கிரெடிட் கார்டு கடன் பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படி??

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: இன்றைய வாழ்க்கைமுறை நம்மை முற்றிலும் நவீனமயமாக்கி உள்ளது. செங்கல் போனில் இருந்து ஸ்மார்போன், நிலவுக்கு சுற்றுலா, பேஸ்புக்கில் காதல், இன்னும் பல. இப்படி பட்ட சூழலில் பணத்தை உபயோகிக்கும் முறையும், செலவு செய்யும் முறையும் முற்றிலுமாக மாறியுள்ளது

பத்து வருடங்கள் முன்பு எல்லாம் பர்ஸை திறந்தால் ரூபாய் நோட்டுகள் கத்தையாக இருக்கும் ஆனால் இப்போது அட்டைகள் கத்தையாக இருக்கிறது. அதுதாங்க டெபிட் கார்டு, கிரேட் கார்டு, ப்ரிவிலேஜ் கார்டு என பல அட்டைகள் உள்ளன. இத்தனை கார்டுகளை எப்படி சமாலிப்பது என்பது பெரிய கேள்வியாக உள்ளது. இதிலும் கிரேட் கார்டை சமாலிக்க தனி திறமை வேண்டும். உங்களின் கிரெடிட் கார்டு, கிரெடிட் கார்டு கடன்கள், லோன்களை பராமரிக்க இதோ உங்களுக்காக 10 டிப்ஸ்.

மாதம் இருமுறை பில்லை காட்டுங்கள்:

உங்கள் கிரெடிட் கார்டு இருப்பை கட்டுப்பாட்டில் வைத்திட இது ஒரு எளிய வழியாக உள்ளது. மேலும் பில் தொகையை குறிப்பிட்ட தேதிக்குள் கட்டிவிட்டால் உங்கள் கிரெடிட் புள்ளிகளும் அதிகரிக்கும். கிரெடிட் கார்டு பயன்படுத்தி செலவு செய்யும் தொகையை அடிக்கடி கட்டி விட்டால், கட்ட வேண்டிய தொகை குறைவாகவே இருக்கும்.

கிரெடிட் கார்டு கடன் பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படி??

நீங்கள் பயன்படுத்தும் சுழலும் கடனின் சதவீதம் தான் பயன்பாடு வீதம். ஒவ்வொரு கிரெடிட் கார்டு கணக்கிற்கு கூட்டு அடிப்படையில் இது கணக்கிடப்படுகிறது. சதவீதம் குறைவாக இருந்தால் உங்கள் கிரெடிட் புள்ளிகள் நன்றாக உள்ளது என்று பொருளாகும். அதிகப்படியான கிரெடிட் புள்ளிகளை வைத்திருப்பவர்கள், அதாவது 785 புள்ளிகளுக்கு மேல் இருக்கும் நபர்கள் கடனில் சராசரியாக 7 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துகின்றனர்.

சட்ட விரோதமாக கார்டை பயன்படுத்தல்

கிரெடிட் கார்டுகள், காந்த பட்டையுடன் கூடிய பிளாஸ்டிக் அட்டை வடிவு முதல் கைப்பேசியில் மெய்நிகர் வடிவு வரை பல வடிவங்களில் உள்ளது. ஒவ்வொரு வகை கார்டும் ஒவ்வொரு வகையில் பாதுகாப்பு அம்சங்களை கொண்டிருக்கும். ஒன்றை விட மற்றொன்று சிறப்பானதாகவும் இருக்கும்.

சட்டத்துக்கு விரோதமாக செயல்படுபவர்களால் காந்த பட்டை வடிவிலான கார்டுகளுக்கு ஆபத்து அதிகம். கார்டில் உள்ள பட்டையில் ஒளிந்திருக்கும் பாதுகாப்பான தகவல்கள் திருடப்பட்டு வேறு ஒரு கார்டில் அது பயன்படுத்தப்படும். EMV (யுரோபே, மாஸ்டர்கார்டு, விசா) சிப் அல்லது மைக்ரோ ப்ராசஸர் உள்ள கார்டுகளில் உள்ள பாதுகாப்பான தகவல்களை எடுக்க முடியாது. அதற்கு காரணம் கார்டில் உள்ள தகவல்களும் கார்டை பயன்படுத்தும் போது பரிமாறப்படும் தகவல்களும் ஒவ்வொரு முறையும் மறைக்கப்படும் (என்க்ரிப்ட்). அதே போல் மெய்நிகர் வகை கார்டுகளின் தகவல்களை திருடுவதும் இயலாத காரியம். அதற்கு காரணம் உங்கள் கார்டுகளை போய் எங்கேயும் போய் தேய்க்க வேண்டிய அவசியம் இல்லை.

மோசடிக்கு எதிராக அளிக்கப்படும் பாதுகாப்பு

உங்கள் கிரெடிட் கார்டு திருட்டு போனாலோ, தொலைந்தாலோ அல்லது அதன் தகவல்கள் திருடப்பட்டாலும் உங்களை பாதுகாக்க கூட்டிணையான சட்டம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும். ஃபேர் கிரெடிட் பில்லிங் சட்டத்தின் படி, திருட்டுப்போன அல்லது தொலைந்த கிரெடிட் கார்டுக்கு அதிகப்படியான மதிப்பு 5000 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உங்கள் கிரெடிட் கார்டு கணக்கின் தகவல்கள் திருடப்பட்டால் அதிகப்படியான இழப்புகள் 0-ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால் டெபிட் கார்டுகளுக்கு இவ்வகையான பாதுகாப்பு அளிக்கப்படுவதில்லை. அவை தொலைந்து போனாலோ அல்லது திருட்டுப் போனாலோ அந்த தகவலை நீங்கள் தெரிவிக்கும் வரை உங்களுக்கு எல்லையற்ற இழப்புகளே ஏற்படும்.

கிரெடிட் கார்டு கடன் பிரச்சனைகளை தவிர்ப்பது எப்படி??

கார்ப்பரேட் கார்டுகளை குருட்டுத்தனமாக வாங்காதீர்கள்:

உங்கள் நிறுவனம் உங்களுக்கு கார்ப்பரேட் கார்டுகளை கொடுத்தால், கார்டின் கொள்கைகளை பற்றி முழுவதுமாக கேட்க தவறாதீர்கள். நிறுவனங்கள் தங்களுடைய கிரெடிட் தரத்தை வைத்து, கார்ப்பரேட் கார்டுகளை உருவாக்கி, நிறுவன சம்பந்த செலவுகளுக்காக அதன் பணியாளர்களுக்கு அந்த கார்டுகளை வழங்குவார்கள். இந்த வகை கார்டு பயன்பாட்டு கட்டணங்களை நிறுவனமே செலுத்தும். கார்டை வழங்கியவர் அவ்வகையான கட்டணங்களை நிறுவனங்களிடம் தான் வசூல் செய்வார்.

இருப்பினும் அந்த கட்டணத்தை பணியாளர்களுக்கும் சேர்த்து கட்டுமாறு ஒரு கூட்டு உடன்படிக்கையை நிறுவனம் தேர்ந்தெடுக்கலாம். கார்ப்பரேட் கார்ட்டை வழங்குபவர், கார்டை வழங்கும் முன் பணியாளரின் சோஷியல் செக்யூரிட்டி எண்ணை பெற்றுக் கொள்வார். அப்படி செய்தால் கட்டணங்களுக்கு பணியாளர்களே பொறுப்பு. காலம் கடந்து பணம் செலுத்தினால் அது அந்த பணியாளரின் சொந்த கிரெடிட் அறிக்கையில் தான் சேரும். அது அவருடைய கிரெடிட் புள்ளிகளை வடுவாக பாதிக்கும்.

பணம்-திரும்புதல் சலுகையில் கைகாசை இழக்காதீர்கள்

கிரெடிட் கார்டில் நிலுவையில் இருக்கும் தொகையை மாதா மாதம் இழுத்துக் கொண்டே போனால் அதற்கு வட்டி கட்டி மாளாது. நீங்கள் சம்பாதிக்கும் பணத்தை சுலபமாக இழக்க இது ஒரு வழியாகும். உதாரணத்திற்கு, நீங்கள் 16% வட்டி வசூலிக்கப்படும், 1% பெரும்பாலான பணம்-திரும்புதல் கார்டு வகையை வைத்திருக்கிறீர்கள் என்று எடுத்துக் கொள்வோம். உங்கள் பில் தொகையான $500-ல், $100 மட்டும் கட்டியிருக்கிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம். அப்படியானால் உங்களிடம் $5 (1% X $100) திருப்பி கொடுக்க பட்டாலும், $.6.67 வட்டியாக வசூலிக்கப்படும். எந்த வகையில் பார்த்தாலும் இது உங்களுக்கு இழப்பு தான்.

அதனால் ஒவ்வொரு மாதம் வரும் பில் தொகையை முழுவதுமாக கட்டி விடுங்கள். அப்போது தான் பணம்-திரும்புதல் சலுகையை முழுவதுமாக அனுபவிக்க முடியும்.

இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தை நாளை பார்க்கலாம்..

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

10 can't miss credit card tips for 2014

10 tips for managing a credit card to save your credit score and lead a peaceful life without any worries of debt.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X