைண்ட் டெக்னாலஜீஸ் நிறுவனம், செயற்கை நுண்ணறிவு துறையில் சிறந்து விளங்கிறது. இந்நிறுவனம் துவங்கிய சில நாட்களிலே பலரது கவனத்தை தன் பக்கம் திருப்பியது. இதில் கூகுள் நிறுவனமும் ஒன்று.

 

இந்த செய்தியை முன்பு தொழில்நுட்பச் செய்தி இணையதளமான ரீகோட் தெரிவித்தது. இந்த வர்த்தகம் 400 மில்லியன் அமெரிக்க டாலர்கள் பெருமானமுள்ளது என விவரங்களின் மூலத்தை வெளியிடாமல் அந்நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

கூகுள் நிறுவன தொடர்பாளர் இது குறித்து கருத்துத் தெரிவிக்க மறுத்தது ஒருபுறமிருக்க, டீப்மைண்ட் நிறுவனப் பிரதிநிதிகள் ஒருவரையும் உடனடியாக தொடர்புகொள்ள முடியவில்லை என ரீகோட் தனது செய்திகளில் குறிப்பிட்டது.

டீப்மைண்ட் நிறுவனத்தை ரகசியமாய் வளைத்துப்போட்ட கூகுள்!!

டெமிஸ் ஹஸ்ஸபிஸ், ஷேன் லெக் மற்றும் முஸ்தஃபா சுலைமான் ஆகியோரால் லண்டனில் 2012 ஆம் ஆண்டு துவங்கப்பெற்ற டீப்மைண்ட் நிறுவனம், பொது உபயோக சமன்பாடுகளை உருவாக்கி தீர்வுகள், மின்னணு வர்த்தகம் மற்றும் விளையாட்டு மென்பொருள்களில் பயன்படுத்தி வந்தது.

தானியங்கி கார்கள் மற்றும் ரோபோக்கள் ஆகிவை தொடர்பான திட்டங்களில் செயலாற்றி வரும் கூகுள் நிறுவனம் சமீப காலமாக தன் கவனத்தை ரோபோட்டி துறையில் பெரிதும் உதவும் செயற்கை நுண்ணறிவுத் ஆராய்ச்சியில் (artificial intelligence) அதிகம் ஆர்வம் செலுத்தி வருகிறது.

2012ஆம் ஆண்டில், இந்த நிறுவனம் ரே குர்ஸ்வெய்ல் என்ற இந்தத் துறையில் அனுபவம் மிக்க வல்லுனரை பணியிலமர்த்தியதோடு, அமெரிக்காவின் நாசா மற்றும் பல பல்கலைக்கழகங்களுடன் இணைந்து குவான்டம் ஆர்டிஃபிஷியல் லாப் என்ற ஆய்வகத்தைத் தொடங்கியது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Google to buy artificial intelligence company DeepMind

Google inc said on Sunday it had agreed to acquire privately held artificial intelligence company DeepMind Technologies Ltd.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X